தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கே. கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் செய்’.
சுபாஷ் சந்திரபோஸ், நேகா, மனோபாலா, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கானா வினோதன், குப்பன் கணேசன் தயாரித்துள்ளனர்.
இதன் பாடல் & டீசர் வெளியீட்டு விழா, சென்னையிலுள்ள இளையராஜா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது.
படக்குழுவினருடன் இயக்குநர் பாரதிராஜா, பி.வாசு உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாரதிராஜா, இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டார்கள்.
இளையராஜா பேசும்போது…
“`எதிர்கால இளையராஜாக்களே, வருங்கால பாரதிராஜாக்களே என்று பேசுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு பாரதிராஜா, ஒரே இளையராஜாதான்.
எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர் தான். பி.வாசு, இளையராஜா ஒருவர் தான்.
எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை.
இந்தப் படத்தை எடுக்கக் கஷ்டப்பட்டோம் என்றார்கள். படத்தை எடுக்க கஷ்டப்படலாம். படத்தை பார்ப்பவர்கள்தான் கஷ்டப்படக் கூடாது.
இந்தப் படத்துக்கு ‘காதல் செய்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நான் ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கிறேன். எதை காதலிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கேன்”
இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க. 16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்.” என்றார் இளையராஜா.
பாரதிராஜா பேசும்போது,
“கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாகக் காதல் இருந்திருக்கும். இளையராஜாவுக்கும் இருந்திருக்கும். அது இல்லாவிட்டால் உலகம் இயங்காது.
காதல்தான் எல்லாருடைய மனதை வளப்படுத்துகிறது.
இந்தியாவில், தமிழகத்தின் பெரிய சொத்துகளில் ஒன்று இளையராஜா”
என்று பேசினார் பாரதிராஜா.
Ilaiyaraaja speech at Kadhal Sei audio launch