தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘கப்ஜா’.
இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார்.
வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கன்னட திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது.
இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருககிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே. ஜி எஃப் படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை மகேஷ் ரெட்டி கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என நான்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.
கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘கப்ஜா’ திரைப்படத்தின் டீசர், நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது.
இதனை நடிகர் உபேந்திராவின் ரசிகர்களும், நடிகர் கிச்சா சுதீப்பின் ரசிகர்களும், கன்னட திரையுலக ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
டீசருக்கு கிடைத்து வரும் பேராதரவை கண்டு உற்சாகமடைந்த படக்குழுவினர், ‘கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…
“ 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்த படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். ” என்றார்.
‘கே ஜி எஃப் 1 & 2 படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பங்களிப்பும் ஒரு காரணம். இந்நிலையில் ‘கப்ஜா’ படத்திற்கும் ரவி பஸ்ரூர் இசையமைத்திருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகம் புதிய வீரியத்துடன் வித்தியாசமான படைப்புகளை இந்திய அளவில் வழங்கி வருகிறது.
Kabzaa Movie Teaser Released
Rana Daggubati has come forward to release the teaser of ‘Kabzaa’ on the occasion of Kannada star Upendra’s Birthday!
The intense epic about Rise of Gangsters in India. Meet the dashing heroes @nimmaupendra & @KicchaSudeep amuse you with their charisma in #Kabzaa releasing in Kannada, Hindi, Tamil, Telugu, Malayalam, Oriya and Marathi.
Directed by @rchandru_movies
A @RaviBasrur Musical
#KabzaaTeaser is out now.
#SriSiddeshwaraEnterprises @MTBNagaraj @shriya1109 @aanandaaudio @SillyMonks @digitallynow @PRO_SVenkatesh @vamsikaka @UpadhyayHema @ProSrivenkatesh @vvipink