சூர்யா படத்தில் விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் அறிமுகம்

சூர்யா படத்தில் விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார்.

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார்.

மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார் மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.

படம் குறித்து சரோவ் சண்முகம் கூறியதாவது…

குழந்தைகளை மையப்படுத்திய குடும்ப படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை.

நடிகர் சூர்யா அவர்களின் 2D Entertainment நிறுவனம் எப்போதும் அழகான கருத்துள்ள குடும்ப படங்களை உலகளவிலான ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் தந்து வருகிறது.

அந்த வகையில் இப்படமும் மிக அழகான குடும்பங்கள் ரசி்கும் படமாக இருக்கும். மேலும் மாஸ்டர் ஆர்னவ் விஜையின் அறிமுகப்படத்தில் பனியாற்றுவது மிக்க மகிழ்ச்சி.

என்னைச் சுற்றிலும் நம்பிக்கை அலைகளும், நேர்மறைதன்மையும் நிரம்பி இருக்கிறது. எனவே படத்திலும் அது வெளிப்படும் என நம்புகிறேன்.

2D Entertainment நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியதாவது…

குழந்தைகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஆர்னவ் விஜயை அறிமுகபடுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

இப்படம் அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

இக்கதை ஒரு சிறுவனுக்கும் அவனது நாய்க்குட்டிக்கும் உள்ள அழகான உறவை அவர்களுக்கிடையேயான அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் படம் என்றார்.

இப்படத்தின் மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் நடிகர் பட்டாளம் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14 அன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது..

Arnav Vijay

arnav vijay

EpLUAOWVgAAWu6m

Actor Suriya’s banner 2D entertainment to launch Arun Vijay’s son Master Arnav Vijay in a Kids-centric movie

நடிகர் அஜித்தின் ‘வலிமை’..; அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் யுவன்

நடிகர் அஜித்தின் ‘வலிமை’..; அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு
நடிகர் அஜித்… இயக்குனர் வினோத்… தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் இணையும் படம் “வலிமை”.

இந்த படத்தில் தல அஜித் போலீசாக நடிக்கிறார்.

சமீப காலமாகவே வீரம், விஸ்வாசம், விவேகம் உள்ளிட்ட படங்களில் சால்ட் பெப்பர் லுக்கில் இருந்தார் அஜித்.

ஆனால் ‘வலிமை’ படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

இதில் நாயகியாக ஹூமா குரேஷி நடிக்க வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

நீண்ட நாட்களாக வலிமை அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆனால் படக்குழு எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் வலிமை குறித்து ஒரு போட்டோவை பதிவிட்டு அதில் வலிமை என்ற வார்த்தையை மட்டுமே பதிவிட்டுள்ளார் யுவன்.

அதில் படப் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தெரிகிறது.

Valimai music director Yuvan’s post on Instagram goes viral

சினிமாவில் நடிகராக இருக்கும் ரஜினி அரசியலில் இயக்குநராக வேண்டும்..; திருமாவளவன் வாழ்த்து

சினிமாவில் நடிகராக இருக்கும் ரஜினி அரசியலில் இயக்குநராக வேண்டும்..; திருமாவளவன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanth should be as Director in Politics says Thirumavalavanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று 12-12-2020 தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ரஜினிக்கு வாழ்த்து சொல்லாதவர்களே இல்லை என்னுமளவுக்கு அனைத்து துறையினரும் ரஜினியை வாழ்த்தினர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தன் ட்விட்டர் பதிவில் கூறியதாவது…

“பிறந்தநாள் காணும் திரு.ரஜினி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

நாயகன், திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும்; அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும் என்பதை திரு.ரஜினி நன்கு அறிவார்.

இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன்.”

Actor Rajinikanth should be as Director in Politics says Thirumavalavan

#HBDRajiniKanth
@rajinikanth https://t.co/blVE7Xowmt

எல்லாத்தையும் மாத்துவோம்…; ரஜினி பேசிய அரசியல் வசனத்தையும் பாடலாக்கிய விஜய் ஸ்ரீ

எல்லாத்தையும் மாத்துவோம்…; ரஜினி பேசிய அரசியல் வசனத்தையும் பாடலாக்கிய விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vijay Sris song in Powder movie with Rajinis political dialogue விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் “பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி)”.

இந்த படத்தில் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறார்.

இதனையடுத்து விஜய் ஸ்ரீ இயக்கி வரும் படத்திற்கு ‘பவுடர்’ என தலைப்பு வைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமா பிஆர்ஓ ‘நிகில் முருகனும் மற்றும் பத்திரிகையாளர் சதீஷ் முத்துவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பவுடர் படத்திற்காக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் ரஜினிகாந்த் பேசிய ‘எல்லாத்தையும் மாத்துவோம்’ என்ற வாக்கியத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

பாடல் குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி கூறியதாவது, ’ தாதா 87 படத்தில் ஒரு நிமிஷம் ‘தலை சூத்திடுச்சி ‘ பேசிய வசனம் மையமாக வைத்து நான் எழுதிய பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது .

தற்சமயம்

எல்லாத்தையும் மாத்துவோம்
எல்லாரையும் வாழவைப்போம்
எல்லாரையும் சேக்குறோம்
இனி ‘எல்லாத்தையும் மாத்துவோம் ‘

பவுடர் படத்திற்கு ரஜினிகாந்த் பேசிய வசனம் பொருத்தமாக இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் ரசிகனாக பாடல் எழுதியதில் மகிழ்ந்தேன் என கூறினார்

ஒளிப்பதிவு- ராஜா பாண்டி RP
கதை,திரைக்கதை , வசனம், இயக்கம், – விஜய்ஶ்ரீஜி

ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் 2021 பவுடர் திரையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Director Vijay Sris song in Powder movie with Rajinis political dialogue

சீனப்பெருஞ்சுவர் கட்டும் போது மக்கள் மரணம்..; கொரோனா பேரழிவின் போது புதிய பாராளுமன்றம் ஏன்.? மோடிக்கு கமல் கேள்வி

சீனப்பெருஞ்சுவர் கட்டும் போது மக்கள் மரணம்..; கொரோனா பேரழிவின் போது புதிய பாராளுமன்றம் ஏன்.? மோடிக்கு கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassans recent tweet about New Parliament buildingமத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு விரைவில் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டவுள்ளது.

தற்போது கொரோனா காலத்தில் மக்கள் மடிந்து வரும் வேளையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் தேவையா? என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவுகளில்…

“சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள்.

மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள்.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே…”

காசுக்காகக் கூடுவது கும்பல்;
லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி!

மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்..

#எதுவும்_தடையில்லை
#சீரமைப்போம்_தமிழகத்தை

Kamalhassans recent tweet about New Parliament building

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் சினிமா கனவை நிறைவேற்றும் ‘கால்ஸ்’

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் சினிமா கனவை நிறைவேற்றும் ‘கால்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Serial Actress Late Chithras first and last movie Calls Infinite Pictures நிறுவனம் தயாரித்த “கால்ஸ்” என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்தில் VJ சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது .

மேலும் முழுவீச்சில் Post Production பணிகள் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது,

கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி 15 டிசம்பர் First look release, ஜனவரி 1 2021 Trailer ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் அதற்குள் எதிர் பாராத விதமாக படத்தின் கதாநாயகி VJ சித்ரா காலமானார்.

அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்காக அனைவரது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

Serial Actress Late Chithras first and last movie Calls

More Articles
Follows