பிரபாஸ் – அமிதாப்புக்கு வில்லனாக கமல் மிரட்டும் ‘கல்கி 2898 AD’ பட ரிலீஸ் அப்டேட்

பிரபாஸ் – அமிதாப்புக்கு வில்லனாக கமல் மிரட்டும் ‘கல்கி 2898 AD’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.

கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி மொழியான சினிமாவை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அத்தகைய சினிமாவின் தொலைநோக்கு பார்வையாளரான இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதியை , தனித்துவமான அறிவிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் படக்குழுவினர் கவர்ந்திருக்கிறார்கள்.

அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்.. ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதி அளிக்கிறது.

வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு… பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இதன் போது தனித்துவமான மற்றும் அற்புதமான முறையில் படத்தின் வெளியீட்டை, இந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி என உற்சாகமாக அறிவித்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து பேசுகையில், ” வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் தேதியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ முதல் விருது பெற்ற ‘மகாநதி’ மற்றும் ‘மகரிஷி’ வரை இந்த தேதி எங்கள் வரலாற்றில் தனி இடத்தை பொறித்துள்ளது. இப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற திறமையான நட்சத்திர கலைஞர்களுடன் தயாரான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை குறிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை தொடரும்போது ..அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.” என்றார்

இதனிடையே ‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யும் போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை உருவாக்கி, பாராட்டைப் பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சூழ்ச்சிகள் நிறைந்த எதிர்கால உலகிற்கு அழைத்துச் செல்லவும் ‘கல்கி 2898 AD’ உறுதியளிக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழி திரைப்படமாகும். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட.. எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.

Kamal Amithap Prabhas starrer Kalki 2898AD movie release news

மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க இணைந்தனர் எழில் & விமல்

மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க இணைந்தனர் எழில் & விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா”, சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில்.

குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல்.. அதிரும் காமடி.. ஆக்‌ஷன்.. செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அப்படிபட்ட படமாக ஹிட் அடித்த படம்தான் “தேசிங்குராஜா”.

10 வருடம் கழித்து மீண்டும் “தேசிங்குராஜா” இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்கிறார் s.எழில்.

‘தேசிங்குராஜா’ வில் கதாநாயகனாக நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டும் இணைகிறார்கள்.

இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.

இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் s.எழில்.

இவரது படங்களில் காமடி சற்று தூக்கலாகவே இருக்கும். சூரி, யோகிபாபு என ஒரு காமடி பட்டாளமே நடித்திருப்பார்கள்.

இப்படத்திலும் அப்படிதான்… ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.

s.எழில் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் சங்கர்ராஜா , டி.இமான், சத்யா போன்ற பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய s.எழில், அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு ‘ஹிட் காம்போவாக’ வித்யாசாகருடன் மீண்டும் இதில் இணைகிறார்.

படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.

இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார்
ஒளிப்பதிவு: செல்வா.ஆர்
எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்
ஆர்ட்: சிவசங்கர்
வசனம்-முருகன்
ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik )
நடனம் : தினேஷ்
பாடல்கள்:யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்
பி.ஆர்.ஓ: ஜான்சன்

தேசிங்குராஜா-2

Ezhil and Vimal combo Desingu Raja 2 movie news

அரக்கோணத்தில் ஆரம்பமானது.; ‘ப்ளூ ஸ்டார்’ கொண்டாட்டமானது… – ஜெய்குமார்

அரக்கோணத்தில் ஆரம்பமானது.; ‘ப்ளூ ஸ்டார்’ கொண்டாட்டமானது… – ஜெய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “புளூஸ்டார்”

லெமன்லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம்.

அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு, அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் ‘புளூஸ்டார்’

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம்.

இந்தப்படம் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் , என அனைவருக்கும் இந்தப்படம் நெருக்கமான உணர்வைத்தரக்கூடியபடமாக இருக்கும்.

இந்தப்படத்திற்க்காக முழுக்க அரக்கோணம் ஊர் பசங்களாகவே நடிகர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தா பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.

எடிட்டர் செல்வா RK ,
படத்தின் கலை இயக்குனர் ஜெய்யரகு மற்றும் சண்டைபயிற்சி ஸ்டன்னர் சாம், அனைவரது பங்களிப்பும் மிகமுக்கியமானது.

படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் இந்தபடத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை சுற்றி கதை இருப்பதால் ஒளிப்பதிவுக்கென்று மெனக்கெட்டிருக்கிறார்.

இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.

ஜாலியான ஒரு படம் பண்ணியிருக்கிறோம்.
ஜனவரி 25 தியேட்டரில் வெளியாகிறது. சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறார்கள்.
என்கிறார் இயக்குனர் ஜெய்குமார்.

Blue Star will be bigger celebration says Jayakumar

முதல் வாரம் காதல்.. 2வது வாரம் ஆக்ஷன்.; இயக்குநர் விஜய் குறித்து அருண்விஜய்

முதல் வாரம் காதல்.. 2வது வாரம் ஆக்ஷன்.; இயக்குநர் விஜய் குறித்து அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)’ டிரெய்லர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது…

​​“எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பெயருக்காக நாங்கள் எந்த ஆக்‌ஷனையும் சேர்க்கவில்லை.

திரைக்கதைக்கு தேவைப்பட்டதுதான் எல்லாம். குறிப்பாக, லண்டனில் ஓடும் பேருந்தில் ஒரு ஆக்‌ஷன் பிளாக் ஷாட் உள்ளது. அதில், எனது தசைநார் கிழிந்தது. நான் நிறைய ஸ்டண்ட்களைச் செய்ய வேண்டியிருந்தது. படத்தின் சிறப்பு என்னவென்றால், திரைக்கதை முன்னேற முன்னேற ஆக்‌ஷன் காட்சிகளும் பெரிதாக அதிரடியாக இருக்கும்.

ஆக்‌ஷனில் எனது சிறந்த திறனை வெளிக்கொண்டு வர இந்தப்படம் மூலம் ஒரு தளம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இதயத்தைத் தூண்டும் காதல் கதைகள் மற்றும் உணர்ச்சிகரமான குடும்ப கதைகள் இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் விஜய். நடிகர் அருண் விஜய் அதுகுறித்து பேசியதாவது…

“நாங்கள் இருவரும் நிறைய கதைகளைப் பற்றி பேசியுள்ளோம். ஆரம்பத்தில், அவர் தனது பாணியில் ஒரு காதல் கதையை சொன்னார். ஒரு வாரம் கழித்து, உணர்ச்சிப்பூர்வமான பொழுதுபோக்குடன் கூடிய ஆக்‌ஷன் கதை சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார்.

திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு படத்தில் ஒன்றாக வேலை செய்வோம் என்று அவர் என்னிடம் கூறினார். ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் செண்டிமெண்ட் ஆகியவை இருக்கும்.

குறிப்பாக, என் கதாபாத்திரத்திற்கும் மகள் இயலுக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும்” என்றார்.

எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் இந்தப் படத்தில் உள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க, சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

இயக்குநர்: விஜய்,
ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ்: ஜி.கே.எம். தமிழ் குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன்,
தயாரிப்பாளர்கள்: எம். ராஜசேகர், எஸ். சுவாதி,
இணைத்தயாரிப்பு: சூர்ய வம்சி பிரசாத் கொத்தா-ஜீவன் கொத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ்குமார்,
கதை & திரைக்கதை: ஏ. மஹாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
படத்தொகுப்பு: ஆண்டனி,
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா

Arun Vijay speaks about Mission Chapter 1 and Director Vijay

தேசிய விருது பெற்ற பிளெஸி & பிரித்விராஜ் இணைந்த ‘தி கோட் லைஃப்’ பட போஸ்டரை வெளியிட்ட பிரபாஸ்

தேசிய விருது பெற்ற பிளெஸி & பிரித்விராஜ் இணைந்த ‘தி கோட் லைஃப்’ பட போஸ்டரை வெளியிட்ட பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வையை ’பாகுபலி’ மூலம் இந்திய ரசிகர்கள் எல்லோர் மனதையும் கவர்ந்த நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல்10, 2024 அன்று வெளியாகிறது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சர் என்கிறது படக்குழு. இதுபோன்ற சர்வைவல் அட்வென்சர் கதைகள் இந்திய சினிமாவில் அரிதாகவே வருகிறது. அதுவும் இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இந்தப் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை பிரித்விராஜூடன் ‘சலார்’ படத்தில் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ரெபல் ஸ்டார் பிரபால் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வலி, தீவிரம், நம்பிக்கை, தீர்மானம் என பலவற்றின் கலவையாக ஒரு ரக்டான லுக்கில் இந்த முதல் பார்வை போஸ்டரில் பிரித்விராஜ் உள்ளார்.

முதல் பார்வை குறித்தும் படம் பற்றியும் பிரித்விராஜ் சுகுமாரன் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நண்பரும், இந்திய திரை உலகின் ஒரு இன்றியமையாத சக்தியாக இருக்கும் பிரபாஸ் அவர்கள், என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ’தி கோட் லைஃப்’ திரைப்படம் உருவாக்குவதில் நிறைய சவால்கள் இருக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். இருந்தாலும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என் எல்லைகளைத் உடைத்து இதில் நடித்துள்ளேன். என் வாழ்நாளில் ஐந்து வருடங்களை இந்தப் படத்தின் நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். உடல்ரீதியாக பல மாற்றங்களை சந்திக்க வேண்டி இருந்ததாலும் இந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் முழுமையாக்குவது மட்டுமே என் இலக்காக இருந்தது. ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்களுக்கு இணையாக இந்த படம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப மிக பிரம்மாண்டமான காட்சி அமைப்பை இருக்க வேண்டும் என்பதற்காகவே சிரமப்பட்டு வெவ்வேறு சவாலான லொகேஷனை தேர்ந்தெடுத்து படமாக்கினோம். வெளிச்சத்துக்கு வராத சரித்திர நாயகர்களின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்பதில் உறுதி. படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியாகிய நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருக்கிறது. நாங்கள் இந்தப் படத்தை உருவாக்கி ரசித்த அளவுக்கு பார்வையாளர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும்.

இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

*விஷுவல் ரொமான்ஸ் பற்றி:*

விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது.

இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது சினிமா மீது விஷுவல் ரொமான்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இயக்குநர் பிளெஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார்.

ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸி பெற்றுள்ளார். பிளெஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.

Prithiviraj starrer The Goat Life first looked launched by Prabhas

உழவர் விருதுகள் : பொங்கல் அன்று மட்டும் விவசாயிகளை நினைக்கக் கூடாது… – கார்த்தி

உழவர் விருதுகள் : பொங்கல் அன்று மட்டும் விவசாயிகளை நினைக்கக் கூடாது… – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.

இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது.

இதில்…

• உழவர்களின் விளைப் பொருட்களுக்கு நல்ல விலை பெற்று தரும் மதுரை, திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் திருமிகு. வெங்கடேஷ் அவர்களுக்கு உழவர்கள் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்கான விருதும்

• விவசாயிகளை பற்றியும் அவர்கள் விளைப் பொருட்கள் பற்றியும் முக்கியமாக பெண் விவசாயிகள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வரும் திருமிகு. அபர்ணா கார்த்திகேயன் அவர்களுக்கு சிறந்த வேளாண் ஊடகவியலாளருக்கான விருதும்

• நிலமற்ற பெண்கள் ஒன்றிணைந்து தரிசு நிலத்தை ஒரு கூட்டுப் பண்ணையாக மாற்றிய பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்திற்கு சிறந்த உழவர் கூட்டமைப்புக்கான விருதும்

• பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராடி தனி குடியிருப்பும் அவர்களின் வேளாண் பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்க தொடர்ந்து பங்காற்றி வரும் பழங்குடி சமூகப் பெண் ராஜலெட்சுமி-க்கு, வனம் சார்ந்த மக்களின் வேளான் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்கான விருதும்

கார்த்தி

• பல்வேறு நீர் நிலைகளை சீரமைக்க பெரும் பங்காற்றிய திருமிகு. சித்ரவேல் அவர்களுக்கு நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்புக்கான விருது வழங்கும் கெளரவிக்கப்பட்து.
ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது..

“ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள்.

அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது.

சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம்.

இது 5-வது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது.

இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம்.

வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கெளரவப்படுத்துவதோடு, விவசாயத்திற்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும் எனவும் கூறினார்.

வேளாண் பிரச்சினைகள், வேளாண் தொழில்நுட்பங்கள், சிறுதானியங்கள், காலநிலை மாற்றங்கள், பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் என விவசாயத்தை பற்றியும் அதைச் சார்ந்த உணவு, தொழில்நுட்பங்கள் என ஒரு முழுமையான புரிதல் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இவ்விருதுகள் வழங்கும் விழா அமைந்தது.

இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா, ஜனவரி 15, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

கார்த்தி

Karthi speech at Uzhavar awards 2024 year event

More Articles
Follows