தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’ (Project K).
இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
மேலும், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
‘புராஜெக்ட் கே’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று அதிகாலை 1.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘கல்கி 2898- ஏடி’ (KALKI 2898-AD) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதில், சர்ப்ரைஸாக நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
Prabhas’s Project K movie Gets A New Title, Glimpse Video Out