இரும்புத்திரை-யில் ஆதார் அவமதிப்பு.?; விஷாலுக்கு போலீஸ் பாதுகாப்பு

இரும்புத்திரை-யில் ஆதார் அவமதிப்பு.?; விஷாலுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalமித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்துள்ள இரும்புத்திரை படம் இன்று வெளியானது.

இதில் ஆதார் அட்டை, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை குறித்து தவறான கருத்து உள்ளது என்றும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நாமக்கல்லைச் சேர்ந்த என்.நடராஜன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இந்து அமைப்புகளும் இரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. விஷால் வீட்டை முற்றுகையிட போவதாக இந்து அமைப்புகள் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி மரணம் தொடர்பான விசாரணை கோரிய மனு தள்ளுபடி

ஸ்ரீதேவி மரணம் தொடர்பான விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

srideviகடந்த பிப்ரவரி மாதத்தில், நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தார்.

அங்கு பிப்ரவரி 24ஆம் தேதி தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில், குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதுதொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய துபாய் போலீசார், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் சிங் என்பவர், நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அங்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இதுபோன்ற இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விசாரணை கோரும் சுனில் சிங் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

சீமராஜா சிவகார்த்திகேயனுக்கு புதிய லுக் கொடுக்கும் பொன்ராம்

சீமராஜா சிவகார்த்திகேயனுக்கு புதிய லுக் கொடுக்கும் பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seema raja stillவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து பொன்ராம் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம் சீமராஜா.

இப்படத்தில் சமந்தா, சிம்ரன், சூரி உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த கட்ட சூட்டிங்கை வருகிற மே 24-ஆம் தேதி தலக்கோணத்தில் படப்பிடிப்பை தொடரவிருக்கிறார்கள்.

இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம்.

இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார்.

ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகீறார்.

விஸ்வாசம் படத்தில் டபுள் அஜித்; சிவா கொடுக்கும் சர்ப்ரைஸ்

விஸ்வாசம் படத்தில் டபுள் அஜித்; சிவா கொடுக்கும் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasamஅஜித்-சிவா கூட்டணி இணையும் 4வது படம் விஸ்வாசம்,

சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இசையக்கிறார்.

இப்படத்திற்காக அஜித் நீண்ட வெண் தாடியை வளர்த்து வருகிறார். எனவே இப்படத்தில் இதுதான் கெட்டப் என கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த கெட் அப்புடன் இன்னொரு கேரக்டரும் உள்ளதாம்.

ஒரு அஜித், வெள்ளை தாடி, வெள்ளை முடியுடனும், மற்றொரு அஜித் கருப்பு தலை முடியுடன் வருகிறாராம்.

துப்பறிவாளனுக்கும் இரும்புத்திரைக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் விஷால்

துப்பறிவாளனுக்கும் இரும்புத்திரைக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalவிஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத்திரை படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜீன், சமந்தா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து விஷால் கூறியுள்ளதாவது…

துப்பறிவாளன் படத்தில் டிடெக்டிவ். இரும்பு திரையில் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளேன்.

அதில் கோவத்தை வெளிக்காட்டாமல் இருக்கும் கதாப்பாத்திரம், இதில் சமூக பிரச்சனைகளை கோபத்தின் மூலம் வொளிப்படையாக காட்டும் கதாப்பாத்திரம்.

இந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் சந்தித்த கதாப்பாத்திரமாக இருக்கும்.

துப்பறிவாளன் கதாப்பாத்திரத்தை எல்லோருமே பார்த்திருக்க மாட்டோம்.

இரும்புத்திரை உள்ள கதிரவன் கேரக்டர் அனைவருக்கும் நெருக்கமானது.

கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and mohan lalமலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலையாள நடிகர்கள் அவ்வளவாக தமிழ் படங்களில் நடிப்பதில்லை.

அதற்கு முக்கிய காரணம், அவர்களது பெரும்பாலான படங்கள் இங்கு தோல்வியிலேயே முடிக்கின்றன.

ஆனால் மோகன்லால், மம்மூட்டி, ஜெயராமன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கமல் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சில ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இதுவும் வெற்றிப் பெற்றது.

இப்போது கேவி. ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மோகன்லால் உடன் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி என சூர்யா தெரிவித்துள்ளார்.

More Articles
Follows