தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என மாறி மாறி உருவெடுக்கும் பார்த்திபன் அடுத்து, இயக்குனராக இருக்கிறார்.
அதற்கான அறிவிப்பையும் முன்பே தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை அறிவித்துவிட்டு கலைஞர்கள் தேர்வில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது தனது குரு கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவை இப்படத்திற்கு நாயகனாக்கி இருக்கிறார்.
நாயகியாக ‘என்னை அறிந்தால்’ மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்த, பார்வதி நாயர் நடிக்கிறார்.
பல வருடங்களாக ஒரு வெற்றிக்கு போராடி வரும் சாந்தனுவுக்கு உதவிட அவரை தேர்ந்தெடுத்தேன் என்றும், இது தனது குரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு தான் செய்யும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.