‘அஜித் படம் மாதிரி மத்தப் படங்கள் இல்ல..’ – பார்த்திபன்

ajith and parthibanநீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பிராமையா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் சிம்ரன், அருண்விஜய் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர்.

சத்யா இசையமைத்துள்ளார்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசியதாவது…

கோடிட்ட இடத்தை நிரப்ப வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

எனக்கு சினிமாவ தவிர வேற எதுவும் தெரியாது.

ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாம போனாலும் சரி நாளைக்கே 2000 செல்லாம போனாலும் சரி, எனக்கு தெரிஞ்சது இந்த சினிமா மட்டும்தான்.

இந்தப் படத்தை நான் க்ரவுடு ஃபண்ட் மூலமா பண்ணியிருக்கேன். இதுல இன்வெஸ்ட் பண்ண பத்து பேர் முன்வந்தாங்க.

நான் இப்போ சில படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். நல்ல சம்பளம் வருது.

ஆனாலும் படம் டைரக்ட் பண்ண ஆசை இன்னும் அப்படியே இருக்கு.

பண்டிகை, விசேஷ நாட்கள்ல பெரிய ஹீரோக்கள் படம் ரிலீஸ் ஆகறதுக்கு பதிலா, சின்ன படங்கள் அந்த நாட்கள்ல வந்தா நல்லா இருக்கும்.

ஏன்னா அஜித் படத்தை செவ்வாய்கிழமை ரிலீஸ் பண்ணாக் கூட நான் தியேட்டர்ல போய் பார்ப்பேன்.

ஆனா மத்தப்படங்க அப்படியில்லை. நல்ல நாள் கிடைச்சா படம் நல்லா ஓடும்.

இந்த படம் நல்லா வந்திருக்கு. டிசம்பர் முதல் வாரத்தில் பாடல் வெளியீடும், படத்தை 23ஆம் தேதியும் வெளியிட முடிவு பண்ணியிருக்கோம்.”

இவ்வாறு பேசினார் பார்த்திபன்.

Overall Rating : Not available

Related News

விஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை…
...Read More
இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சந்தனு…
...Read More
பொங்கல் தினத்தில் பைரவாவுடன் வர்றோம் என…
...Read More

Latest Post