தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சி3 படத்திற்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அந்தளவு வரவேற்பை பெற்றுள்ளதே காரணம் என சொல்லப்படுகிறது.
இது டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கபட்டது.
தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த நாளில் வெளியாக இருந்த ஜெயம் ரவியின் போகன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
இவையில்லாமல் சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா மற்றும் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களும் இதே நாளில் ரீலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதால் சில படங்கள் முந்திக் கொள்ளவோ, தள்ளிப் போகவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.