தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் பார்த்திபன் சமீப காலமாக நடிகராக பிஸியாகி உள்ளார்.
இந்நிலையில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனராக மாறியுள்ளார் பார்த்திபன்.
அப்படத்திற்கு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என பெயரிட்டுள்ளார். இப்படத்தை பார்த்திபன் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
A film with mistakes என சப் டைட்டில் வைத்தும் இருக்கிறார்.
இப்படம் குறித்து பார்த்திபன் கூறியதாவது…
“நானும், தம்பி ராமையாவும் இப்படத்தில் நடிக்க இருக்கிறோம். மற்ற கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.
நாயகன் மற்றும் நாயகி தேர்வு நடைபெறுகிறது. சத்யா இசையமைக்க, பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்” என்றார்.