Blur Star & Singapore Saloon Team திரையில் மோதல்.. தரையில் நட்பு.!

Blur Star & Singapore Saloon Team திரையில் மோதல்.. தரையில் நட்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர் நட்புக்காக விளையாடிய கிரிக்கெட்

இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும், நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

Blur Star - Singapore Saloon

ஒரே நேரத்தில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடுவது தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

இரண்டு படங்களும் வெற்றியடைய படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

நிகழ்வில் பா. இரஞ்சித், ஆர்.ஜே.பாலாஜி, அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் செல்வா, மற்றும் இரண்டு படங்களின் குழுவினரும் கலந்துகொண்டனர்.

Blur Star - Singapore Saloon

Blur Star vs Singapore Saloon team cricket match

மீண்டும் ஹிட்டடிக்க பெரும் பொருட்செலவில் இணையும் ‘கட்டா குஸ்தி’ கூட்டணி

மீண்டும் ஹிட்டடிக்க பெரும் பொருட்செலவில் இணையும் ‘கட்டா குஸ்தி’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் ‘கட்டா குஸ்தி’ கூட்டணி.

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது.

முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது.

குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “கட்டா குஸ்தி” திரைப்படம், கடந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது.

இப்படத்தின் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது.

மேலும் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் கடந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய வெற்றியைத் தந்த, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் என மாறுபட்ட களங்களில், தரமான வெற்றிப்படங்களைத் தந்து வரும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது படைப்பாக, இப்படம் உருவாகிறது.

மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும்.

இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

விஷ்ணு விஷால்

Gutta Kushi Vishnu Vishal and Chella Ayyavu teams up again

‘விடுதலை – II’ ரிலீஸ் அப்டேட் & ‘விடுதலை – I’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்

‘விடுதலை – II’ ரிலீஸ் அப்டேட் & ‘விடுதலை – I’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி – சூரி நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை I & II’.

குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.

ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’ திரையிடப்படத் தேர்வாகியுள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது.

விடுதலை I

இப்போது, இது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதாவது புனேவில் நடைபெற்ற புனே சர்வதேச திரைப்பட விழா (PIFF) 2024-ல் சிறப்புத் திரையிடலின் போது ’விடுதலை1’ சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மார்ச் 31, 2023 அன்று வெளியான ’விடுதலை- பார்ட்1’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. சூரி & விஜய் சேதுபதி திறமையான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பணிகள் என இந்தப் படத்தில் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது.

இந்த வருடம் 2024, கோடை விடுமுறையில் ’விடுதலை- பார்ட் 2’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

விடுதலை I

Soori and Vijaysethupathi starring Viduthalai 2 release update

கர்ப்பிணியான மிர்னா மிரட்டல்.; ரஜினி மருமகள் பற்றி விக்ரம் ஸ்ரீதரன்

கர்ப்பிணியான மிர்னா மிரட்டல்.; ரஜினி மருமகள் பற்றி விக்ரம் ஸ்ரீதரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் மிர்னா. அவர் தற்போது நடித்துள்ள படம் ‘பெர்த்மார்க்’.

அதன் விவரம் வருமாறு…

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெர்த் மார்க்’.

‘பெர்த் மார்க்’ படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.

படம் குறித்தும் ஜெனி கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது…

“ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார்.

பெர்த்மார்க்

கடுமையாக உழைக்கக்கூடியவர் அவர். என்ன சீன் எடுக்கப் போகிறோம், என்னக் காட்சி எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். படப்பிடிப்பு என்றால் கதைக்கான மூடுக்கு உடனே வந்துவிடுவார்.

ஜெனிக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். மலையாளத்தில் ‘பிக் பிரதர்’, தமிழில் ‘புர்கா’, ‘ஜெயிலர்’ தெலுங்கில் ‘நா சாமி ரங்கா’, ‘உக்ரம்’ போன்றப் படங்களில் நடித்துள்ளார்” என்றார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது…

“நான் மேலே குறிப்பிட்ட இந்தப் படங்களில் பார்க்காத மிர்னாவை நிச்சயம் ‘பெர்த் மார்க்’ படத்தில் பார்க்கலாம்.

இயக்குநர், ஹீரோ என நாங்கள் எல்லோரும் எந்த அளவிற்கு உழைப்பைக் கொடுத்துள்ளோமோ அந்த அளவிற்கு மிர்னாவும் கொடுத்துள்ளார்.

ஏழு மாதம், ஒன்பது மாத கர்ப்பம் என்பதால் கனமான புரோஸ்தெடிக் செய்து கொடுத்தோம். அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, சிறப்பாக நடித்தார். அவருடைய நடிப்பு இந்த படத்தில் மேலும் மெருகேறி இருக்கும். மக்களுக்கு நிச்சயம் அவரது நடிப்பு பிடிக்கும்” என்றார்.

பெர்த்மார்க்

*நடிகர்கள்:*..

ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலகஹ்மி

*தொழில்நுட்பக்குழு:*

இயக்குநர்: விக்ரம் ஸ்ரீதரன்,
எழுத்து மற்றும் தயாரிப்பு: ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்,
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்,
ஒளிப்பதிவாளர்: உதய் தங்கவேல்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ்,
படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி கண்ணத்,
கூடுதல் திரைக்கதை எழுத்தாளர்: அனுசுயா வாசுதேவன்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமாஸ்,
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்,
கலரிஸ்ட்/ டிஐ: பிரதீக் மகேஷ்,
விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஃபிக்ஸ் இட் இன் போஸ்ட் ஸ்டுடியோ,
தயாரிப்பு நிர்வாகி: ரவிக்குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஸ்ரீராம் சிவராமன்,
லைன் புரொட்யூசர்: கார்த்தி வேல்,
புரொஸ்தெடிக்ஸ்: வினீஷ் விஜயன்,
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே,
உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்.

பெர்த்மார்க்

Jailer to Birthmark Actress Mirnaa gets a big leap as heroine

காரைக்காலில் படமான அந்தோணியின் ‘சைரன்’ பிப்ரவரி 16 முதல் ஒலிக்கும்

காரைக்காலில் படமான அந்தோணியின் ‘சைரன்’ பிப்ரவரி 16 முதல் ஒலிக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் படமான “சைரன்” படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘சைரன்’ படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் டீசரில் வெளியான ஜெயம் ரவியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், பெரும் வரவேற்பை குவித்தது.

ஜெயம் ரவி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு பாத்திரங்களில் தோன்றுகிறார்.

ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம்ரவி பரோலில் வெளியில் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டிய டீசர் கதை பற்றிய சிறு அறிமுகத்தை தந்தது.

படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெய்லரை, விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது. இதுவரையிலான ஜெயம்ரவி படங்களிலிருந்து மாறுபட்டதாகத் தெரியும் சைரன் படத்தின் மீது இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சைரன்

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் ‘சைரன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு காஞ்சிபுரம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

சைரன்

Siren movie set to release on 16th Feb 2024

குறளரசனுக்கு பிறந்த குழந்தை..; பெரியப்பா ஆனார் சிலம்பரசன்.!

குறளரசனுக்கு பிறந்த குழந்தை..; பெரியப்பா ஆனார் சிலம்பரசன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் தம்பி குரளரசன். இவர் சில படங்களை குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

சிம்பு – நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

குறளரசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தந்தை டி.ராஜேந்தர்-தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

‘குறளரசன் சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார்.

” அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர். நானுமே அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என மத வேறுபாடில்லாமல் அனைத்து ஸ்தலங்களுக்கும் போய் வருகிறவன். எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ கூட அனைத்து மதங்களின் குறியீடுகளைக் கொண்டதாகத்தான் இருக்கும் “- என அப்போது இது தொடர்பாகப் பேசியிருந்தார் டி.ஆர்.

இஸ்லாம் மதத்தைத் தழுவியதைத் தொடர்ந்து அந்த மதத்தைச் சேர்ந்த நபீலா என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு இவருக்குத் திருமணமும் நடைபெற்றது.

இந்நிலையில் தாய்மை அடைந்திருந்த நபீலா கடந்த சில தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் டி.ஆர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.

Simbu brother Kuralarasan blessed with boy baby

More Articles
Follows