தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழுச்சியில் நாயகன் அசோக்செல்வன் பேசும் போது…
இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெசல், ரொம்பவே பெர்ஷனலும் கூட.. ஏன் என்று கேட்டால் இந்தக் கதையா..?? இல்லை இக்கதையில் இருக்கும் அரக்கோணம் மக்களா.. ?? அவர்களின் வாழ்க்கை என் வாழ்க்கையோடு ஒத்துப் போனதா..? என்று சொல்லத் தெரியவில்லை.
வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் யாரும் அரவணைத்து ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டாரக்ளா.. என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ப்ளு ஸ்டார் நம்பிக்கையை கொடுத்து, ஜெயிக்கிறோம் என்கின்ற உத்வேகத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது.
‘ப்ளூ ஸ்டார்’ படம் எனக்கு அத்தனையையும் கொடுத்திருக்கிறது. நான் வாழ்ந்த வாழ்க்கையை திரையில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மனைவியை கொடுத்திருக்கிறது.
சிலர் பேசுவதற்கும் செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. பா.ரஞ்சித் அவர்கள் என்ன பேசுகிறாரோ.. அது போலவே நடப்பவர். அந்த மாதிரியான மனிதர்களை நான் பார்த்ததில்லை.
அவரை ‘சூது கவ்வும்’ சக்சஸ் பார்ட்டியில் முதன் முறையாக பார்த்தேன். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார்.
அன்று எப்படி இருந்தாரோ இன்றும் அதே போல் தான் இருக்கிறார். கோவிந்த் வசந்தா எங்கள் வாழ்க்கைகான மிகச் சிறந்த ஆல்பத்தைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். எந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் நான் இவ்வளவு பேசியதில்லை.
இப்படத்தில் நான் பேசுகிறேன் என்றால், இப்படத்தை நான் மிகவும் ஸ்பெஷலாக உணர்வதால் தான். எனக்கே சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை நான் போன ஜென்மத்தில் அரக்கோணத்தில் பிறந்திருப்பேனோ என்று.
என்னுடன் நடித்த சாந்தனு மற்றும் ப்ருத்வி இருவருமே எனக்கு சகோதரகள் போன்றவர்கள். சக்திவேலன் கூறியது போல் நாங்கள் இருவரும் மூன்றாவது வெற்றிக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த வெற்றியை ப்ளூ ஸ்டார் கண்டிப்பாக கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும், சக்திவேலன் அவர்களுக்கும் இருக்கிறது. எப்போதும் போல் பத்திரிக்கை நண்பர்களான உங்களின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என்று பேசினார்.
Ashok selvan speech at Blue Star audio launch