விஜய்க்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய்சேதுபதி

விஜய்க்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathiவிஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

இத்துடன் நிறைய படங்கள் மோதும் என அறிவிக்கப்பட்டாலும் பின்னர் அமைதியாக இருந்துவிட்டன.

இறுதியாக ஜனவரி 13ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்த படமும் போட்டியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளனர்.

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாவது இங்கே கவனிக்கத்தக்கது.

‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு

‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuஜல்லிக்கட்டை இந்தாண்டு பொங்கலுக்கு நடத்தியாக வேண்டும் என தமிழக மாணவர்கள் பல்வேறு இடங்களை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றாலும் சில இடங்களில் போலீசார் லத்திசார்ஜ் மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக பேச சிம்பு பத்திரிகையாளர்களை அழைத்துள்ளார்.

மேலும் லத்திசார்ஜ் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதயம் வலிக்கிறது. உங்கள் சகோதரன் நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எனவே சிம்பு ரசிகர் ஒருவர், நீங்கள் இப்படி பேசினால் உங்கள் மீது எல்லா வழக்குகளையும் போடுவார்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு சிம்பு ஒப்புக் கொண்டு ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ‘பைரவா’வுக்கு கிடைத்த பெருமை

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ‘பைரவா’வுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa Vijay‘பைரவா’ படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு உருவாகி வருவதால் அதனை கொண்டாட விஜய் ரசிகர்கள் பல மடங்கு உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் பைரவா படத்திற்காக 150அடி உயர விஜய் கட்அவுட்டை வைத்துள்ளனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சிறப்பு அனுமதியுடன் இந்த கட்அவுட்டை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சினிமா வரலாற்றிலேயே இந்த அளவு உயரத்திற்கும் எந்த நடிகருக்கும் கட் அவுட் வைத்தது இல்லை என கூறப்படுகிறது.

‘பைரவா’ படத்திற்கு தடை… விஜய்க்கு அடுத்த தலைவலி

‘பைரவா’ படத்திற்கு தடை… விஜய்க்கு அடுத்த தலைவலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaaஅண்மை காலமாக தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் வழக்கு, தடை என பல செய்திகள் வெளியாகின்றன.

இதில் விஜய் படங்களுக்கு கூடுதலாகவே எதிர்ப்புகள் வருகின்றன.

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த பொருள்தாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாய் ஒன்றை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ஒரு அனிமேஷன் கதையை தயாராக வைத்திருக்கிறாராம்.

மேலும் அதை பைரவா என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் விஜய் படத்துக்கும் பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ளதால், விஜயா புரொடக்ஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்காததால், தனது படத் தலைப்பான பைரவாவை பயன்படுத்த தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், மனுதாரர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், எதிர் மனுதாரரின் கருத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாதென தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கில் பைரவா படத்தயாரிப்பாளர் இன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

Bairavaa movie title case at High Court

‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா?

‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijayதமிழ் சினிமாவில் என்றைக்குமே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது ரஜினிதான்.

அவருக்கு அடுத்த இடத்தில் மற்ற நடிகர்கள் மாறி மாறி வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கையில் கபாலி படம் கிட்டதட்ட 55 திரையரங்குகளில் வெளியானதாம்.

தற்போது பைரவா படத்திற்கு 52 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாளை பைரவா வெளியாகவுள்ள நிலையில் கபாலியின் எண்ணிக்கையை முந்துவாரா? என்பதை பார்ப்போம்.

Will Bairavaa beat Kabali theatre counts at Srilanka

தமிழர்களின் பவரை காட்டுவோம்.. சீறும் சிம்பு

தமிழர்களின் பவரை காட்டுவோம்.. சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuதமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் தாமாவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

நாம் தமிழர்களின் நிறத்தை அவர்களுக்கு காட்டுவோம். உண்மையான தமிழர் என்ன செய்வார்? என்பதை காட்டுவோம்.

விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

STR ‏@iam_str 8m8 minutes ago
They have shown us their colour. Now we Tamils will show them our colour & unity. Wait & see what real tamils can do !! #PressMeet shortly .

Simbu going to meet Press Shortly to support Jallikattu

More Articles
Follows