டிசம்பர் 23இல் மோதும் பார்த்திபன்-சசிகுமார்-ஜெயம் ரவி

டிசம்பர் 23இல் மோதும் பார்த்திபன்-சசிகுமார்-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy jayam ravi sasikumar parthibanலட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி, அர்விந்த்சாமி இணைந்து நடித்துள்ள படம் போகன்.

இமான் இசையமைத்துள்ள இதன் பாடல்கள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து, பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் பாடல்கள் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இவ்விரண்டு படங்களை அடுத்து சசிகுமார் தயாரித்து நடித்துள்ள பலே வெள்ளையத்தேவா படத்தின் பாடல்கள் டிசம்பர் 5ல் வெளியாகிறது.

தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தை பிரகாஷ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த 3 படங்களும் டிசம்பர் 23ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

Bogan, Balle Vellaiyathevaa and Koditta Idangalai Nirappuga movies clash on December 23rd 2016

மீண்டும் ‘டேக் இட் ஊர்வசி’யை கையில் எடுக்கும் ஏஆர். ரஹ்மான்

மீண்டும் ‘டேக் இட் ஊர்வசி’யை கையில் எடுக்கும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ar rahman musicஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பிடித்த பாடல்களை பட்டியல் இட்டால் அதற்கு முடிவே இருக்காது.

அந்த பட்டியலில் இடம் பெற தகுதியான பாடல்களில் ஒன்றுதான் டேக் இட் ஊர்வசி பாடல்.

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இப்பாடல் இடம்பெற்றது.

இப்பாடலை மிகப்பிரம்மாண்டமாக படமாக்கி இருந்தார் ஷங்கர்.

இஸ்லாமிய பாடலாக தொடங்கி வேறு ஒரு தளத்திற்கு நம்மை இப்பாடல் எடுத்துச் சென்றது.

இந்நிலையில், தற்போது இப்பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

‘டேக் இட் ஈஸி’ ஊர்வசி பாடலின் சரணத்தை ஒரு கச்சேரிக்காக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

நீங்களும் இதற்கு வரிகளை கொடுக்கலாம்.

ஆனால்,  ட்ரம்ப், ரூபாய் நோட்டு, ஹிலரி பிரச்னையெல்லாம் இல்லாமல் வரிகள் இருத்தல் அவசியம்” என கேட்டுள்ளார்.

Dear friends, I’m trying to rearrange ‘Take it Easy Urvasi’ for a performance and wish to update the Charanams.

Feel free to contribute.. Ofcourse please do leave out and avoid any reference to Hilary Clinton, Donald Trump or the currency situation for now and try to come up with something interesting & humorous in the same scaling of the original Tamil version..

ar rahman going to rearrange Take it Easy Urvasi song

மீண்டும் விஜய் மற்றும் அட்லியுடன் இணையும் நடிகை?

மீண்டும் விஜய் மற்றும் அட்லியுடன் இணையும் நடிகை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayantharaவிஜய்யுடன் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் நயன்தாரா.

அதனைத் தொடர்ந்து வில்லு படத்தில் இணைந்து நடித்தார்.

அதுபோல் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் நாயகியாக நடித்தார் நயன்தாரா.

இந்நிலையில், தெறியை தொடர்ந்து விஜய்-அட்லி இணையவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

இதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

nayanthara may join with atlee’s vijay 61

விமல்-தனுஷை அடுத்து மாதவனை இயக்கும் சற்குணம்

விமல்-தனுஷை அடுத்து மாதவனை இயக்கும் சற்குணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalavani director sargunam joins with madhavanவிமல் நடித்த களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சற்குணம்.

அதனையடுத்து தனுஷின் நையாண்டி, அதர்வாவின் சண்டிவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இந்நிலையில் களவாணி 2 படத்தை இவர் இயக்கப்போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால் இவர் அடுத்து மாதவன் இயக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

kalavani director sargunam joins with madhavan

வடிவேலுவை பாலோ செய்யும் அம்பானி சங்கர்

வடிவேலுவை பாலோ செய்யும் அம்பானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu ambani sankarலிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ஜி படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சங்கர்.

தொடந்து சிம்புவின் வல்லவன், கருப்ப சாமி குத்தகைதாரர், குசேலன், பட்டத்துயானை போன்ற படங்களில் சிறு வேடத்தில் காமெடியனாக வலம் வந்தார்.

கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருந்தார்.

இதனையடுத்து, தனது பெயரை அம்பானி சங்கர் என்று மாற்றிக் கொண்டு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான பட்டதாரி படத்தில் ஐந்து நாயர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

வடிவேலுதான் இவருக்கு ரோல் மாடலாம்.

அவரைப் போல காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே தனது லட்சியம்” என்கிறார் அம்பானி சங்கர்.

இவர் வடிவேலுடன் இணைந்தும் காமெடி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிவிலக்கு கொடுப்பதால் ரசிகர்களுக்கு என்ன பயன்..? கோர்ட் கேள்வி

வரிவிலக்கு கொடுப்பதால் ரசிகர்களுக்கு என்ன பயன்..? கோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fans celebrationதமிழில் நேரடியாக தயாராகும் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசின் வரி விலக்கு கிடைக்கும்.

இதில் சில நிபந்தனைகள் இருந்தாலும், இதுவொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆனால், தமிழில் பெயர் வைப்பதால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பயன் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது-

இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

கடந்த பத்தாண்டுகளில் 2000க்கும் அதிகமான படங்களுக்கு; வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படங்களுக்கு கட்டணத்தை 30 சதவீதம் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்த விதிமுறைகளில் பாராபட்சம் காட்டக்கூடாது.

ஆனால் தமிழில் பெயர் வைப்பதால், தமிழ் வளர்ச்சிக்கோ, படம் பார்க்கும் ரசிகர்களுக்கோ பலன் இல்லை என்றும் தெரிவித்தார்.

இவ்வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டது.

More Articles
Follows