விஜய்யுடன் மோதினாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சாந்தனு

விஜய்யுடன் மோதினாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Shaanthanuவிஜய் நடித்த பைரவா படம் 2017 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள், புரியாத புதிர் மற்றும் குற்றம் 23 உள்ளிட்ட படங்களும் மோத களத்தில் உள்ளன.

இந்நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருந்த பார்த்திபன் சாந்தனு இணைந்து நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படமும் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போய்விட்டது.

இதுகுறித்து விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு கூறியுள்ளதாவது…

“விஜய் படத்துடன் மோத முடியாது. ஆனால் பைரவா படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் படத்திற்கு வாருங்கள்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

சபாஷ் சாந்தனு…

மீண்டும் விஜய்சேதுபதியுடன் சூப்பர் ஹிட் டைரக்டர்

மீண்டும் விஜய்சேதுபதியுடன் சூப்பர் ஹிட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi again joins with director Gokul for new projectவிஜய்சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை கோகுல் இயக்கியிருந்தார்.

இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்த ‘காஷ்மோரா’ படத்தை இயக்கினார்.

இந்தாண்டு (2016) தீபாவளிக்கு வெளியான் இப்படமும் கோகுலுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையவிருக்கிறாராம் கோகுல்.

ஆனால் இது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகம் அல்லாது வேறு ஒரு களமாக இருக்கும் எனத் தெரிவத்துள்ளார் கோகுல்.

2017ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இப்பட பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

100 ரூபாயில் 5 பேர் சினிமா பார்க்க ‘மதுரை டூ தேனி – 2’ குழு புதிய முயற்சி!

100 ரூபாயில் 5 பேர் சினிமா பார்க்க ‘மதுரை டூ தேனி – 2’ குழு புதிய முயற்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madurai to Theni 2தமிழ் சினிமாவில் ‘எந்திரன்’ ‘சிங்கம்’, சென்னை 28, ‘வேலையில்லா பட்டதாரி’ என மெகா ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவது சீஸனாகி விட்டது.

அந்த வரிசையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து ‘மதுரை டூ தேனி வழி : ஆண்டிப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகமாக போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படம் தான் ‘மதுரை டூ தேனி – 2’.

இந்த இரண்டாம் பாகத்தில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் அந்த படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதையே காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஷ்யங்களோடு தரவிருக்கிறது இந்தப்படம்.

மேலும் தமிழ்சினிமாவில் முதல் முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஒரு மிகப்பெரிய முயற்சியை நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தின் மூலமாக செய்யவிருக்கிறது.

ஆமாம், வருகிற மே மாதம் வெளியாகவிருக்கும் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம்.

தொடர்ந்து தமிழில் குறைந்த செலவில் தயாராகும் தரமான படங்களை இதே கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.பி.எஸ்.குகன் D.F.S.C.F.Tech இயக்குகிறார். பாடல்களை செல்வராஜா எழுத, சரவண கணேஷ் இசையமைக்கிறார்.

நடனத்தை தீனா- இருசன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர்.ஜி. ஆனந்த் செய்கிறார். டெரிக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை கவனிக்கிறார். பாலு – ஜெய் கணேஷ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கின்றனர்.

போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ். ஜானகி சோணைமுத்து தயாரிக்கிறார். இணை தயாரிப்பு ஏ.வெங்கடேஷ்வரி, ஜி. ஜானகி, சத்யவாணி அனந்தகிருஷ்ணன்.

நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.

2016-ஆம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த டாப் 12 டிரைலர்கள்

2016-ஆம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த டாப் 12 டிரைலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Favourite Trailer and Teasers of 2016ஒரு படம் வெளியாவதற்கு முன் அப்படம் பற்றிய முன்னோட்டமே ட்ரைலர்.

இவையே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகளவில் உருவாக்குகிறது.

இது குறைந்தது இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடியது. ஆனால் சமீப காலமாக இந்த ட்ரெய்லர் 1 நிமிடத்திற்குள் குறைந்து டீசர் என ஆகி விட்டது.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து டீசர், ட்ரைலர்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

1. கபாலி
2. தெறி
3. இருமுகன்
4. 24
5. பைரவா (2017 பொங்கல் ரிலீஸ்)
6. ரெமோ
7. கொடி
8. அச்சம் என்பது மடமையடா
9. ஜோக்கர்
10. சைத்தான்
11. மிருதன்
12. மெட்ரோ

Tamil Cinema Favourite Trailer and Teasers of 2016

‘பாட்ஷா’வை பார்க்க சென்னை வரும் ஜப்பானிய ரசிகர்கள்

‘பாட்ஷா’வை பார்க்க சென்னை வரும் ஜப்பானிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Baasha posterசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா ரிலீஸ் ஆகி கிட்டதட்ட 20 வருடங்களை கடந்துவிட்டது.

ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்றளவும் குறையவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி வருகிற 2017 ஜனவரி 5ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

எனவே பாட்ஷா படத்தை திரையில் காண சென்னைக்கு வரவிருக்கிறார்களாம் ரஜினியின் தீவிர ஜப்பானிய ரசிகர்கள்.

இதனைத் தொடர்ந்து ரஜினியினை நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்களாம்.

மேலும் ஜப்பானிய மொழியில் இப்படத்தை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Japan Rajini fans arriving to Chennai to Watch Baashaa Digital Version movie

சூர்யா பட இயக்குநருடன் இணைந்த குஷ்பூ-அனிருத்-கீர்த்தி சுரேஷ்

சூர்யா பட இயக்குநருடன் இணைந்த குஷ்பூ-அனிருத்-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushboo Keerthy Suresh Anirudhமூன்று வேடங்களில் சூர்யா நடித்த படம் 24. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.

இவர் தற்போது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 25வது படத்தை இயக்கவிருக்கிறார்.

அனிருத் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் குஷ்பூ நடிக்கவிருக்கிறாராம்.

இதனை குஷ்பூவே உறுதி செய்துள்ளார்.

சரியாக 9 வருடங்களுக்கு முன்பு ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் குஷ்பூ என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows