தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவ்வப்போது நேரடி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையில் தமிழ் படங்களின் கேரள உரிமையையும் பெற்று விநியோகம் செய்து வருகிறார்.
தற்போது மிக எதிர்பார்ப்புக்குள்ளாகிய ரஜினியின் கபாலி படத்தின் விநியோகத்தையும் பெற்றுள்ளாராம்.
கேரளாவில் மட்டும் 160க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் ரூ. 8.5 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரஜினியும் மோகன்லாலும் நல்ல ப்ரெண்ட்ஸ் என்பதால் கேரளாவில் நடைபெறும் புரமோஷன்களிலும் ரஜினியை கலந்துகொள்ள கேட்டுக் கொண்டாராம் லால் சேட்டன்.
ரஜினியும் சரி என்று சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.