தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி… இப்படத்தை பார்க்க போகிறவர்களும் பார்க்கவே கூடாது என முடிவெடுத்தவர்களும் இப்படத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை.
அப்படியொரு கபாலி காய்ச்சல் இந்திய சினிமாவை தாக்கியுள்ளது.
ஒரு சிலர் புகழ்ந்து வந்தாலும், சிலர் திருட்டு விசிடி பார்ப்போம் என கபாலியை கலாய்த்து வருகின்றனர்.
நாம் நெட்டில் பார்த்து ரசித்த சில தொகுப்புகளை இங்கே பகிர்கிறோம்…
- கபாலி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது… இணையதள சேவை முடங்கியது.
- நா வந்துட்டன்னு சொல்லு; திரும்பி வந்துட்டன்னு சொல்லு..! கபாலி டிக்கெட் 800 ரூபான்னு சொன்னதும் டிக்கெட்டுக்கு காசு இல்லாம அப்டியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு…. கபாலி டா… காசு இல்லடாஆ..
- போற போக்க பாத்தா “கபாலி” பட டிக்கெட் வாங்க SBI, ICICI, HDFC பேங்கெல்லாம் லோன் கொடுப்பாங்க போல!!! போதும்பா உங்க அட்ராசிட்டி.
- மாசக் கடைசியில #கபாலி படத்தை ரிலீஸ்செய்து என்னைபோன்ற நடுத்தர ரசிகர்களை சோதிக்கிறார் தாணு.
- தியேட்டர்ல கபாலி பாக்கும்போது கத்தாதீங்க… விசிடியில பாக்கும்போது ஒரே சத்தமா இருக்கு.
- நெட்டுல “கபாலி” பத்தி பேசக் கூடாது கோர்ட் ஆர்டர் போட்டா நல்லாயிருக்கும். தாங்க முடியல.
- கபாலி படத்துக்கு லீவு கொடுக்கிறீங்க. ஆனால் PF&PENSION போராட்டத்திற்கு லீவு கொடுக்க யோசிக்க மாட்டீங்களா?
- கபாலி ஹிட் ஆச்சுன்னா ரஜினிதான் காரணம். ஆனா ப்ளாப் ஆன அதுக்கு ரஞ்சித்துத்தான் காரணம். #எஸ்கேப்பிசம்
- கபாலி டிக்கெட்டுக்கு ரசிகர்கள் விரும்பியே அதிக கட்டணம் கொடுப்பதால் #கபாலி படத்தை தடை செய்ய முடியாது – நீதிபதி | ரசிகர்கள் விரும்பியே திருட்டு விசிடி வாங்குவதால்….. இப்ப என்ன செய்வீங்க..?
- கபாலி ஓப்பனிங் ஷோ பாக்காமல் ஒரு தமிழனா எதுக்கு சார் உயிரோடு இருக்கனும்!!
- கபாலி டிக்கெட் 300 ரூபாயா? ரொம்ப கம்மியா இருந்தா? என்ன கெத்து? ரேட்ட ஏத்துங்கப்பா
- கபாலி டிக்கெட் கன்பார்ம் ஆச்சுன்னு எவனாச்சும் போட்டோ போட்டா காண்டா ஆயிடுவேன்.
- என்னது கபாலி டிக்கெட் ரூ. 1500…? ஒரு மூட்டை அரிசி எடுத்துப் போட்டா 1 மாசத்த ஓட்டிலாம். கறியா எடுத்தாலும் 3 நாள் சாப்பிடலாம்… நல்லதா ஒரு பேன்ட், சர்ட் எடுத்துக்கலாம்… பெட்ரோல் போட்டா 1 மாசத்த ஓட்டிலாம். அட போனுக்கு ரீசார்ஜ் பண்ணா 3 மாசத்த ஓட்டிலாமே.
- கபாலி டிக்கெட் கிடைச்சாச்சு சொல்றவங்க… தமிழ்நாட்டின் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது போல் சுத்திட்டு இருக்காங்க… என்ன கொடுமை சார் இது.
- திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என்று சொல்லும் நடிகர்களே, உங்களுக்கு சமூக பொறுப்பு இருந்தால் தியேட்டர் உரிமையாளரிடம் டிக்கெட் விலையை அரசு நிர்ணயித்தப்படி கொடுக்கச் சொல்ல முடியுமா?
- நடிகர்களே நீங்கள் சரியாக இருங்கள்; மக்களாகிய நாங்களே திருட்டு விசிடியை ஒழிப்போம்..
- கபாலி டிக்கெட் 2000 ரூபாய்க்கு விக்குதாம்! பார்லிமென்ட்லே இது பற்றி யாராவது கேள்வி கேட்பாங்களா?
- நடிகர்களே, தயாரிப்பாளர்களே… இயக்குனர்களே… அரசாங்கம் நிர்ணயித்த 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொல்லுங்கள். பைக் பார்க்கிங் 50, கார் பார்க்கிங் 100 போன்ற கொள்ளையைக் கட்டுப்படுத்துங்கள். 10 ரூபாய் பெறாத பாப்கார்னை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்; அதைக் கேளுங்கள். இதையெல்லாம் தட்டிக்கேளுங்கள். இந்த தொல்லைகள் இல்லையென்றால் மக்கள் விரும்பி திரையரங்கம் வந்து சினிமா பார்ப்பார்கள்