கபாலியால் தள்ளிப் போன ஜி.வி. பிரகாஷின் படம்

கபாலியால் தள்ளிப் போன ஜி.வி. பிரகாஷின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash imagesநிவின்பாலி, இஷா தல்வார் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த படம் ‘தட்டத்தின் மறயத்து’. வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கை ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கிறார்.

இதில் அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணு பெற்றுள்ளார்.

இன்று இப்படம் வெளியாகவிருந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தாணு தள்ளி வைத்துள்ளார்.

தமிழகத்தின் பல திரையரங்குகளில் இன்னும் கபாலி ஓடிக்கொண்டிப்பதால், தியேட்டர் கிடைக்காத காரணத்தால், இப்படத்தை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் பற்றி ரெமோ இயக்குனர் பாக்யராஜ்…

சிவகார்த்திகேயன் பற்றி ரெமோ இயக்குனர் பாக்யராஜ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyanதன் அறிமுக படத்திலேயே திதைக்கதையில் ரிஸ்க் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருப்பவர் பாக்யராஜ் கண்ணன்.

ரெமோ படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி ஆகியோருடன் பணி புரிந்தது பற்றி தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் இவர்.

அதில் கூறியுள்ளதாவது…

“சிவா சார் படப்பிடிப்பிற்கு ஒரு நாள் கூட லேட்டாக வந்தது இல்லை.

அவர் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் வந்து மேக்கப் போட்டு காத்திருப்பார். நான் 8 மணிக்கு சூட்டிங்குக்கு 7 மணிக்குதான் வருவேன்.

இரவு 10 மணியானாலும் ஒரு நாள் கூட முகம் சுளித்து நடித்ததே இல்லை சிவா.

பெண் வேடத்திற்காக 9 கிலோ வரை எடையை குறைத்திருக்கிறார்.

பி.சி சார் என் படத்துக்கு ஒளிப்பதிவாளர் என்பதே என் பாக்கியம்தான். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

ரசூல் சார் 3 ஸ்பீக்கர், 2 மைக் உள்ளிட்டவைகளை வைத்து சிவாவின் பெண் குரலை ஒலிப்பதிவு செய்துள்ளார்.”

இவ்வாறு பாக்யராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தல 57 சூட்டிங் தொடங்கியது… கூடவே வியாபாரமும் தொடங்கியது

தல 57 சூட்டிங் தொடங்கியது… கூடவே வியாபாரமும் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala 57 movie stillsவேதாளம் படத்திற்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

தற்காலிகமாக தல 57 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.

இதன் கூடவே இப்படத்தின் ஓவர்சீஸ் வியாபாரமும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இது உறுதியான தகவலா? என்று தெரியாவிட்டாலும் அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சமீபகாலமாக அஜித்தின் ஆரம்பம், வீரம், வேதாளம் ஆகிய படங்கள் தொடர் வெற்றி பெற்று வருவதால் இந்த புதிய படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் 60 படத்தில் இணைந்த மூன்றாவது நாயகி

விஜய் 60 படத்தில் இணைந்த மூன்றாவது நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 60 movie stillsபரதன் இயக்கத்தில் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இதில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவதாக ஒரு நடிகையும் இணைந்துள்ளாராம்.

தமிழில் ‘டூரிங் டாக்கீஸ்’ மற்றும் ‘ஓய்’ ஆகிய படங்களில் நடித்த பாப்ரி கோஷ் (Papri ghosh) நடிக்கிறார்.

இவர் ஒரு வங்காள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்குடன் விரைவில் வெளியாக உள்ளது.

எம்ஜிஆர் பட ஸ்டைலில் உருவாகும் விஜய்-அஜித் படங்கள்

எம்ஜிஆர் பட ஸ்டைலில் உருவாகும் விஜய்-அஜித் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and ajithஎம்ஜிஆர் நடித்த, எங்க வீட்டு பிள்ளை பட பாணியில் விஜய் 60 படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என பெயரிடப்படவுள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் பட பாணியில் அஜித்தின் 57வது படமாக உருவாகிறதாம்.

இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியுள்ளதாவது…

இதில் இண்டர்போல் அதிகாரியாக அஜித் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை 70% வெளிநாடுகளிலும் 30% இந்தியாவிலும் படமாக்க உள்ளோம்.

அனிருத் இசையில் தீம் மியூசிக் தயாராகிவிட்டது. மற்ற நான்கு பாடல்கள் விரைவில் தயாராகும்” என்றார்.

கபாலி வசூல் இத்தனை கோடியா..? இதுல எக்ஸ்ட்ரா வசூல் எப்படி?

கபாலி வசூல் இத்தனை கோடியா..? இதுல எக்ஸ்ட்ரா வசூல் எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali stillsஉலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி வசூல் வேட்டை செய்து வருகிறார் ரஜினியின் கபாலி.

முதல் வார வசூலில் மட்டும் ரூ. 310 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

அதன்பின்னரும் தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், இதுவரை ரூ 400 கோடியை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் விளம்பரங்களின் மூலம் ரூ 100 கோடியை பெற்று தந்துள்ளதாம்.

எனவே இதுவரை ரூ 500 கோடி வசூலை தொட்டுவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

More Articles
Follows