தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் என்ற பட்டத்தை பெற்றவர் சுந்தர் சி.
ரஜினி, கமல், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார் சுந்தர்.
2006-ம் ஆண்டு ‘தலைநகரம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘தலைநகரம் 2’ என்ற பெயரில் இதன் தொடர்ச்சியான 2வது பாகம் உருவாகியுள்ளது.
‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’, ‘இருட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ரைட் என்ற கேரக்டரில் நாயகனாக நடித்துள்ளார் சுந்தர் சி.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இதில் கலைப்புலி தாணு, நடிகர்கள் பரத், பிரேம், இயக்குனர்கள் சசி, பேரரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்த ட்ரைலரில் அடிதடி வன்முறை கவர்ச்சி என அனைத்தும் தூக்கலாகவே உள்ளது.
இந்த விழாவில் சுந்தர் சி பேசும் போது..
“நான் பொதுவாக படத்தின் வெற்றி விழாக்களை கொண்டாடுவது இல்லை. படம் பேசட்டும். நான் எதற்காக பேச வேண்டும் என்று நினைப்பேன்.
ஆனால் நானும் துரையும் இதற்கு முன்பு இணைந்த ‘இருட்டு’ படம் ஹிந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அது யாருக்கும் தெரியவில்லை. வெற்றி விழா நடத்தி இருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே இனி வெற்றி விழாக்களை கொண்டாட இருக்கிறோம்.
இந்தப் படத்தில் எனக்கு மனைவி (நாயகி) உடன் பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன. ஆனால் அந்த காட்சிகள் படமாக்கப்படவில்லை. ஏன் என்று இயக்குனர் துரையிடம் கேட்டேன்.
அதற்கு ‘தலைநகரம் 3’ படத்தில் காட்சிகள் வைப்பேன் என்றார். நான் அரண்மனை படத்தை 1 2 3 என எடுத்து வருகிறேன்.
அது போல தலைநகரம் 2 3 4 படங்களை துரை எடுப்பார். அவருக்கு இந்த படத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது” என பேசினார் சுந்தர் சி.
Sundar C talks about Thalainagaram 3 and Durai