2018 படம் பார்த்துட்டு ரஜினி விஜய் அஜித் அழைக்க மாட்டார்களா.? என காத்திருக்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

2018 படம் பார்த்துட்டு ரஜினி விஜய் அஜித் அழைக்க மாட்டார்களா.? என காத்திருக்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் ‘2018’ என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவையே புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்தையும் அதை கேரள மக்கள் எப்படி எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது..

இந்தப்படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ளார்.

நிவின்பாலி, நஸ்ரியா இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஒசானா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ஒரு முத்தச்சி கதா, சாரா’ஸ் என மூன்று படங்களை இயக்கியுள்ளார். அந்த மூன்று படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு நிஜ நிகழ்வை மையப்படுத்தி இந்த 2018 படத்தை எடுத்துள்ளார்.

இந்தப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை குறையாத வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு அதிக வசூல் சாதனை செய்த மோகன்லாலின் புலிமுருகன், லூசிபர் போன்ற படங்களின் சாதனைகளையும் முறியடித்து 200 கோடி வசூலை எட்டியுள்ளது.

மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியான இந்தப்படம் கேரளாவை போலவே இங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில் இந்தப்படம் உருவான விதம் குறித்தும், இந்த வெற்றி குறித்தும் நம்மிடம் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

*சினிமா மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது ?*

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சினிமா மீது ஒரு ஈர்ப்பு உருவாகி விட்டது. பின்னர் சினிமாவில் நுழைந்ததும் இயக்குனர் வினீத் சீனிவாசனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினேன்.. அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் இருந்ததால் இயக்குனரான முதல் படத்திலேயே நிவின்பாலி, வினீத் சீனிவாசன் ஆகியோரை நடிக்க வைத்து இயக்குனராக மாறினேன்.

*உங்களது முந்தைய மூன்று படங்களின் ஜானரில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு படத்தை உருவாக்கவேண்டும் என நினைத்தது ஏன் ?*

வேறு ஜானரில் பண்ணுகிறோம் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஸ்கிரிப்ட் நன்றாக இருக்க வேண்டும்.. மக்களுக்கு பிடிக்க வேண்டும்.. அவர்கள் அந்த கதையுடன் எளிதாக தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.. இது இருந்தாலே போதும்.. இந்த 2018 கதையில் இந்த மூன்றுமே இருந்தது..

2018

*குறிப்பாக இந்த 2018 படத்தை எடுக்க உங்களை தூண்டியது எது ?*

2018ல் பெரும் மழை பெய்து வெள்ளம் வந்தபோது என்னுடைய வண்டியும் கூட அதில் போய்விட்டது. அதன்பிறகு மக்கள் ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்த சமயத்தில் தான், வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இது பற்றி ஒரு தன்னம்பிக்கை வீடியோ எடுக்கலாம் என முடிவெடுத்தோம்.

வெள்ளம் வந்த சமயத்தில் அது எதையும் நான் நேரில் பார்க்கவில்லை.. இதற்காக சேனல்களில், யூடியூப்பில் வந்த வீடியோக்களை, செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தேன். அவற்றை எல்லாம் பார்க்கும்போது தான் இந்த பேரிடர் தருணத்திலும் பொதுமக்களும் அதிகாரிகளும் இந்த மீட்பு பணியில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் ஈடுபட்ட ஒரு உண்மைக் கதை இருப்பது தெரிய வந்தது. அந்த கதையை இந்த உலகத்திற்கே தெரியவைக்க வேண்டும் என்று தான் இதனை படமாகவே எடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

*கதை, அதை சொல்லும் விதம் என மலையாளத் திரையுலகம் டாப் லெவலில் இருந்தாலும் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளிலும் இந்தப்படத்தில் அசத்தியிருந்தீர்கள்.. எப்படி சாத்தியமானது ?*

இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்காக முன்கூட்டியே மிகத்தெளிவாக திட்டமிட்டு இதற்காக மினியச்சர் செய்து, ஸ்டோரி போர்ட் உருவாக்கி இருந்தோம். அது இந்த படத்தில் மிக சரியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதனால் தான் இந்த படத்தில் எது நிஜமான காட்சி எது கிராபிக்ஸ் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர மற்றவை எல்லாம் பெரும்பாலும் நிஜமாகவே படமாக்கப்பட்டன. லூசிபர், மாமாங்கம் போன்ற படங்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றிய மோகன்தாஸ் இந்த பணிகளுக்கு தலைமை ஏற்று அத்தனை வேலைகளையும் சிறப்பாக கையாண்டார்

*இந்த மாதிரி படங்களுக்கு ப்ரீ புரொடக்சன் ஒர்க் ரொம்பவே முக்கியம் இந்தப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தார்கள். அவர்களை சமரசம் பண்ண வேண்டிய சிரமம் ஏதும் இருந்ததா ?*

இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது யாருமே தயங்கவில்லை. காரணம் ஒரு பக்கம் ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் இது கேரளாவின் ஒற்றுமையை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு படம் என்பதால் கூடுதல் அர்ப்பணிப்புடன் நடித்தார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வெவ்வேறு படங்களில் நடித்து வந்தார்கள். இருந்தாலும் இந்த படத்திற்காக தாங்களாகவே நேரத்தை ஒதுக்கி நடித்தார்கள்.

இந்த படத்தில் நடித்தவர்களில் நடிகர் டொவினோ தாமஸ் தான் அதிகப்படியாக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேல் ஒதுக்கி இதில் நடிக்க வேண்டி இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவர் நீருக்குள்ளேயே இருக்கும்படி காட்சிகள் அதிகம் இருந்தன. இந்த படத்திற்காக அனைவருமே கஷ்டப்பட்டு இருந்தார்கள் என்றாலும் அதிக நாட்கள் ஒதுக்கிய வகையில் இதில் டொவினோ தாமஸ் இன்னும் கொஞ்சம் அதிகம் சிரமங்களை பட்டு நடித்தார்.

*பட்ஜெட்டில் மட்டுமல்லாமல், இந்த படத்தை தயாரிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் தயாரிப்பாளர் புரிந்துகொண்டனரா..? அவர்களை எப்படி கன்வின்ஸ் செய்தீர்கள் ?*

மலையாள சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்திற்கு இவ்வளவுதான் என ஒரு பட்ஜெட் இருக்கிறது. அதை தாண்டி படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்ததால், இதற்காகவே பிளான் ஏ, பிளான் பி, பிளான்சி என மாற்றுத்திட்டங்களை எல்லாம் வைத்து தேவைப்பட்ட இடங்களில் அவற்றை செயல்படுத்தினேன். இதனால் நான் தீர்மானித்திருந்த பட்ஜெட்டிற்குள் இந்த படத்தை எடுக்க முடிந்தது.

2018

*இந்த படம் இந்த அளவுக்கு வசூலில் சாதனை படைக்கும் என நினைத்தீர்களா..?*

படம் எடுத்த போதும் சரி, வெளியான போதும் சரி.. கேரளாவில் உள்ள மூன்றரை கோடி மக்களும் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. மற்றபடி இது எவ்வளவு வசூலிக்கும் என்றோ இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்றோ அந்த சமயத்தில் நான் நினைக்கவே இல்லை. 200 கோடி வசூல் என்பதை விட மக்கள் அனைவரிடமும் இந்தப்படம் சென்று சேர்ந்து இருக்கிறது என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. அது மட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல படங்கள் வரவேண்டும்.. மலையாள திரை உலகின் எல்லை இன்னும் விரிவடைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.

*இந்த படத்துக்கு உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு யார்கிட்டே இருந்து ?*

மம்முட்டி இந்த படத்தை பார்த்துவிட்டு நிஜமாகவே ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருக்கிறது. எப்படி இந்த படத்தை எடுத்தாய் என ஆச்சரியப்பட்டார். ஒவ்வொரு டெக்னிக்கல் விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். நிறைய பாராட்டுக்கள் வந்தாலும் மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர் பாசில் என்னை அழைத்து பாராட்டியதுடன் நீங்கள் தான் இந்த மலையாள சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் என்று கூறினார். நான் அதை ஒப்புக்கொள்ள மறுத்தபோது, இந்த மாதிரி நிறைய நட்சத்திரங்களை வைத்து பாடல்கள், சண்டை என கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து இவ்வளவு பெரிய அளவிற்கு வெற்றி பெற செய்துள்ளீர்கள் என்பதால் தான் நான் அப்படி கூறினேன் என்று சொன்னார்.

*அல்போன்ஸ் புத்ரன், வினீத் சீனிவாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நீங்கள் தமிழில் படம் பண்ண விரும்புகிறீர்களா ?*

2018 படத்தை பார்த்துவிட்டு தமிழகத்திலிருந்து ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்கள். பிரபலங்கள் என யாரிடமும் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை.

தமிழ் சினிமாவில் யாராவது ஒரு நடிகர் இந்த படத்தை பார்த்துவிட்டு வாடா இப்படி ஒரு படம் எடுப்போம் என்று அழைப்பு விடுப்பார்களா என்று காத்திருக்கிறேன்.. இங்கே தமிழில் படம் பண்ண வேண்டும்.. அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் இதில் ஒன்றாவது நிறைவேறும் என நம்புகிறேன்.

*இடையில் டைரக்சனில் இருந்து ஒதுங்கியது போல நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தீர்களே.. ?*
எனக்கு நடிப்பு, டைரக்ஷன் இரண்டுமே பிடிக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்ததால் அப்படியே பயணப்பட ஆரம்பித்து விட்டேன். ஆனால் நடிப்பு என்பது எனக்கு ஒரு வேலை மட்டும் தான்.. டைரக்ஷன் என்பது என்னுடைய வேட்கை.

*உங்களது அடுத்த படம் ?*

அடுத்து எனது முதல் பட ஹீரோ நிவின்பாலியுடன் இணைந்து படம் பண்ணும் திட்டம் இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் .

2018

2018 movie director Jude Antony Joseph waiting for Rajini Vijay Ajith call sheets

விஜய் ஆண்டனி இயக்கி நடித்த ‘பிச்சைக்காரன் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி

விஜய் ஆண்டனி இயக்கி நடித்த ‘பிச்சைக்காரன் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி நடித்திருந்த படம் ‘பிச்சைக்காரன் 2’.

இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒய்.ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

இப்படம் கடந்த மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது.

மேலும் இப்படம் ரூ.32+ கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘பிச்சைக்காரன் 2’ படம் வருகிற 18-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.

Vijay Antony starrer Pichaikkaran 2 set for its OTT premiere on 18th June

கட்டை விரல் அகற்றம்.. மீண்டும் ஆப்ரேசன்..; திருமணம் செய்துக் கொள்ளாத பாவா லட்சுமணனின் பரிதாப நிலை

கட்டை விரல் அகற்றம்.. மீண்டும் ஆப்ரேசன்..; திருமணம் செய்துக் கொள்ளாத பாவா லட்சுமணனின் பரிதாப நிலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தாலும் சிலரது பெயர் கூட நாம் நினைவுக்கு வராது.. சிலரது பெயர்கள் கூட நமக்கு தெரியாது.

அவர்கள் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன கேரக்டரில் மட்டுமே வந்து கொண்டு இருப்பார்கள்.

இவரை அந்த படத்தில் பார்த்திருக்கிறோம். இந்த படத்தை பார்த்திருக்கிறோமே என்று பலர் சொல்வதைக் கேட்டு இருப்போம்.

அப்படியான ஒரு நடிகர் தான் பாவா லட்சுமணன். லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ படத்தில் மம்முட்டி வீட்டில் வேலை செய்யும் பவா லட்சுமணன் என்றால் பலருக்கும் நிச்சயம் அறிந்திருக்கும்.

அதுபோல வடிவேல் உடன் பல படங்களில் நடித்திருக்கிறார். ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வக்கீல் வண்டு முருகனுக்கு ஜூனியர் அட்வகேட்டாக இவரும் அல்வா வாசுவும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய ஒரு காலில் கட்டை விரல் மற்றும் அதற்கடுத்த இரண்டு விரல்கள் அகற்ற வேண்டிய கட்டாயத்தில் விரல்கள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னொரு காலிலும் கட்டை விரல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம்.

திருமணம் செய்துக் கொள்ளாமலேயே பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்து வரும் லட்சுமணன், சினிமாவில் பல படங்களில் புரொடக்ஷன் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார்.

லட்சுமணனை நேரில் சந்தித்து மேற்கொண்டு சிகிச்சைக்காக அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்.

சினிமா பிரபலங்கள் பலர் அவரை பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்கள் சொல்வது, ” பாவா லட்சுமணன் கள்ளம், கபடம் இல்லாத குழந்தையாக பேசி சிரிக்கிறார். சில நெருக்கமானவர்களை பார்க்கும்போது பொங்கி அழுது விடுகிறாராம் லட்சுமணன்.

அவர் விரைவில் நலம் பெற்று மீண்டும் சினிமாவுக்கு திரும்பி நம்மை நகைச்சுவையால் மகிழ்விக்க காத்திருப்போம்..

Comedy Actor Bava Lakshmanan treatment updates

புற்றுநோயால் தனுஷ் பட நடிகர் மரணம்..! மருத்துவ உதவி மற்றும் இறுதி சடங்கு செய்த பிரபலம்..

புற்றுநோயால் தனுஷ் பட நடிகர் மரணம்..! மருத்துவ உதவி மற்றும் இறுதி சடங்கு செய்த பிரபலம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படகளில் துணை நடிகராக நடித்து வந்தவர் பிரபு.

இவர் நடிகர் தனுஷ் நடித்துள்ள படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

ஆதரவற்ற நிலையில் இருந்த அவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.

இந்நிலையில், துணை நடிகர் பிரபு காலமானார்.

அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை நடிகர் பிரபுவிற்கு மருத்துவ உதவிகள் செய்த இசையமைப்பாளர் டி.இமான் தான் பிரபுவின் இறுதி சடங்குகளை செய்தார்.

பிறகு, துணை நடிகர் பிரபு உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

டி.இமான்

supporting actor prabhu passes away

பணம் பெற்றவர் முதலாளி.. கொடுத்தவர் தொழிலாளி.; இப்படியாச்சே நிலைமை.! – கே.ராஜன்

பணம் பெற்றவர் முதலாளி.. கொடுத்தவர் தொழிலாளி.; இப்படியாச்சே நிலைமை.! – கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்…

”ஈடாட்டம் என்றால் என்ன? பொருள் என படக் குழுவினரிடம் கேட்டேன். நமக்கு போராட்டம் தெரியும். அதன் பிறகு சூதாட்டம் தெரியும். அதற்கு நான் செல்வதில்லை. சிலம்பாட்டம் தெரியும். இந்த ஆட்டங்களை எல்லாம் தெரிந்து கொண்ட எனக்கு,’ ஈடாட்டம்’ என்றால் என்ன? என்று தெரியவில்லை.

அப்போது அவர்கள், ”பொறாமை.. வஞ்சகம்.. வஞ்சனை.. பொல்லாப்பு..” என அர்த்தம் சொன்னார்கள்.

மனதில் வஞ்சனை வைத்திருப்பவர்கள் மனிதர்களே இல்லை. மனிதருக்குரிய பண்பும் அல்ல. மனிதநேயம்.. மனித தர்மம்… மனிதாபிமானம்.. இந்த மூன்றும் யாருக்கு இருக்கிறதோ… அவர்கள் தான் மாமனிதன்.

தான் மட்டும் வாழ வேண்டும் என நினைப்பது தவறில்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும். நமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவதும் தவறல்ல. இது ஆத்மா. இதை கடந்து.. நானும் வாழ வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களும், என்னை நம்பி இருப்பவர்களும் வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் புண்ணிய ஆத்மாக்கள்.

ஆனால் என்னைப் பற்றி கவலை இல்லை. நாட்டை வாழ வைக்க வேண்டும்.. மக்களை வாழவைப்பதற்காக என்ன தியாகம் வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பது.. மக்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.. பெருந்தலைவர் காமராஜரை போன்ற மகாத்மாக்கள். நாம் மகாத்மாவாக வேண்டும். இந்த காலத்தில் மகாத்மாவாக முடியாது. ஆனால் புண்ணியத்மா ஆகலாம்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். குடியால் கெட்டுப்போன ..அதனால் தடுமாறுகிற ஒரு இளைஞனின் கதையை அற்புதமாக சொல்லி இருக்கிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மகனான ஸ்ரீ ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்த விழாவிற்கு வருகை தந்து, என்னை சந்தித்து ‘வாங்க முதலாளி’ என அன்புடன் அழைத்தார். ஆனால் தற்போது தயாரிப்பாளராகிய நாங்கள் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கிறோமோ… அவர்கள் முதலாளிகளாகிவிடுகிறார்கள்.

நாம் தொழிலாளிகளாகி விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களையும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இணைந்து தான் உருவாக்குகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் இயக்குநர் ஈசன் நன்றி கடன்பட்டிருக்கிறார். தன்னுடைய பேச்சில் வளர்ப்புத் தாயை மட்டும் குறிப்பிடாமல்…, இப்படத்தை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்த கஜபதியையும் அவர் குறிப்பிட்டார்.

சிறிய பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்கள் அனைத்தும் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசும், மாநில அரசும் திட்டம் தீட்டி அவர்களை காக்க வேண்டும்.

இதனை ஒரு வேண்டுகோளாக முன் வைக்கிறேன். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்கு வருமான வரி துறையினரின் சோதனையை அனுமதிக்கிற மத்திய அரசு.. தோல்வி அடைந்து காணாமல் போன தயாரிப்பாளரை பற்றியும் விசாரிக்க வேண்டும். மத்திய அரசு காட்டில் உள்ள வனவிலங்குகளை கண்டறிவதற்காக திட்டம் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது நல்ல திட்டம் தான். விலங்குகளை காப்பாற்றுகிற இந்த திட்டத்தை போல்…, 15 ஆண்டு காலமாக திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர் நிலை என்ன? அவர்களின் குடும்பம் என்னானது? அது தொடர்பாகவும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசும் திரைப்படத்துறை சார்பாக வரி வருவாயை ஈட்டுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு ஒரு தொழிலாக அங்கீகரிக்கவில்லை.

‘ஈடாட்டம்’ வெறியாட்டமாக மாறாமல்.. வெற்றியாட்டமாக மாறி.. மக்களின் பேராதரவை பெற்று, வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

ஈடாட்டம்

Producers life status worst but Actors were happy says K Rajan

கடன் கொடுக்கும் வரை கடவுள்.. கொடுத்த பின்… ; நன்றி கெட்ட உலகமிது – பேரரசு

கடன் கொடுக்கும் வரை கடவுள்.. கொடுத்த பின்… ; நன்றி கெட்ட உலகமிது – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்…

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜான் பீட்டரிடம் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். ஒரு பாடகர் இருக்கிறார். இயக்குநர் இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இப்படி அவரிடம் பல முகங்கள் இருக்கிறது.

அவரிடம் இருக்கும் நல்ல மனசின் காரணமாகத்தான் சிக்கலான தருணத்தில் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீயை சீரியல்களில் பார்த்திருக்கிறேன். அருமையாக நடிக்கிறாரே…! இவர் ஏன் சினிமாவுக்கு வரவில்லை? என யோசித்திருக்கிறேன்.

அவரை சந்தித்து கேட்டபோது, ‘வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார். ஆனால் அதன் பிறகு தான் அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகன் என்றே எனக்கு தெரியும்.

தந்தையின் பெயரை சொல்லி வாய்ப்பு கேட்காமல், தன் சுய முயற்சியால் இந்த உயரத்தை அவர் தொட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஸ்ரீயிடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை பயன்படுத்திக் கொண்டு, அவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும். ஏதோ ஒரு தடை இருக்கிறதாக நினைக்க வேண்டாம். ஏனெனில் ஒரு கலைஞருக்கு அவருடைய தன்மானம் தான் பெரிய தடை. தன்மானத்தை அதிக அளவில் வைத்திருந்தால் வாய்ப்பு கிடைக்காது. தன்மானத்தை கைவிட்டால், நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்தப் படத்திற்கு பாடல் எழுதி இருக்கும் பாடலாசிரியர் இளைய கம்பன் என்னுடைய நண்பர். திறமையானவர். இளைய கம்பன் என்ற பெயரே அவர் மீது எனக்கு இருக்கும் பெரிய ஈர்ப்பு.

திரையுலகில் கதாசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். ஏனெனில் ஒரு பாடலுக்கு இசை அமைப்பாளர் மெட்டமைத்தாலும்.. பின்னணி பாடகர்கள் பாடினாலும்.. அதற்கு கதையை அறிந்து… சூழ்நிலை அறிந்து… பாடல் வரிகளை எழுதும் கவிஞர்கள்தான் முக்கியம்.

படமே எடுக்காமல் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டிருக்கும் மோசடி பேர்வழிகளை… ‘பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் ‘என ஊடகங்கள் விவரிக்கிறது.

இதனை நிஜமாகவே படமெடுக்கும் இயக்குநர்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்குகிறது. இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் திரைப்பட இயக்குநர் என்ற வார்த்தையை இணைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் வசனம் என்னைக் கவர்ந்திருக்கிறது. சட்டத்திற்கும் போலீஸிற்கும் நல்லவர்கள் தான் பயப்படுகிறார்கள்.

சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசுக்கு தர வேண்டியது கொடுத்துவிட்டு வெளியில் மகிழ்ச்சியாக உலா வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பது உண்மைதான்.

சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசை மதிப்பதே இல்லை. யார் ஆட்சி செய்தாலும் போலீஸ், போலீசாக இருக்க வேண்டும்.

கடன் கொடுப்பவர்கள் பணத்தை கொடுக்கும் வரை கடவுளாக தெரிகிறார்கள். கடன் கொடுத்த பிறகு கடன்காரன் கடன் கேட்டு வந்தால், ‘சகுனம் சரியில்லை’ என்று கடன் காரன் கூறுகிறான். இதுபோன்ற நன்றிகெட்ட சூழலில் தான் நான் தற்போது வாழ்கிறோம்.

குடியால் பாதிக்கப்படும் இளைஞனின் கதையை இயக்குநர் ‘ஈடாட்டம்’ மூலமாக கொடுத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

ஈடாட்டம்

We are living in worst world says Perarasu

More Articles
Follows