81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீடு ஹைலைட்ஸ்

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீடு ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர்.

3.6.9.

ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுப்பு ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது. .

3.6.9.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ் , நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

கலைப்புலி தாணு இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.

3.6.9.

இயக்குனர் சுப்பிரமணியம் சிவா பேசும்போது…

:இன்றைய இயக்குனர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் சார் தான். அவர்தான் தனது படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பிரிவுகளையும் ஒரு இயக்குனர் கையாள வேண்டும் என்பதை முதன் முதலில் கொண்டு வந்தவர். அவருக்கு பின்வரும் இயக்குனர்கள் கதையுடன் வரவேண்டும் என்கிற நெருக்கடியையும் அவர் உருவாக்கினார். அதுதான் இன்றுவரை அது தொடர்கிறது” என்று கூறினார்.

3.6.9.

இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் பேசும்போது…

“இந்த படத்தின் தலைப்பு 3.6.9 என்பது என்னால் மறக்க முடியாத ஒரு நம்பர்.. காரணம் நான் முதன்முதலில் வாங்கிய காரின் நம்பரும் அதுதான்.. இளமையான ஒரு கூட்டணியில் இணைந்து பாக்கியராஜ் சார் பணியாற்றியுள்ளார். இந்த மேடையில் அவர் வரும்போது படக்குழுவினர் அனைவருமே அவரை ஒரு பயம் கலந்த மரியாதையுடன் வரவேற்றனர்.

3.6.9.

சாதித்த இயக்குனர்களுக்கு இன்று கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது தான். ஏனென்றால் இன்றைய இளைய தலைமுறைக்கு சாதித்த சீனியர்கள் பற்றி தெரிவதில்லை. தொடர்ந்து வெள்ளிவிழா படங்களாக கொடுத்தவர் அவர். வெள்ளிவிழா படம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் போல இன்று இருப்பவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவருடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெள்ளிவிழா படங்கள் தான்.. எனக்கு சோர்வு ஏற்படும் சமயங்களில், கதை சரியாக யோசிக்க முடியாத நேரங்களில், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் இயக்குனர் பாக்கியராஜின் மாணவன் என்பதை நினைத்துக் கொள்வேன். உடனே உற்சாகம் வந்துவிடும்” என்று கூறினார்

3.6.9.

இசையமைப்பாளர் தீனா பேசும்போது…

“சில படங்களில் ட்ரெய்லரை பார்த்தால் நமக்கு ஒன்றுமே புரியாது. இந்த படத்தின் ட்ரெய்லரும் அதுபோலத்தான் இருந்தது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால் இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலை தூண்டும் விதமாக இந்த ட்ரெய்லர் இருப்பதை மறுக்க முடியாது. இந்த படத்தின் பின்னணி இசையை பார்க்கும்போது ஜுராசிக் பார்க் படத்திற்கு கையாண்ட முறையை போல இதிலும் செய்திருப்பார்கள் என்று நினைக்க வைக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முதலில் நான் வருவதாக இல்லை.. காரணம் படத்தின் இசையமைப்பாளர் எங்களது சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால் இன்று மாலை தான் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அடுத்த நிமிடமே இந்த விழாவுக்கு கிளம்பி வந்துவிட்டேன். அவர் மிகப்பெரிய அளவில் வருவார்” என்று பாராட்டினார்.

3.6.9.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசும்போது…

“நான் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்றுதான் ஒவ்வொரு படியாக கற்றுக்கொண்டு அதை நோக்கி வந்தேன். ஆனால் சில நேரங்களில் அதை விட்டு பாதை மாறும் விதமாக நான் செல்லும்போது தயாரிப்பாளர் பிஜிஎஸ் தான் என்னை இழுத்து பிடித்து இதுதான் உனக்கு சரியான பாதை என்று என்னை வழிநடத்தினார். என்னை நம்பி இந்த படத்திற்கு நீதான் இசையமைக்கிறார் என்று மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தார். அதுமட்டுமல்ல இது போன்ற ஒரு சாதனை படத்திற்கு மிகுந்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர்களை தான் பெரும்பாலும் தேடுவார்கள். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் சிவ மாதவ்வும் ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

3.6.9.

நடிகர் பிளாக் பாண்டி பேசும்போது…

“இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக ரிகர்சல் செய்து கொண்டிருந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் மழை பெய்து கொண்டிருந்தது. நாம் நினைத்தபடி படப்பிடிப்பு நடத்த முடியுமா என எனக்கு சந்தேகம் வந்தது. அதனால் இயக்குனர் நம்பிக்கையுடன் இருந்தார். அதேபோல சாதனைப்படமாக இது எடுக்கப்பட இருப்பதால் எந்த ஒரு இடத்திலும் நம்மால் அதற்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். வசனத்தை மறந்து விட்டால் கூட அதனால் சாதனை தடைப்பட்டு விடும் என்று கூட இயக்குனர் கூறியிருந்தார். அதனால் இந்த படம் குறித்த நினைப்பை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறினார்.

3.6.9.

படத்தின் இயக்குனர் சிவ மாதவ் பேசும்போது,…

“கிட்டத்தட்ட ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் சாத்தியமானது. இதை ஒரு சாதனைப்படமாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னபோது எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இதை துவங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்திற்காக ஆடிசன் வைத்தபோது கிட்டத்தட்ட 500 பேர்கள் வரை வந்து சென்றனர். அதில் பலபேர் இவர்கள் 81 நிமிடங்களில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களாம்.. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எங்கள் காதுபடவே பேசிவிட்டு சென்றார்கள். ஆனால் இன்று நாங்கள் இந்த படத்தை எடுத்து முடித்து விட்டு சாதனையை செய்து விட்டோம் அவநம்பிக்கையுடன் பேசியவர்கள் இதை வெளியே நின்று வேடிக்கை தான் பார்த்துக்கொண்டி இருப்பார்கள்.

3.6.9.

இந்த கதை மீது பாக்யராஜ் சார் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரை கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம் என் அப்பாவிற்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அதனால் இதில் அவர் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படத்தில் பணியாற்றிய பின்னர் நானும் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தான் மனிதனின் வளர்ச்சி.. எல்லாவற்றிலும் விஞ்ஞானம் இருக்கிறது. லாரியில் எலுமிச்சை கட்டுவதில் கூட அறிவியல் இருக்கிறது. அந்த விஞ்ஞானம் பற்றி தான் இந்தப் படம் பேசுகிறது” என்று கூறினார்.

3.6.9.

படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் பேசும்போது,…

“முதல் படம் எனக்கு பெரிய அளவில் பயன் தரவில்லை. அதன் பிறகுதான் ஒரு பெரிய படமாக, பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும்.. அந்த படம் அனைவரையும் பேச வைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த போது தான் இப்படி ஒரு சாதனை படத்தை எடுக்கும் எண்ணம் உருவானது. இயக்குனர் சிவ மாதவ்விடம் இதை சொன்னபோது சற்றும் தயங்காமல் ஒப்புக்கொண்டார். அதேசமயம் படம் ஆரம்பிக்கும் முன்பு அவர் என்னிடம் சொன்ன கதை படமாக எடுக்க துவங்கியபோது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருந்தது. ஆனால் அதுவும் முதலில் சொன்னதைவிட நன்றாகவே இருந்தது. 81 நிமிடங்களில் எடுக்கும் படம் தானே, குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே காலியானது. அந்த அளவிற்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது. இந்த படத்தில் ரிகர்சளுக்காக கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பாக்கியராஜ் சார் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த கப்பலின் கேப்டன் சிவமாதவ் தான் என்றாலும் இது பாக்கியராஜ் சார் படம் தான் என்பதை உறுதியாக சொல்வேன்” இந்த கூறினார்.

3.6.9.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது….

, “நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான்.. நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன். நான் கதை எழுதிய ‘ஒரு கைதியின் டைரி’ படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு.. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது.

3.6.9.

ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.. அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.

இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது, அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும் அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.

3.6.9.

அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை.

அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கே தான் கற்றுக் கொண்டு அந்த படத்தை முடித்தேன். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ்வும் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறினார்.

3.6.9.

Filmed in 81 minutes and set a world record 3.6.9. Music release highlights

20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்த டாப் நடிகைகள்

20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்த டாப் நடிகைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகர் கிரிஷ், இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி, ஷாம், சினேகா, மீனா, சங்கீதா இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்துள்ளார்.

சினேகா மற்றும் மீனாவுடன் இருக்கும் படம் ‘வாரிசு’ படத்தில் அவர்கள் இருப்பதற்கான ஊகங்களை எழுப்பியுள்ளது.

2003ஆம் ஆண்டு வெளியான ‘வசீகரா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார், 2001ஆம் ஆண்டு வெளியான ‘ஷாஜஹான்’ படத்தில் ‘சரக்கு வச்சிருக்கேன்’ பாடலுக்கு மீனா நடனமாடியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு நடிகைகள் விஜய்யுடன் திரையில் மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Varisu

‘புராஜெக்ட் கே’ படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட கோவில் செட்

‘புராஜெக்ட் கே’ படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட கோவில் செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புராஜெக்ட் கே’ அறிவியல் புனை கதை மற்றும் காலப் பயணக் கூறுகளைக் கொண்ட ஒரு கற்பனைத் திரைப்படமாகும்.

பிரபாஸ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் புறநகரில் உள்ள பழமையான கோவிலை போன்ற செட்டில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்தில் அமிதாப் பச்சன் சாகாவரம் பெற்றவராக உள்ளார். பிக் பியின் கதாபாத்திரத்துடன் அவரது கதாபாத்திரத்தின் ப்ரீ-லுக் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது, மேலும் படத்தில் பிரபாஸ் ஒரு சூப்பர் ஹீரோ என்பது தெளிவாகிறது.

போர்வைக்குள் முத்தமிடும் ‘பிக் பாஸ் 6’ போட்டியாளர்கள் . வைரலாகும் வீடியோ

போர்வைக்குள் முத்தமிடும் ‘பிக் பாஸ் 6’ போட்டியாளர்கள் . வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ் தெலுங்கு’ சீசன் 6 செப்டம்பர் முதல் நடந்து வருகிறது, 21 போட்டியாளர்களில் 7 பேர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

மீதமுள்ள 14 பேருக்கு இடையே டைட்டிலுக்கான போட்டி உள்ளது.
இந்நிலையில், போட்டியாளர்களான மெரினா ஆபிரகாமும், ரோஹித் சாஹ்னியும் போர்வைக்குள் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற பிரபலங்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டாலும், இவர்கள் 2017 இல் திருமணம் செய்து கொண்டதால் இது இயற்கையானது. சீரியல்களில் பணிபுரியும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த ஜோடி.

Bigg Boss 6 Telugu

தெரிந்ததை விட தெரியாதது அதிகம்.; புல்லரிக்கச் செய்த ரிஷப்.; ரஜினிகாந்தை கவர்ந்த ‘காந்தாரா’

தெரிந்ததை விட தெரியாதது அதிகம்.; புல்லரிக்கச் செய்த ரிஷப்.; ரஜினிகாந்தை கவர்ந்த ‘காந்தாரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

காந்தாரா

கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனை கண்டு ரசித்து படக்குழுவினரை நேரில் வரவழைத்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது வழக்கம்.

காந்தாரா

இந்த நிலையில் ‘காந்தாரா’ படத்தினைக் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய ட்வீட்டரில்….

,“தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது.

என்னை புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. உங்கள் திரைக்கதை, இயக்கம், நடிப்புக்கு என் பாராட்டுகள். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பைச் சார்ந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பதும், கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களை விட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும், இந்த படம் தமிழகத்தில் இன்றும் 100 திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

காந்தாரா

Kantara highly happy with Rajinikanth appreciation

மேக்கப் போட்டால் ஹல்க் போல கோபம்.; மித்ரன் வாயால் பிரியாணியே செய்வார்.; ‘சர்தார்’ சக்ஸஸ் மீட் அப்டேட்ஸ்

மேக்கப் போட்டால் ஹல்க் போல கோபம்.; மித்ரன் வாயால் பிரியாணியே செய்வார்.; ‘சர்தார்’ சக்ஸஸ் மீட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது…

படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு சர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம்.

உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

கார்த்தி என்னுடைய நண்பர். இப்படத்தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மித்ரனுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மித்ரன் புத்திசாலியான இயக்குநர். நிறைய படிப்பார்.

லக்ஷ்மன் குமார்

ஒவ்வொரு முறையும் 4 மணி நேர கலந்துரையாடுவது உற்சாகமாக இருக்கும்.

ஜீவி அழகாக இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறார். கலை இயக்குநரை யார் அவர்? என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ரூபன் இரவு பகலாக உழைத்திருக்கிறார்.

ரெட் ஜெயிண்ட் உதயநிதி, ராஜா அனைவரும் மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார். மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாள வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி.

உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், சண்டை உதவி இயக்குநர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றார்.

லக்ஷ்மன் குமார்

கலை இயக்குநர் கதிர் பேசும்போது…

நல்ல படங்களை அடையாளம் கண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்களான உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. தண்ணீர் என்பது இன்றியமையாதது என்று எல்லோருக்கும் தெரியும். அதைப் பற்றி விழிப்புணர்வு கொடுக்கும் படமாக இருக்கிறது.

கதை கேட்கும்போதே இந்த படம் வெற்றியடையும் என்பதை சில படங்களை ஊகிக்க முடியும். அதேபோல் இந்த படத்தின் கதையைக் கேட்கும்போதே வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனாலும், மற்ற படங்களைவிட இப்படத்திற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இறுதி 10 நாட்களில் 24 மணி நேரமும் அனைவரும் கடுமையாக உழைத்து படத்தை எடுத்து முடித்தோம்.

ரக்ஷித் சிறப்பாக மேக்கப் போட்டிருந்தார். ஒவ்வொரு வேடத்திலும் அதற்கேற்றாற் போல் உடல்மொழியைக் கொண்டு வருவார். எத்தனை மணி நேரமாக இருந்தாலும் அத்தனை மணி நேரமும் அந்த கதாபாத்திரமாவே உடல் மொழியை மாற்றாமல் அப்படியே இருப்பார்” என்றார்.

கதிர்

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் பேசும்போது…

“3 வருடம் உழைத்து இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். இறுதி 6 மாதங்கள் இரவு பகல் பாராமல் உழைத்தோம்” என்றார்.

ஜார்ஜ் வில்லியம்ஸ்

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது…

“பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் வாயால் வடை சுடுவார் என்று கூறுவோம். ஆனால், மித்ரன் வாயால் பிரியாணி செய்வார். சண்டைக் காட்சிகளை கூறும்போது, உண்மையாகவே அடித்து விடுவாரா? என்ற பயம் வரும்.

ஆனால், கதை கூறுவதற்கும் அதை காட்சிப் படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கும். வாயால் கூறுவதை படமாக்குவது சவாலான விஷயம். ஆனால், மித்ரன் சொன்னதுபோலவே சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார்.

அதேபோல கதை கேட்கும்போது கார்த்தி சார் நிறைய கேள்விகள் கேட்பார். இப்படத்திலும் நிறைய கேள்விகள் கேட்டார். இறுதியில் அவர் ஒப்புக் கொண்டதும் இப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

மேக்கப் மேன் ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டு சர்தார் வேடத்தின் தொடர்ச்சி சரியாக உள்ளதா? என்று கேட்டார். இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை. அதிலிருந்தே அவரின் ஈடுபாடு தெரிந்தது. அதன்பிறகு, எனக்கும் இப்படத்தை மிகச் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களும் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொருவரும் எது சரி, எது தவறு என்று எடுத்துக் கூறி இப்படம் நன்றாக வருவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

ரூபன்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்போது…

“ஒரே வருடத்தில் 3 வெவ்வேறான படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர் ஒரு பாடல் பாடினார். கிட்டதட்ட 7 மணி நேரம் ஆனது. ஆனால், இப்பாடலை எப்படி காட்சிப்படுத்த போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தோன். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இயக்குநர் எடுத்திருந்தார்.

மித்ரன் சவாலான இயக்குநர். ஒவ்வொரு காட்சிக்கும் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாயிலேயே இசையமைத்து காட்டுவார். அவர் நினைத்தபடி வரும்வரை விடவே மாட்டார். பல பாடல்கள் இசையமைத்து முடித்தும் தூக்கி போட்டிருக்கிறோம். என் இசையில் பாதி பங்கு அவரை சேரும் என்றார்.

ஜிவி பிரகாஷ்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது…

“இப்படத்தில் யாரும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியாது என்று லக்ஷ்மன் சாரிடம் கதை கூறும்போதே தெரியும்.

இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும்போதிருந்தே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜிவி உதவிபுரிந்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு எழுத்தாளர், இந்த பட கதையெய் பற்றி சொல்லுல் போது.. ஒரு மெத்தையில் இருக்கும் பஞ்சை தலையணைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று கூறினார்.

அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாக புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. உங்கள் பெயரை மித்ரன் என்பதற்கு பதிலாக மாத்ரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று ரூபன் கூறினார். அந்தளவிற்கு திரைக்கதையை மாற்றிக் கொண்டே இருப்பேன். படப்பிடிப்பிற்கு 60 நாள் வேண்டுமென்றால், தளம் அமைப்பதற்கு 120 நாட்கள் ஆகும். அதை கலை இயக்குனர் கதிர் சிறப்பாக செய்தார்.

கார்த்தி சார்.. மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம் என்றார்.

 பி.எஸ்.மித்ரன்

நடிகர் கார்த்தி பேசும்போது,

தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும் தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.

இப்படத்தின் கதையைக் கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள்.

கார்த்தி

ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.

சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும் போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.

கார்த்தி

எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும், ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான்.

ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது என்றார். லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமையான நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி” என்றார்.

கார்த்தி

Karthi and Mithran speech at Sardar Success meet

More Articles
Follows