தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இறுதிச்சுற்று’ படம் நடிகர் மாதவனுக்கு இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
அது முதலே வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் மாதவன்.
இந்த படத்திற்குப் பிறகு மாதவன் இயக்கி நடித்த நம்பி நாராயணனின் வாழ்க்கை திரைப்படம் ‘தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்’ மாபெரும் வெற்றி பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் மாதவனையும் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் மாதவன். அதன் விவரம் வருமாறு…
தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.
நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார்.
Madhavan in lead Biopic of Miracle man GD Naidu