தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அரிது. அதிலும் தொடர் வெற்றிப் படங்களை கொடுப்பவர் அரிதோ அரிது.
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா.
தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளார் சுதா.
இந்நிலையில் சுதாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியகியுள்ளது.
சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!
கேஜிஎப் 1 & 2 படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தான் சுதாவின் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இதுப்பற்றி அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில்…
‛‛சில உண்மை கதைகள் சொல்லப்பட வேண்டும். எங்களின் அடுத்த படத்தை சுதா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
எங்களது எல்லா படங்களைப் போன்று இந்த படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த படம் கேஜிஎஃப் போன்று பான் இந்தியா படமாக உருவாகும் என தெரிகிறது.
விரைவில் இப்பட நடிகர்கள் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும்.
KGF2 producers announce that their next is with director Sudha Konagra