2016 ஆண்டு… முதல் படத்திலேயே கவர்ந்த சூப்பர் ஹீரோயின்ஸ்

2016 Debut heroines in Tamil Cinemaபல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது ஒரு வகை.

ஆனால் தங்கள் முதல் படத்திலேயே முத்திரை பதிப்பது இரண்டாவது வகை.

பராசக்தியில் சிவாஜி, பருத்தி வீரனில் கார்த்தி என்று ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்கள் முத்திரையை பதித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு 2016ல் நிறைய புதிய முகங்கள் தமிழ் சினிமாவிற்று அறிமுகமாகி உள்ளனர். (சிலர் மற்ற மொழிகளில் நடித்தும் உள்ளனர்)

தமிழ் சினிமா தந்த அந்த திறமையான சூப்பர் ஹீரோயின்ஸ்களை இங்கே பார்ப்போம்…

ரித்திகா சிங் – இறுதிச்சுற்று

அடிப்படையில் பாக்ஸர் ஆன இவர் தன் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.

மாதவன் தயாரித்த இப்படத்தை சுதா கொங்கரா என்ற பெண் இயக்குனர் உருவாக்கியிருந்தார்.

ரித்திகாவின் அடுத்த படமான ஆண்டவன் கட்டளையும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

நிகிலா விமல் – வெற்றிவேல்

வெற்றி வேல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கிடாரி படத்திலும் சசிகுமாருடன் நடித்தார்.

இரண்டிலும் அமைதியான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தார்.

பூஜா தேவரியா – இறைவி

இறைவி படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை கைப்பற்றியிருந்தார். ஒரு சில காட்சிகளே வந்தாலும், யார்? இந்த பெண்? என்று கேட்கவைத்தார்.

இதனையடுத்து குற்றமே தண்டனையிலும் தனக்கான இடத்தை பிடித்தார்.

நிவேதா பெத்துராஜ் – ஒரு நாள் கூத்து

இவர் தமிழ்ப் பெண் என்றாலும் அயல்நாட்டில் செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளை பதிவிடுவார்.
ஒருநாள் ஒரு கூத்து படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடலிலும் படத்திலும் தனி கவனம் ஈர்த்தார்.

மஞ்சிமா மோகன் – அச்சம் என்பது மடமையடா

கெளதம் மேனன் படத்தில் மெயின் கேரக்டரா? அல்வா மாதிரி ஆச்சே. என்றுதான் ஹீரோ ஆனாலும் சரி ஹீரோயினாலும் சரி நினைப்பார்கள்.

அதுபோன்ற வாய்ப்பு மஞ்சிமா மோகனுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பில் பாராட்டை பெற்றார்.

மடோனா செபாஸ்டியன் – காதலும் கடந்து போகும்

மலையாள பிரேமம் படத்தில் அறிமுகமானாலும், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

காதலும் கடந்து போகும் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியுடன் கவண் படத்தில் நடித்து வருகிறார்.

அனுபமா பரமேஸ்வரன் – கொடி

இவரும் மலையாள பிரேமம் படத்தில் அறிமுகமானார்.

தனுஷின் கொடி படம் இவருக்கு முதல் தமிழ் படம். இவர் இதில் சொந்த குரலில் டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன் – ஜோக்கர்

தன் முதல் படமே அருமையான சமூக நோக்கமுள்ள படத்தில் நடித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
அந்த அளவு கிராமத்து பெண்ணாக மேக்கப் போட்டு இருந்தார்.

சாட்னா டைடஸ் – பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்திருந்தார். நெகட்டிவ் டைட்டில் என்று கூறப்பட்டாலும் சென்டிமெண்டுகளை உடைத்து வசூலில் பணக்காரன் என நிரூபித்தது.

திடீரென தன் காதலரை திருமணம் செய்துக் கொண்டார்.

அறிமுக நாயகிகள் அனைவரும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

Overall Rating : Not available

Related News

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள `என்ஜிகே' வருகிற…
...Read More
’குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை தொடர்ந்து ராஜு…
...Read More
ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார்…
...Read More
விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த பிச்சைக்காரன்…
...Read More

Latest Post