தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார் மாதவன்.
இதனயைடுத்து அவரது நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.
இதில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் புதிய படம் மூலம் இணையவுள்ளது.
அறிமுக இயக்குனர் திலிப் குமார் இயக்கவுள்ள ‘மாறா’ படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது.
ஜிப்ரான் இசையமைக்க, விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாம்.