விஜய்-சூர்யா-சிம்பு-சிவகார்த்திகேயன்… இந்தாண்டில் யார் படம் அதிக வசூல்..?

விஜய்-சூர்யா-சிம்பு-சிவகார்த்திகேயன்… இந்தாண்டில் யார் படம் அதிக வசூல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya simbu sivakarthikeyanஇந்தாண்டு (2016) தொடங்கி ஆறு மாதங்கள் இன்றோடு நிறைவு பெறுகிறது.

இன்று வரையில் தமிழின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், ஆர்யா, சித்தார்த் ஆகியோரின் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடிகர்களின் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பை போன்றே வெளிநாடுகளிலும் உள்ளது.

இதில் விஜய்யின் ‘தெறி’ மற்றும் சூர்யா தயாரித்து 3 வேடங்களில் நடித்த ’24’ ஆகிய படங்கள் அதிகம் வசூலை வெளிநாடுகளில் ஈட்டியுள்ளது.

இவை இரண்டும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

‘தெறி’ படம் 45 கோடிகளை வசூல் செய்துள்ளது.

’24’ படம் ரூ. 31 கோடிகளை வசூல் செய்துள்ளது.

‘ரஜினிமுருகன்’ படம் ரூ. 13 கோடிகளையும் ‘அரண்மனை 2’ ரூ. 9.5 கோடிகளையும் ‘இது நம்ம ஆளு’ படம் ரூ. 4.6 கோடிகளையும் வசூல் செய்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படங்கள்…

· மாதவனின் ‘இறுதிச்சுற்று’ ரூ. 3.8 கோடி

· ஜெயம் ரவியின் ‘மிருதன்’ ரூ. 4 கோடி

· விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ ரூ. 3.2 கோடி

· எஸ்.ஜே. சூர்யாவின் ‘இறைவி’ ரூ. 2.2 கோடி

· விஜய் சேதுபதியின் ‘சேதுபதி’ ரூ. 2 கோடி

சத்யராஜ்-சமுத்திரக்கனியுடன் இணைந்த ஷாம்..!

சத்யராஜ்-சமுத்திரக்கனியுடன் இணைந்த ஷாம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shaam stillsநாளை ஜூலை 1ஆம் தேதி சத்யராஜ் மற்றும் சிபிராஜ் நடித்துள்ள ஜாக்சன் துரை வெளியாகிறது.இத்துடன் சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து நடித்துள்ள அப்பா படமும் வெளியாகிறது.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஷாம், மனீஷா ஆகியோர் நடித்துள்ள ‘ஒரு மெல்லியகோடு’ படமும் நாளை வெளியாகிறதாம். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியுள்ளார்.

இப்படம் ஒரு சில மாதம் முன்பே வெளியாக இருந்ததால் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சிகளும் திரையிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போன இப்படம் நாளை ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களுடன் மஜீத் இயக்கிய பைசா படமும் ராம் கோபால் வர்மா இயக்கிய வில்லாதி வில்லன் வீரப்பன் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கபாலியில் இணைந்த மோகன்லால்… ரஜினி என்ன சொன்னார்..?

கபாலியில் இணைந்த மோகன்லால்… ரஜினி என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth mohanlalபிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவ்வப்போது நேரடி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையில் தமிழ் படங்களின் கேரள உரிமையையும் பெற்று விநியோகம் செய்து வருகிறார்.

தற்போது மிக எதிர்பார்ப்புக்குள்ளாகிய ரஜினியின் கபாலி படத்தின் விநியோகத்தையும் பெற்றுள்ளாராம்.

கேரளாவில் மட்டும் 160க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் ரூ. 8.5 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ரஜினியும் மோகன்லாலும் நல்ல ப்ரெண்ட்ஸ் என்பதால் கேரளாவில் நடைபெறும் புரமோஷன்களிலும் ரஜினியை கலந்துகொள்ள கேட்டுக் கொண்டாராம் லால் சேட்டன்.

ரஜினியும் சரி என்று சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மோகன்லால் – மம்மூட்டியா? கன்ப்யூஸ் செய்யும் கபாலி இயக்குனர்..?

மோகன்லால் – மம்மூட்டியா? கன்ப்யூஸ் செய்யும் கபாலி இயக்குனர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali Director Ranjithரஜினியின் கபாலி படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் ரஞ்சித் என கூறப்பட்டது.இதனிடையில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் அல்லது மம்மூட்டி படத்தை ரஞ்சித் இயக்குவார் என்ற தகவல்கள் மலையாள திரையுலகில் வலம் வருகின்றன.

இதில் நாயகியாக மஞ்சு வாரியார் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

முழுமையான ஸ்கிரிப்ட் ரெடியானவுடன் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அட அடுத்த படம் இருக்கட்டும்…

கபாலி ரிலீஸை கரெட்க்டா சொல்லுங்கப்பு…

இனி 24 மணி நேரமும் தியேட்டரில் படம் பார்க்கலாம்…!

இனி 24 மணி நேரமும் தியேட்டரில் படம் பார்க்கலாம்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

delhi cinemasஇந்திய தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மல்டி ப்ளக்ஸ் காம்பக்ஸ், பேங்க் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை இனி 24 மணி நேரம் இயங்க வேணடும் என்றி விவாதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்ட இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தொழிலாளர் துறை அமைச்சகத்தின் சார்பில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த 24 மணி நேரம் இயங்கும் நிறுவனங்களால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரிய வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்பதால், இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வரவிருக்கிறது. இச்சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹாலிவுட் அப்புறம்; இப்போ ஹாலிவுட் நடிகர்..’ தனுஷ் முடிவு..!

‘ஹாலிவுட் அப்புறம்; இப்போ ஹாலிவுட் நடிகர்..’ தனுஷ் முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Karthik Subbaraj Film to have a Hollywood Actorபிரபு சாலமன் இயக்கிய தொடரி, துரை செந்தில்குமார் இயக்கிய கொடி, மற்றும் கௌதம் மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.

தொடரி ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் தனுஷுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows