தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள `என்ஜிகே’ வருகிற மே 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது-
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இதனை தொடர்ந்து விரைவில் `இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை சூர்யாவே தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.
சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்த தகவலை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஆடியோ இறுதி வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் சூட்டிங் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.