இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படத்தில் மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படத்தில் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor madhavanஇறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்களை தொடர்ந்து மாதவனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது ஒரு புதிய படத்தில் 27 வயதில் தொடங்கி 75 வயதுவரையான விண்வெளி வீரராக நடிக்கவிருக்கிறாராம் இந்த மேடி.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

‘சண்டா மாமா டோர் கே’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யவுள்ளனர்.

‘தோனி’ பட நாயகன் சுஷாந்த் சக விண்வெளி வீரராக இதில் நடிக்கிறாராம்.

எனவே தற்போது மாதவன், சுஷாந்த் இருவருமே இந்தப் படத்துக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் பயிற்சி எடுக்க இருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி நெகிழ… மஞ்சு வாரியார் வெட்கப்பட.. விருது விழா சுவாரஸ்யம்

விஜய்சேதுபதி நெகிழ… மஞ்சு வாரியார் வெட்கப்பட.. விருது விழா சுவாரஸ்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Manju Warrierதமிழ் சினிமாவில்  ஆர்ப்பாட்டமில்லாமல் முன்னேறி வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

தரமான படங்களையும் அதே நேரத்தில் சிறந்த நடிப்பையும் குறுகிய காலத்தில் இவர் கொடுத்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.

சமீபத்தில் இவருக்கு கேரளாவில் சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டது.

அந்த விருதை பிரபல நடிகையான மஞ்சு வாரியார் வழங்கினார்.

அப்போது… ஒரு கதை சொல்லட்டா என விக்ரம்வேதா படத்தில் விஜய்சேதுபதி பேசும் டயலாக்கை கூறி, நான் உங்க ரசிகை என கூறியுள்ளார்.

இதனால் விஜய்சேதுபதி நெகிழ்ந்தே போனாராம்.

அதன்பின்னர் விஜய்சேதுபதி பேசும்போது… நானும் உங்க ரசிகன்தான். உங்கள இப்பத்தான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன். நேரில் பார்க்க நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என கூறி மஞ்சு வாரியாரையே வெட்கப்பட வைத்துவிட்டாராம் இந்த மக்கள் செல்வன்.

Vijay Sethupathi and Manju Warrier speech at Asiavision Award

2 ஸ்டார்கள் படத்தை அடுத்து சூப்பர்ஸ்டாருடன் இணையும் ராஜமௌலி

2 ஸ்டார்கள் படத்தை அடுத்து சூப்பர்ஸ்டாருடன் இணையும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajamoulis new movies updates after Baahubali2 movieபாகுபலி 2 என்ற மிகப்பிரம்மாண்ட படத்தை அடுத்து புதிய பட வேலைகளை ஆரம்பித்து விட்டார் ராஜமௌலி.

இப்படத்திற்கும் வழக்கம்போல இவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறாராம்.

இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ராஜமௌலி.

Rajamoulis new movies updates after Baahubali2 movie

ஜனவரியில் ரஜினி அரசியல் அவதாரம்; அண்ணன் சத்யநாராயணா உறுதி

ஜனவரியில் ரஜினி அரசியல் அவதாரம்; அண்ணன் சத்யநாராயணா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini brother sathya narayanaraoதர்மபுரி மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் இல்ல திருமணத்தில் கலந்துக் கொள்ள வருகை தந்துள்ளார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா.

அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட போது…

2018 ஜனவரி மாதத்தில் தன் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ரஜினி பிறந்தநாளில் அவரது கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajini will enter in politics in 2018 January says his brother Sathya Narayanan

ஜேஎஸ்கே தயாரிப்பில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித்-விக்ரம் நாயகி

ஜேஎஸ்கே தயாரிப்பில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித்-விக்ரம் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mummy stillsஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’.

இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்

இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா.

இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.

கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை.

ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

‘ரிச்சி’ ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் H.C.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

மாயா, துருவங்கள் பதினாறு, டிக் டிக் டிக் உட்பட பல படங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் சிங்க் சினிமா ஒலி வடிவமைப்பிற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றுகிறார்.

படம் பற்றி இயக்குனர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படம் தயாராகியுள்ளது.

மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதேசமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாரிடம் இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.

இந்தப்படத்திற்காக கோவாவில் 3௦ லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட படப்பிடிப்பாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்” என்றார்

ஹாரர் படங்களில் தனித்துவம் மிக்க படமாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; பிரியங்கா த்ரிவேதி, பேபி யுவினா, ‘கோலிசோடா’ மதுசூதனன் மற்றும் சிலர்.

இசை ; அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு ; H.C.வேணு
படத்தொகுப்பு ; ரவிச்சந்திரன்
ஒலிப்பதிவு ; ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன்
ஒலி வடிவமைப்பு ; சிங்க் சினிமா
டைரக்சன் ; லோஹித்
தயாரிப்பு ; ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஜே.சதீஷ்குமார்.

விஷாலின் இரும்புத்திரை-யை வாங்கிய விக்ரம் படத் தயாரிப்பாளர்

விஷாலின் இரும்புத்திரை-யை வாங்கிய விக்ரம் படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumbu thirai vishalமித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் `இரும்புத்திரை’.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஷால் தயாரித்துள்ள இப்படத்தை 2018 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இதன் கேரள ரிலீஸ் உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை பெரும் தொகைக்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் நடித்த இருமுகன் படத்தை சிபு தமீன்ஸ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows