‘ரஜினி ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம்..’- ‘லைக்கா’ ராஜுமகாலிங்கம்

rajini lyca raju mahalingamஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’.

பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை ரூ. 350 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நவம்பர் 20ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இவ்விழா மும்பையில் நடைபெறுவதால் தென்னிந்தியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் நேரடியாக பார்க்க முடியாதே என கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜுமகாலிங்கம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும்தான் மும்பையில் நடைபெறுகிறது.

மீதமுள்ள டீசர், பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா ஆகியவற்றை தென்னிந்தியாவில் நடத்த உள்ளோம்.

இது ரசிகர்கள் மாபெரும் விருந்தாக அமையும்” என்றார்.

Overall Rating : Not available

Related News

ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More
ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More

Latest Post