தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தில் குஷ்பூ

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தில் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Khushbooரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தை தனுஷ் தயாரிக்கவிருக்கிறார்.

இப்பட அறிவிப்பு வெளியானது முதலே இப்படம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் குஷ்பூ நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ரஜினியுடன் குஷ்பு நடிப்பது இது 6வது முறையாகும்.

இதற்கு முன்பு, தர்மத்தின் தலைவன் (1988), நாட்டுக்கொரு நல்லவன் (1991), பாண்டியன் (1992), மன்னன் (1992), அண்ணாமலை (1992), குசேலன் (2008) ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Khusboo teams up with Rajini for 7th time in Dhanush project

rajini dhanush ranjith

‘அகங்காரம் கொண்ட இளையராஜா திருந்த மாட்டார்…’ கங்கை அமரன்

‘அகங்காரம் கொண்ட இளையராஜா திருந்த மாட்டார்…’ கங்கை அமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gangai amaran reaction to Ilayaraja legal notice to SPBபின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தான் இசையமைத்த பாடல்களை இனி தன் அனுமதியின்றி எவரும் பாடக்கூடாது என இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒரு தனியார் டிவிக்கு இளையராஜாவின் சகோதரரும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…

இளையராஜாவுக்கு அகங்காரம் உள்ளது. தான் இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்பது முட்டாள்தனமானது.

ராயல்டி கேட்டுதான் பாடல்கள் கேட்க வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்த முடியுமா?

இசையை தெய்வீகமாக நேசிப்பவர்களிடம் இப்படி சொல்லலாமா?

ராயல்டி பெற்றுதான் வாழவேண்டும் என்ற நிலைமையில் இருக்கிறாரா? இளையராஜா எப்போதுதான் திருந்துவார்..? என கங்கை அமரன் சாரமாரி கேள்விகளை கேட்டுள்ளார்.

Gangai amaran reaction to Ilayaraja legal notice to SPB

‘இளையராஜா பாடலை இனி பாட மாட்டேன்..’ எஸ்.பி.பி. முடிவு

‘இளையராஜா பாடலை இனி பாட மாட்டேன்..’ எஸ்.பி.பி. முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB ilayarajaதான் இசையமைத்த பாடல்களை இனி ராயல்டி இல்லாமல் எவரும் பாடக்கூடாது என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக இசை நிகழ்ச்சிகள் நடத்திவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூறியுள்ளதாவது…

இது தொடர்பாக யாரும் விவாதிக்க வேண்டாம்.

இனிமேல் நான் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Hereafter I wont sing Ilayaraja songs says SP Balasubramaniam

எஸ்பிபி.க்கு நோட்டீஸ் ஏன்.? இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப்

எஸ்பிபி.க்கு நோட்டீஸ் ஏன்.? இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayarajas Royality notice to Singer SPB issueஇசையுலகில் தன் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடித்தி வருகிறார் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

தற்போது அமெரிக்காவில் உள்ள இவருக்கு இளையராஜா தரப்பில் இருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் தெரிவித்துள்ளதாவது…

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, இளையராஜாவின் காப்புரிமை பணியை தொடர்கிறோம்.

இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என்றுதான் தெரிவித்துள்ளோம்.

மேலும் அன்றாட வாழ்வுக்காக கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இந்த ராயல்டி பொருந்தாது.
அவர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர்.

ஆனால் சிலர் லட்சணக்கனக்கான கோடிக்கணக்கான வருமான நோக்கோத்தோடு நிகழ்ச்சி செய்கின்றனர்.

அவர்களிடம்தான் உரிமையை கேட்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Ilayarajas Royality notice to Play back Singer SPB issue

தந்தையான அண்ணனை இழந்த நண்பர் கமலுக்கு ரஜினி இரங்கல்

தந்தையான அண்ணனை இழந்த நண்பர் கமலுக்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal condolence message to his brother Chandrahasan deathஇந்திய சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் நட்பு பாராட்டுவது அரிதான ஒன்று.

ஆனால் அதை முறியடித்து 45 ஆண்டுகாலமாய் கமல்ஹாசன்-ரஜினிகாந்த் இருவரும் சினிமாவை தாண்டியும் நெருக்கமான நட்போடு திகழ்கின்றனர்.

இந்நிலையில் இன்று கமலின் அண்ணன் சந்திரஹாசன் மரணமடைந்தார்.

தன் நண்பரின் அண்ணன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தன் ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது…

தன் தந்தை போன்ற அண்ணனை இழந்து வாடும் என் நெருங்கிய நண்பன் கமல்ஹாசனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். என்று தெரிவித்துள்ளார்.

Rajinikanth‏Verified account @superstarrajini
My heartfelt condolences to my dear friend @ikamalhaasan & his family for the loss of his fatherly brother ChandraHassan. May his soul RIP

Rajini condolence to Kamalhassans brother Chandrahasan death

எனக்காக சந்திரஹாசன் கண்ட கனவை நிறைவேற்றவில்லை… கமல் உருக்கம்

எனக்காக சந்திரஹாசன் கண்ட கனவை நிறைவேற்றவில்லை… கமல் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal condolence message to his brother Chandrahasan deathநடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்த துயர சம்பவத்தால் கமல்ஹாசன் உள்ளிட்ட குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தனது அண்ணனின் மரணம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியுள்ளதாவது…

நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு.

எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை

Kamal condolence message to his brother Chandrahasan death

More Articles
Follows