திரைப்படமாகிறது விஜய்யின் அம்மா வாழ்க்கை வரலாறு

திரைப்படமாகிறது விஜய்யின் அம்மா வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் & தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தவர் ஜெயசுதா.

பாண்டியன் படத்தில் ரஜினிக்கு அக்காவாகவும் நடித்திருந்தார் இவர்.

தமிழில், பாலசந்தர் இயக்கிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அரங்கேற்றம்’, ‘அபூர்வராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார். இவருக்கு தற்போது 65 வயதாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பட விழாவுக்கு அமெரிக்கர் ஒருவருடன் ஜெயசுதா வந்திருந்தார்.

அவர் யார்.? அடுத்த கணவரா? என்ற வதந்திகள் கிளம்பியது.

எனவே வதந்திகளுக்கு ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.

அதில்.. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெலிப் ரூவல்ஸ் என்பவர் என்னுடைய வாழ்க்கையை திரைப்பட படமாக்கி வருகிறார்.

எனவே என்னைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள என்னுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்.” என கூறியுள்ளார் ஜெயசுதா.

ஜெயசுதா

Varisu mother fame Actress Jayasudha biopic updates

உலகளவில் 2வது இடம்.; 500+ விருதை அள்ளிய ‘சிதை’.; கின்னஸ் சாதனை நோக்கி கார்த்தி ராம்

உலகளவில் 2வது இடம்.; 500+ விருதை அள்ளிய ‘சிதை’.; கின்னஸ் சாதனை நோக்கி கார்த்தி ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் “சிதை”.

பெண் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம்.

‘சிதை’ குறும்படம் மூலம் இதுவரை உலகளவில் 500+ விருதுகளை குவித்து வருகிறார் இயக்குனர் கார்த்தி ராம்.

மேலும் உலக அளவில் சிறந்த இயக்குநருக்கான 327 விருதுகளை பெற்று இருக்கிறார் கார்த்தி ராம்.. இதனை அங்கீகரித்த இந்தியாஸ் வேல்டு ரிக்கார்டு கம்பெனி சிதை இயக்குநருக்கு உலக சாதனை விருது வழங்கி இருக்கிறது.

தற்போது கின்னஸ் சாதனை நோக்கி பயணித்து வருகிறார் கார்த்திக் ராம்.. உலக அளவில் அதிக விருதுகளை வென்ற 2வது குறும்படம் என்ற சிறப்பை சிதை பெற்றுள்ளது.

முதல் இடத்தை The most awards won by a short film is 513, and was achieved by Manasanamaha (India, 2020), by Deepak Reddy (India), as verified on 20 May 2022.20-May-2022) பெற்று இருக்கிறார்.

தற்போது ‘சிதை’ முதல் பாகம் திரைப்படமாகி வருகிறது. ‘சிதை’ படத் தயாரிப்பாளர் ஆ. தன்ராஜ் இப்படத்தை தயாரிக்கிறார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்குனர் – கார்த்திராம்
ஒளிப்பதிவாளர் – நரேஷ் குமாரசாமி
எடிட்டர் – கணேஷ்
இசை – கவின்
நிர்வாக தயாரிப்பாளர் – கிஷோர்

Karthi Rams Sithai short film won 500 awards

இயக்குனர் தங்கர் பச்சானால் நடிகர் யோகி பாபுவுக்கு அடித்த யோகம்

இயக்குனர் தங்கர் பச்சானால் நடிகர் யோகி பாபுவுக்கு அடித்த யோகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கர்பச்சான் இயக்கியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகி பாபு தன் அனுபவம் பற்றி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில்…

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குனர் ஜாம்பவான் பாரதிராஜா , இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் மற்றும் பல கலைஞர்களுடன் இதில் நடித்துள்ளேன்.

இவர்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம்.. ஏனென்றால், அனைவருமே மேதைகள்.

இதில் இவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் தங்கர்பச்சான் தான்.

நாம் மறந்த வாழ்க்கையை நினைவிற்கு கொண்டு வருபவர் தங்கர் பச்சான்.

‘பள்ளிக்கூடம்’, ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘அப்பாசாமி’ போன்ற அவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற படங்கள் தான்.

எங்களை வைத்து குடும்ப படத்தை எடுத்திருக்கிறார். அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி.. மீண்டும் பயணிக்க ஆசையாக இருக்கிறது. ஜாலியாகவும், அதே நேரத்தில் கோபமாகவும் பணியாற்றுவார். அதனால் தான் வேலைகள் சரியாக நடக்கின்றன.

இசையை ஜிவி பிரகாஷ் அமைக்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஜாம்பவான் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். அந்தப் பெண்ணை சுற்றித் தான் படத்தின் கதை இருக்கும்.”.

இவ்வாறு யோகிபாபு பேசியுள்ளார்.

Yogibabu talks about his experience with Thangar Bachan

‘மதம்ங்குறது மனுசனுக்குத்தான் கடவுளுக்கில்லை..; சசிகுமாரின் ‘அயோத்தி’-யில் விஜய்சேதுபதி பன்ச்

‘மதம்ங்குறது மனுசனுக்குத்தான் கடவுளுக்கில்லை..; சசிகுமாரின் ‘அயோத்தி’-யில் விஜய்சேதுபதி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காரி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான படம் ‘அயோத்தி’.

இவருடன் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மந்திரமூர்த்தி இயக்க ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு ‘அயோத்தி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ட்ரைலரில்…

1) ஒருத்தன் மதத்துக்காக சண்ட போட்றானா அவனுக்கு கடவுள்னா என்னன்னு புரியலன்னு அர்த்தம்’…

2) ‘மதம்ங்குறது மனுசனுக்குத்தான் கடவுளுக்கில்லை..’ ஆகிய வசனங்கள் கவனம் பெறுகின்றன.

இதற்கு விஜய்சேதுபதி டப்பிங் (வாய்ஸ் ஓவர்) கொடுத்துள்ளார்.

Sasikumar’s Ayothi trailer goes viral Vijay Sethupathi punch dialogue

சசிகுமாரின் ‘அயோத்தி’-யில் விஜய்சேதுபதி பன்ச்…

பெண்களை அவமானப்படுத்திய பாஜக.; உயிருக்கு பயமில்லை..; நடைப்பயணம் செல்லும் காயத்ரி ரகுராம்

பெண்களை அவமானப்படுத்திய பாஜக.; உயிருக்கு பயமில்லை..; நடைப்பயணம் செல்லும் காயத்ரி ரகுராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாஜகவில் உறுப்பினராக இருந்தார்.

சமீபத்தில் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தமிழக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அந்த கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் அவர் தற்போது பாதயாத்திரை ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

பாஜகவில் பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும் நீதி கேட்டும் அவர் இந்த நடை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 27ஆம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாகவும் தனக்கு ஆதரவாக அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என் உயிரே போனாலும் நீதி கேட்டு போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.

Actress Gayathri Raghuram walking rally against BJP and Annamalai

நடிகர் ஜெயம் ரவியை ‘இறைவனாக’ மாற்றிய இஸ்லாமிய இயக்குனர்

நடிகர் ஜெயம் ரவியை ‘இறைவனாக’ மாற்றிய இஸ்லாமிய இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், சைரன் & பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதன்பிறகு அவர் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘இறைவன்’ என்று பெயரிட்டு நேற்று ஜனவரி 15ல் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இதில் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இறைவன்

Jayam Ravi starring Iraivan First Look released

More Articles
Follows