‘மன்னன்-படையப்பா’ மீது RJ. பாலாஜி கம்ப்ளைன்ட்.; LKG-ஐ கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்

‘மன்னன்-படையப்பா’ மீது RJ. பாலாஜி கம்ப்ளைன்ட்.; LKG-ஐ கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்ஜே பாலாஜி, அபர்ணா, சத்யராஜ், ஊர்வசி, உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் ‘வீட்ல விசேஷம்’.

இந்த படம் அடுத்த ஜூன் மாதம் 17ஆம் தேதி ரிலீசகாவுள்ள நிலையில் இப்படம் தொடர்பான விழா ஒன்று ஒரு கல்லூரியில் நடைபெற்றது.

அப்போது ஆர்ஜே. பாலாஜி பேசியதாவது…

இந்த கல்லூரியில் மாணவர்கள் மாணவிகள் சமநிலையை பார்க்கிறேன்.

பையன்களிடம் பெண்கள் பேச கூடாது என பொத்தி பொத்தி வளர்ப்பதால் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதே சிலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

நான் ரஜினி ரசிகன்தான். ஆனால் ஒன்றை சொல்லியாக வேண்டும்.

ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் வெளிநாட்டில் படித்த ரம்யா கிருஷ்ணனை கெட்டவராக காட்டியிருப்பார்கள். கிராமத்து பெண்ணாக நடித்த சவுந்தர்யாவை நல்ல பெண்ணாக காட்டியிருந்தார்கள்.

படையப்பாவுக்கு அமேசானில் தடையப்பா..; ரஜினிகாந்த் அதிரடி

அதுபோல் ரஜினி நடித்த ‘மன்னன்’ படத்தில் படித்த பெண்ணாக விஜயசாந்தியை திமிர் பிடித்தவளாக காட்டியிருப்பார்கள். வீட்டில் அம்மாவுக்கு காஃபி போடும் குஷ்பூவை நல்ல பெண்ணாக காட்டியிருப்பார்கள்.

எனவே பெண்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையாவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும்”

இவ்வாறு ஆர்ஜே. பாலாஜி பேசினார்.

இந்தப் பேச்சு வீடியோ இணையத்தளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து பாலாஜியின் படத்தை ரஜினி ரசிகர்கள் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

உங்களின் எல்கேஜி படத்தில் நன்றாக படித்த பிரியா ஆனந்தை ஒரு கார்ப்பரேட் கிரிமினலாக காண்பித்தீர்களே பாலாஜி.. அப்போ எங்கே போச்சு உங்களின் சமநிலை? என கலாய்த்து வருகின்றனர்.

RJ balaji criticized Rajinikanth films

ராஷ்மிகா பத்தல பத்தல.; விஜய்க்கு அடுத்த ஜோடியை தேடும் ‘தளபதி 66’ டீம்

ராஷ்மிகா பத்தல பத்தல.; விஜய்க்கு அடுத்த ஜோடியை தேடும் ‘தளபதி 66’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66-வது படத்தை இயக்கி வருகிறார் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்க விஜய் ஜோடியாக தெலுங்கில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் ஷாம், யோகிபாபு, சரத்குமார், பிரபு, ஜெயசுதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல் இப்பட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தற்போது 2ஆம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

தளபதிக்கு ஏஜ் எப்டி ரிவர்ஸ் கியரில் போகுது.? வைரலாகும் நியூ லுக்.; விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 66’ ட்ரீட்.

இதனிடையில் மரியாதை நிமித்தமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் இன்னொரு ஹீரோயின் விஜய்யுடன் இணையவிருக்கிறாராம்.

அவர் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே என கூறப்படுகிறது.

பூஜாவும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.

எனவே இதுபற்றிய அறிவிப்பை விரைவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

Thalapathy 66 team looking for the next pair for Vijay

கமல் பட டைட்டிலா இது.?; ரஞ்சித் இயக்கும்-தயாரிக்கும் படங்கள் இத்தனையா?

கமல் பட டைட்டிலா இது.?; ரஞ்சித் இயக்கும்-தயாரிக்கும் படங்கள் இத்தனையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களின் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் இயக்குநர் பா.ரஞ்சித்.

ரஜினி நடித்த ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கியதன் மூலம் இந்தியாவையும் தாண்டி பிரபலமானார் ரஞ்சித்.

‘காலா’ படத்திற்கு பிறகு ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கியிருந்தார். ஆர்யா நடித்த இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் அசூர வெற்றியை பெற்றது.

தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

இதனையடுத்து விக்ரம் நடிக்கவுள்ள ஒரு படத்தை க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்திற்காக இயக்கவுள்ளார் ரஞ்சித். இதன் சூட்டிங் ஜீலையில் தொடங்கவுள்ளது.

ஒரு பக்கம் இயக்கம், மறுபக்கம் தயாரிப்பு என பிசியாக வலம் வருகிறார்.

தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்த படங்கள் அனைத்தும் மக்களின் ஆதரவோடு சூப்பர் ஹிட்டானது. ‘குதிரைவால்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து ‘சேத்துமான்’, ‘பொம்மை நாயகி’, ‘ஜெ.பேபி’ உள்ளிட்ட படங்கள் ரஞ்சித் தயாரிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

மேலும் ‘நீலம் ஸ்டுடியோ’ எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார் பா.ரஞ்சித்.

இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து ’வேட்டுவம்’ என்ற படத்தைத் தயாரிக்கிறது.

இப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டனர்.

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித் இயக்கிய கேங்ஸ்டர் ஸ்டோரி ‘வேட்டுவம்’ லுக்

இந்த படத்தை ரஞ்சித் உடன் இணைந்து பாலிவுட் தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி ஆகியோரும் தயாரிக்கின்றனர்.

விரைவில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். இதன் சூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.

அந்த படத்தலைப்பு தான் ‘வேட்டுவம்’ என கூறப்பட்டது.

ஆனால் கமல் நடிக்கவுள்ளது வேறு ஒரு படம் என்றும் ‘வேட்டுவம்’ படத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என தகவல்கள் வந்துள்ளன.

‘வேட்டுவம்’ படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்களாம்.

Is this the title of the Kamal – Ranjith movie?

கமல் புரொடக்ஷன்… ரஜினி பட டைட்டில்.; சிலிர்க்கும் சிவகார்த்திகேயன்

கமல் புரொடக்ஷன்… ரஜினி பட டைட்டில்.; சிலிர்க்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர் சிவகார்த்திகேயன். அவரின் படங்களில் ரஜினி சாயல் அதிகமாகவே காணப்படும். மேலும் தன் பேட்டிகளில் ரஜினியை பற்றி ஒருவார்த்தையாவது பேசாமல் இருக்க மாட்டார் சிவகார்த்திகேயன்.

அண்மையில் சிவா நடித்த டான் படத்தை ரஜினியும் பாராட்டி இருந்தார். அந்த செய்தியை நம் FILMI STREET தளத்தில் பார்த்தோம். படித்தோம்.

ரஜினியை அழவைத்த சிவகார்த்திகேயன்..; சூப்பரூ என பாராட்டிய சூப்பர் ஸ்டார்

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் SK20 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

சோனி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை கமல் தயாரிக்கிறார்.

இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்திற்கு `மாவீரன்’ என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சமீபத்தில் ஒரு பிரபலமும் தன் பேட்டியில் இதை தெரிவித்து இருந்தார்.

1986ல் இளையராஜா இசையில் ரஜினி நடித்த படத்திற்கு ‘மாவீரன்’ என்ற தலைப்பு வைத்திருந்தனர். இப்படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார்

கமல் தயாரிப்பில் தன் தலைவர் ரஜினி படத்தலைப்பில் நடிப்பது என்றால் சிவகார்த்திகேயனுக்கு சிலிர்க்காதா என்ன?

Kamal Production… Rajini Movie Title .; Thrilling Sivakarthikeyan

பிரபுசாலமன்-அஸ்வின் கூட்டணியில் சீரியஸ் ரோலில் கோவை சரளா

பிரபுசாலமன்-அஸ்வின் கூட்டணியில் சீரியஸ் ரோலில் கோவை சரளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ என காதல் சொட்டும் திரைப்படங்களை இயக்கியவர் பிரபு சாலமன்.

இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ’காடன்’.

பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

தற்போது ‘கும்கி 2’ படத்தை இயக்கியுள்ளார்.

கும்கி 2 படத்திற்காக தாய்லாந்தில் குட்டி யானையை பிடித்த பிரபுசாலமன்

இந்த நிலையில் தன் அடுத்த படமான ’செம்பி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்த படத்தில் காமெடி நடிகையான கோவை சரளா மிகவும் சீரியஸான ரோலில் நடித்துள்ளார்.

இவருடன்’குக் வித் கோமாளி’ அஸ்வின், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் கதைதான் நாயகன் என்றும் தனியாக நாயகன் நாயகி என்றும் யாரும் இல்லை என தெரிய வந்துள்ளது.

Kovai Sarala in a serious role in the Prabhu solomon -Aswin film

‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ்.: உதயநிதி ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் அநீதி

‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ்.: உதயநிதி ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் அநீதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் ‘நெஞ்சுக்கு நீதி’.

போனிகபூர் தயாரிப்பில் அருண் ராஜா இயக்கிய இந்த படம் நேற்று ரிலீசானது.

திமுக கட்சித் தொண்டர்கள் இலவசமாக இந்த படத்தை பார்க்க முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் ஒரு பிரபல தியேட்டரில் அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்தன. நம் தளத்தில் இதன் விமர்சனத்தை படித்திருப்பீர்கள்.

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் 3.5/5.. உஷாரான உதயநிதி

இந்த படத்தை உதயநிதி ரசிகர்கள் மற்றும் திமுக கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைத்துள்ளனர்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறைய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது குமரி மாவட்டத்தில் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த கட் அவுட்களால் நிச்சயம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பலத்த காற்றால் எந்த நேரமும் பேனர்கள் சரிந்து விழ வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்திலேயே வண்டிகளை ஓட்டி வருகின்றனர்.

கட் அவுட் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உயர்நீதிமன்றம், சாலையோரங்களில் கட் அவுட் வைக்கக்கூடாது என உத்தரவு போட்டது.

ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதாலும் உதயநிதி எம்எல்ஏ ஆக இருப்பதாலும் இதனை காவல்துறை கண்டுக்காமல் செல்கிறது.

மேலும் பல பேனர்களில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் படங்கள் உள்ளதால் பேனரை அகற்றாமல் போலீஸாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

ஆனால் பேனர் விழுந்தால் பாதிக்கப்படுவது மக்கள்தானே…

மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘நெஞ்சுக்கு நீதி’ படம் மூலம் அநீதி ஏற்படாமல் தடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்..?

Nenjukku Needhi release : Injustice done by Udayanithi stalin fans to the people ?

More Articles
Follows