பாண்டியன் ஃபார்முலா ரிப்பீட் : புதுவையில் ரஜினி.; நெல்சனுக்கு நெருக்கடி.; ‘ஜெயிலர்’-க்கே போலீஸ் பாதுகாப்பு

பாண்டியன் ஃபார்முலா ரிப்பீட் : புதுவையில் ரஜினி.; நெல்சனுக்கு நெருக்கடி.; ‘ஜெயிலர்’-க்கே போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த வரும் ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், குட்டி ரித்விக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஆகஸ்ட்டில் இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்ற வருகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஷூட்டிங்கில் சில காட்சிகள் லீக்கானது.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் ‘ஜெயிலர்’ சூட்டிங் நடந்து வருகிறது. புதுவைக்கு அருகே அழகியநத்தம் கிராமத்தில் நடந்து வருகிறது.

ரஜினி பட சூட்டிங் நடப்பதை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

இதனால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதுச்சேரி காவல்துறை மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

1990களில் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் பட சூட்டிங்பை பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளில் நடத்தினார் எஸ்.பி. முத்துராமன். அங்கு வில்லனை ரஜினிகாந்த் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது .

அப்போது ரஜினியை பார்க்க ஆயிரம் கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இந்த சம்பவம் அப்போதே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோ – அரேபிய கூட்டணியில் மஞ்சு வாரியர்.; 70% வெளிநாட்டினர் நடித்த படம்

இந்தோ – அரேபிய கூட்டணியில் மஞ்சு வாரியர்.; 70% வெளிநாட்டினர் நடித்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.

பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது.

இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.

மேலும் இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை. பிரபல நடிகரும் ,இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் உலகளாவிய கவனத்திற்கு இந்த நடனமும் ஒரு முக்கிய காரணி. அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.

‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார்.

விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்தோ -அரேபிய கூட்டுத் தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது.

இதனால் இந்திய கலைஞர்களும், படைப்பாளிகளும் சர்வதேச அளவிலான கவனத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manju warriors starrer Indo Arabian movie Aayisha

‘டெவில்’ படத்திற்கு இசையமைக்கும் இயக்குனர் மிஷ்கின்

‘டெவில்’ படத்திற்கு இசையமைக்கும் இயக்குனர் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமைக் கொண்டவர் மிஷ்கின். இவர் தற்போது இசையமைப்பாளராக மாறி இருக்கிறார்.

அது பற்றிய விவரம் வருமாறு…

தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘டெவில்’ என்ற படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஆதித்யா எழுதி இயக்கும் இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் மிஷ்கினும் நடித்துள்ளார்.

தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடைபெறும் எனத் தெரிகிறது.

Director Mysskin is the music for Devil

எல்லாம் நேரத்தில் வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமை – விக்னேஷ் சிவன்

எல்லாம் நேரத்தில் வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமை – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

திருமணமான 4 மாதங்களில் அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

அதில்….

‛உங்களிடம் அக்கறை செலுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள். அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்’

இன்னொரு பதிவில்…

‛எல்லாம் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Everything will arrive in time says Vignesh Sivan

‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவுடன் இணையும் இயக்குனர் சீனுராமசாமி

‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவுடன் இணையும் இயக்குனர் சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்றவர். இயக்குனர் சீனு ராமசாமி.

விரைவில் இவரது இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம் உருவாகவுள்ளது.

‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக ‘கேசினோ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்திலான தம்முடைய அடுத்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்திலான நல்ல ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.

வரும் டிசம்பரில் தொடங்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் நடைபெற்று வரு நிலையில், அவை குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

இன்று அக்டோபர் 13ஆம் தேதி இயக்குனர் சீனுராமசாமியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Seenuramasamy joins the hero of ‘Mehandi Circus’

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம்?

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மணிரத்னம் ரஜினிக்கு மிகவும் பிடித்த ஒரு கதைக்களத்தை விவரித்ததாகவும், இந்த படம் 2023 இன் பிற்பகுதியில் தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியான பிறகு கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிளாசிக் காம்போ மீண்டும் ஒன்றிணைவதற்கும் பெரிய திரையில் மேஜிக்கை உருவாக்குவதற்கும் அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

More Articles
Follows