தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’.
இப்படத்தை முதல் படமாக தயாரித்துள்ள அரசு பிலிம்ஸ், தனது இரண்டாவது படத்தையும் விரைவில் தொடங்கவுள்ளது.
‘மன்னர் வகையறா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
இவர் தனுஷின் சூப்பர் ஹிட் படங்களான தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர்.
தற்போது இயக்கவுள்ள ‘மன்னர் வகையறா’ படத்தில் விமல், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சந்தானம் மற்றும் சூரியுடன் இதுநாள் வரை இணைந்த விமல் இப்படத்தின் மூலம் ரோபோ சங்கருடன் கைகோர்க்கிறார்.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் இசையமைக்கிறார்.
முதல் பிரதி அடிப்படையில் விமல் இப்படத்தை தயாரிக்கிறாராம்.
ஜூன் 20 முதல் இதன் சூட்டிங் சென்னையில் துவங்குகிறது.