தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை… என்பது போல ஆயிரம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் பாஸ் நான்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்.
கபாலி திரைப்படம் உலகளவில் கிட்டதட்ட 9,000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முதல் நாள் மட்டும் வசூல் உலகளவில் ரூ. 104 கோடியை எட்டியுள்ளதை தயாரிப்பாளர் தாணு உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 21 கோடி வரை வசூலித்துள்ளது.
இரண்டாவது நாளான சனிக்கிழமை ரூ. 15.8 கோடியையும் ஞாயிற்றுக்கிழமை ரூ. 14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆகமொத்தம் தமிழகத்தில் மட்டும் ரூ. 50 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.
இதுவரை எந்தவொரு படமும் தமிழகத்தில் இச்சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழத்தை தவிர்த்து இந்தியாவில் மட்டும் ரூ 67.5 கோடியை வசூல் செய்துள்ளது.
முதல் மூன்று நாட்களில் வெளிநாடுகளில் கபாலியின் வசூல் விவரம்….
- அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.27 கோடி
- பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரூ.4.25 கோடி
- மலேசியாவில் ரூ.14 கோடி
- சிங்கப்பூரில் ரூ.5 கோடி
- ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ரூ.23 கோடி
- மற்ற நாடுகளில் ரூ.10 முதல் ரூ.12 கோடி
- ஆக மொத்தம் ரூ.85 கோடிவரை வசூல் செய்துள்ளது.
வட அமெரிக்காவில் வெளியான இரண்டே நாட்களில் 3.5 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.24 கோடி) வசூலித்துள்ளது.
அதாவது ‘பாகுபலி’க்கு அடுத்த இரண்டாவது தென்னிந்தியப் படமாக கபாலி இருக்கிறது.
மேலும் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 185-200 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி (ஜீலை 22-24) வரை உலகளவில் கபாலி 6வது இடத்தை பெற்றுள்ளது. அதன் வசூல் விவரம்…
1. #StarTrek – $89.6M
2. #Tarzan – $51.1M
3. #IceAge – $51M
4. #Skiptrace – $44M
5. #TSLOP – $39.3M
6. #Kabali – $32M