தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி முதல் நாள் முதல் காட்சி… இதுவே பெரும்பாலோரின் பேச்சாக இருந்து வருகிறது.
கபாலி முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா? என எங்கும் ஒலிக்கும் குரல்களை கேட்க முடிகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வெளிநாட்டு ப்ரீமியர் புக்கிங் நேற்று தொடங்கி விட்டது.
தொடங்கிய அடுத்த நிமிடம் அனைத்து காட்சிகளும் புக்காகி விட்டது.
இவையில்லாமல் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இத்தகவல் வெளியான உடன் பலரும் அந்த இணைய தளத்தில் குவிய அடுத்த நொடியே அந்த தளமே முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
முன்பதிவிலேயே ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து அரங்குகளிலும் முன்பதிவு தொடங்கிவிட்டால் கபாலி முன்பதிலும் சாதனை படைக்கும் என கோலிவுட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.