காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியில் தேர்வான 66 நபர்களுடன் ஒரு கலந்துரையாடல்

காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியில் தேர்வான 66 நபர்களுடன் ஒரு கலந்துரையாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaatrin mozhiகாற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.

இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர்.

இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

பாப்டா நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் தயாரித்து, ஜோதிகா நடித்து, ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சண்முக ராஜா மீது பாலியல் புகார்; திடீர் பல்டி அடித்த நாட்டாமை டீச்சர்

சண்முக ராஜா மீது பாலியல் புகார்; திடீர் பல்டி அடித்த நாட்டாமை டீச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanmuga rajan and raniஒரு சில படங்களில் நாயகியாக நடித்தாலும் நாட்டாமை படத்தில் இடம் பெற்ற டீச்சர் கேரக்டர் மூலம் பிரபலமானவர் ராணி.

பின்னர் விக்ரமுடன் ஓ போடு என ஆட்டமும் போட்டு இருந்தார்.

இவர் தற்போது நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி தயாரிப்பில் நந்தினி என்ற டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

இதில் தனக்கு கணவனாக நடித்த சண்முகராஜா என்ற வில்லன் நடிகர் நடிப்புக்காக தொடாமல் நிஜமாகவே தன்னை தொட்டு பாலியல் தொல்லை கொடுப்பதாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் சண்முகராஜா பாலியல் வழக்கில் கைதாகும் நிலை உருவானது.

இதனையடுத்து சில மணி நேரங்களில் சண்முகராஜா காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணியிடம் அவசர அவசரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சண்முகராஜா கைதானால் நந்தினி சீரியல் நின்று விடும் இந்த தொடரை நம்பி உள்ள 350 பேரின் குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் புகாரை வாபஸ் வாங்கும் படியும் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராணி பல்டி அடித்தார்

இதன் பின்னர் நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்த, சண்முகராஜாவோ, படப்பிடிப்பில் கைகலப்பு மட்டுமே நடந்தது பாலியல் தொல்லை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தேவர் மகன் 2 பட தலைப்பை மாற்றும் கமல்ஹாசன்

தேவர் மகன் 2 பட தலைப்பை மாற்றும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

devar magan 2மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

ஆங்காங்கே பொதுக் கூட்டங்களையும் நடத்தி பேசி வருகிறார்.

இதனையடுத்து சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், வரவேற்பதாக கூறினார்.

மேலும் தேவர் மகன்-2 படத்திற்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

வடசென்னை-யை வரவேற்க தனுஷுக்கு 120 அடி உயர கட்-அவுட்

வடசென்னை-யை வரவேற்க தனுஷுக்கு 120 அடி உயர கட்-அவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennaiதனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை படம் நாளை மறுநாள் அக். 17-ல் ரிலீஸாகிறது.

வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

3 பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தை மட்டும் தற்போது வெளியிடுகின்றனர்.

தனுஷ் & வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இதனை வரவேற்கும் விதமாக நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் அவருக்கு 120 அடி உயர கட் அவுட் வைத்திருக்கிறார்களாம்.

தனுஷ் படத்தை முடித்துவிட்டு *முண்டாசுப்பட்டி2* படத்தை இயக்கும் ராட்சசன் டைரக்டர்

தனுஷ் படத்தை முடித்துவிட்டு *முண்டாசுப்பட்டி2* படத்தை இயக்கும் ராட்சசன் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mundasupattiவிஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய படம் முண்டாசுப்பட்டி.

இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு ராட்சசன் படத்திற்காக இந்த கூட்டணி இணைந்தது.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் ‘ராட்சசன்’ பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் ராம்குமார்.

அதனை முடித்து விட்டு ‘முண்டாசுப்பட்டி’ இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடங்கவிருக்கிறார் ராம்குமார்.

ஹரீஷ் கல்யாண்-ஷில்பா மஞ்சுநாத் இணையும் *இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்*

ஹரீஷ் கல்யாண்-ஷில்பா மஞ்சுநாத் இணையும் *இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ispade rajavum idhaya raniyumவிஜய்சேதுபதியை வைத்து ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இவர் தனது இரண்டாவது படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’ என்று பெயர் வைத்துள்ளார்.

இதில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.

இவர் விஜய் ஆண்டனியுடன் ‘காளி’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

மாதவ் மீடியா நிறுவனமும், ரஞ்சித் ஜெயக்கொடி ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்க கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடந்து வரும் வேளையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

More Articles
Follows