மதன்கார்க்கி வரிகளில் குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல்

மதன்கார்க்கி வரிகளில் குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி இசைக்கலைஞர்களை ஆதரிப்பதற்காக, பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது.

அந்த வகையில் இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையில், பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் ‘அவனிடம் சொல்வேன்’ என்ற பாடல் இத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அவனிடம் சொல்வேன்

உலகெங்கும் போரின் தாக்கங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த அவலச் சூழலால் குழந்தைகளின் வாழ்க்கை எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதை ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுத்தும் வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை வடித்துள்ளார்.

இப்பாடலைப் பா மியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம்.

பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/-bvD-smNiKY

Avanidam Solven A Song Illuminating the Impact of War

நடிகர் மம்மூட்டியின் 10000 தபால் தலைகளை வெளியிட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

நடிகர் மம்மூட்டியின் 10000 தபால் தலைகளை வெளியிட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ‘இந்தியாவின் நாடாளுமன்ற நண்பர்கள்’ குழு என்ற அமைப்பு உள்ளது.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக இந்த அமைப்பு அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது நடிகர் மம்மூட்டியின் உருவம் கொண்ட 10 ஆயிரம் தபால் தலைகள் வெளியிட்டது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோராவிடம் முதல் தபால் தலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த மலையாள நடிகர் மம்முட்டியின் ரசிகர்கள் இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Australian parliament honours Mammootty releases personalized postal stamps

ரஜினியின் கழுகு கதையும் ரஜினியின் ‘கழுகு’ படமும்..; லியோ-வுடன் இப்படி கனெக்ட்டாச்சே.!?

ரஜினியின் கழுகு கதையும் ரஜினியின் ‘கழுகு’ படமும்..; லியோ-வுடன் இப்படி கனெக்ட்டாச்சே.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

என்னதான் காக்கா கழுகை தொந்தரவு செய்தாலும் எதையும் கண்டுகொள்ளாத கழுகு மேலே உயர பறந்து கொண்டே இருக்கும் என்றார். இதனால் ரஜினிகாந்த் தன்னை கழுகாகவும் அவர் காக்கா என்று குறிப்பிட்டது நடிகர் விஜய் சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை உருவானது.

அதே சமயம் காக்கா என்பது கூடி வாழும்.. கழுகு எப்போதும் தனித்து தான் நிற்கும்.. என்றும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

அதன் பின்னர் ஜெயிலர் படம் வெளியாகி உலக அளவில் 700 கோடிக்கு மேல் வசூலித்தது.

ரஜினியின் இந்த பேச்சுக்கு ‘லியோ’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ‘லியோ’ படத்தின் இசை விழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று விஜய் நடித்த ‘லியோ’ படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் கழுகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. விஜய்யை லியோ-தாஸ் என அது அடையாளப்படுத்தும்.

கழுகை காட்டும்போது போது தியேட்டரில் கரகோஷம் எழுந்தது. அது ரஜினியை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கழுகு’ படத்தையும் லியோ படத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

ரஜினி நடித்த ‘கழுகு’ படத்தில் வில்லன் நரபலி கொடுப்பார்.்அதை ரஜனி தடுப்பதும் கதைக்களமாக இருந்தது.

அதே பழைய கதையை லியோ-வில் வில்லன் கேரக்டராக வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் ‘லியோ’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் ‘பொல்லாதவன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் பொல்லாதவன்.. பொய் சொல்லாதவன்.. நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்..” என்ற பாடல் ஒலிக்கும். இந்த காட்சியையும் ரசிகர்கள் குறிப்பிட்டு விஜய் ரசிகர்களை வச்சி செய்து வருகின்றனர்.

Rajini fans trolls Vijays Leo with Kazhugu movie story

பாலாஜி – ரச்க்ஷிதா ஜோடியுடன் உண்மை சம்பவத்தை இயக்கும் ஜே எஸ் கே

பாலாஜி – ரச்க்ஷிதா ஜோடியுடன் உண்மை சம்பவத்தை இயக்கும் ஜே எஸ் கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி முருகதாஸ், ரச்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர்.

பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜே எஸ் கே இயக்குநராக தற்போது அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் எழுதி இயக்கம் திரைப்படத்திற்கு ‘ஃபயர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.

பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ஃபயர்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த ஜே எஸ் கே, “இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும்.

தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது. இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல எனும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும்,” என்று கூறினார்.

மேற்கண்ட விஷயங்களை சிறிதும் சுவாரஸ்யம் குறையாமலும், அதே சமயம் சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் ஃபயர் எடுத்துரைக்கும் என்றும், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படமாக இது இருக்கும் என்றும் ஜே எஸ் கே மேலும் தெரிவித்தார்.

தனது ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ஃபயர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைக்க, சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை சுரேஷ் கல்லேரியும் கவனிக்க, பாடல்வரிகளை மதுர கவியும், ராவும் எழுதுகின்றனர். உடைகள் வடிவமைப்புக்கு டினா ரோசாரியோவும் மக்கள் தொடர்புக்கு நிகில் முருகனும் பொறுப்பேற்றுள்ளனர்.

பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரான ஜே எஸ் கே, தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘குற்றம் கடிதல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘தரமணி’, ‘புரியாத புதிர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘அண்டாவ காணோம்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆவார். இவர் மேலும் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

Producer JSK makes his debut as director with Fire

சிவகார்த்திகேயன் என் இடத்தை 10 வருஷம் கழிச்சு எடுத்துக்குங்க.; இமான் விவாகரத்தில் தனுஷ் பேச்சு வைரல்

சிவகார்த்திகேயன் என் இடத்தை 10 வருஷம் கழிச்சு எடுத்துக்குங்க.; இமான் விவாகரத்தில் தனுஷ் பேச்சு வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் கூட்டணி அமைந்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஹிட் பாடல்களும் மிக முக்கிய காரணமாக அமைந்தன .

ஆனால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படங்களுக்கு இமான் இசையமைக்கவில்லை.

இதற்கு பெரிதாக காரணங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டு வந்து நிலையில் சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் ஒரு துரோகி. இனி அவருடன் ஜென்மத்தில் இணைந்து பணி புரிய மாட்டேன். என்னுடைய குழந்தை நலனுக்காக அந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாது என தெரிவித்திருந்தார் இமான்.

ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால் இமானின் முதல் மனைவி மோனிகா இது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“சிவகார்த்திகேயன் ஒரு நல்ல நண்பர். இமான் குடும்பத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என நினைத்தவரை துரோகி என்று சொல்லலாமா? எனக் கேட்டிருந்தார்.

இதனால் சிவகார்த்திகேயன் இமேஜ் பெண்கள் மத்தியில் பெருமளவில் சரிவை ஏற்படுத்தியுள்ளது்

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் சில நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனையும் தனுஷையும் வைத்து கலாய்த்து வருகின்றனர்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பேசிய வீடியோவை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில்…

சிவா அவ்வளவு ஈசியா என் இடத்தை கொடுக்க மாட்டேன். நான் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இன்னொரு 10 வருஷம் கழித்து எடுத்துக்குங்க. இப்போ எனக்கு வேணும். இமானுக்கு வாழ்த்துக்கள்” என தனுஷ் பேசியிருந்தார்.

தற்போது இந்த வீடியோ வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விஜய் – நடிகை அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதுபோல இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் காரணம் எனக் கூறப்படும் நிலையில் இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து கமெண்ட்களை தெரிவித்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Imman fans trolls Dhanush and Sivakarthikeyan

நடிகர் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ சூட்டிங் அப்டேட்

நடிகர் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மம்மூட்டி தற்போது இயக்குனர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘பிரமயுகம்’ நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைத்துள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘பிரமயுகம்’ திரைப்படம் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படப்பிடிப்பு ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘பிரமயுகம்’ படத்தின் படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

Mammootty starrer ‘Bramayugam’ shoot wraps up

More Articles
Follows