தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
18 வருடங்களுக்கு முன்பு வெளியாகி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் ‘சந்திரமுகி’.
ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன் சார்பாக பிரபு தயாரிக்க பி வாசு இயக்கிருந்தார்.
வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.
தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரே தொடர்பு பி வாசு மற்றும் வடிவேலு தான்.
மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கேரக்டர்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடையாத காரணத்தினால் அதன் ரிலீஸ் செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.
Ragava Lawrence got blessing from Rajinikanth