2ஆம் சந்திரமுகியை பாராட்டிய முதல் சந்திரமுகி.; படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

2ஆம் சந்திரமுகியை பாராட்டிய முதல் சந்திரமுகி.; படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டில் பி வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா வடிவேலு, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.

இந்த படம் ஒரே திரையரங்கில் 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது.

தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் பி வாசு.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க எம் எம் கீரவாணி இசை அமைத்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கங்கா ரனாவத், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, மகிமா நம்பியார், சுபிக்ஸா, சிருஷ்டி டாங்கே, லட்சுமிமேனன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தைப் பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,

” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன்.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள்.

நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி. வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

சந்திரமுகி 2

Chandramukhi 2 release date pushed to 28th September

JUST IN முதல் நாளிலேயே 130 கோடியை வசூலித்த ‘ஜவான்’.; ஷாருக் – அட்லி ஹாப்பி

JUST IN முதல் நாளிலேயே 130 கோடியை வசூலித்த ‘ஜவான்’.; ஷாருக் – அட்லி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தயாரித்து நடித்த ‘ஜவான்’ படம் வெளியானது.

இந்த படத்தை தமிழக இயக்குனர் அட்லி இயக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைக்க ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு இருந்தார்.

எனவே ஜவான் படத்தின் வெற்றிக்காக ஹிந்தி ரசிகர்களைப் போல தமிழக ரசிகர்களும் காத்திருந்தனர்.

இந்த படம் ஹிந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே அட்லீ இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் பல படங்களை காப்பி அடித்து எடுப்பதாக குற்றச்சாட்டு எழுவது வழக்கம். எனவே ‘ஜவான்’ படத்திற்கும் பல விமர்சனங்கள் எழுந்தன.

பத்திரிகையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ‘ஜவான்’.

இந்த நிலையில் இந்த படம் உலக அளவில் நேற்று 129.6 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. ஹிந்தி சினிமா வரலாற்றில் இது மிகப்பெரிய ரெக்கார்டு எனவும் கூறப்படுகிறது.

Jawan movie crossed Rs 130cr collection in box office

இயக்குனர் நடிகர் மாரிமுத்து மறைவு.; ரஜினி சிம்பு கார்த்தி விஷால் உள்ளிட்டோர் இரங்கல்

இயக்குனர் நடிகர் மாரிமுத்து மறைவு.; ரஜினி சிம்பு கார்த்தி விஷால் உள்ளிட்டோர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.

இவர் பல படங்களில் நடித்துள்ளார். ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.

இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளது மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், சிம்பு, கார்த்தி, விஷால் உள்ளிடோர் தங்கள் சமூக வலைதளத்தில் மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் பதிவில்,

“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என்று பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிம்பு பதிவில்,

என பகிர்ந்துள்ளார்.

நடிகர் கார்த்தி பதிவில்,

என பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஷால் பதிவில்,

rajini simbu karthi vishal mourn the demise of actor Marimuthu

இசையமைப்பாளருக்கு இது முதன்முறை.. அது பொக்கிஷம்.; ‘ஜெயிலர்’ சக்சஸ் குறித்து அனிருத்

இசையமைப்பாளருக்கு இது முதன்முறை.. அது பொக்கிஷம்.; ‘ஜெயிலர்’ சக்சஸ் குறித்து அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் உலகளவில் 600 கோடிக்கு மேல் வசூலித்து இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

இருந்தபோதிலும் மக்கள் ஆர்வத்துடன் தியேட்டர்களிலும் கண்டு களித்து வருகின்றனர். படத்தின் மிகப்பெரிய வெற்றியை முன்னிட்டு நடிகர் ரஜினி, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்திருந்தார் சன் டிவி கலாநிதி மாறன்.

தனக்கு கிடைத்துள்ள விலை உயர்ந்த கார் பற்றி நடிகர் அனிருத் சமீபத்தில் பேசுகையில்…

“என்னிடம் பலரும் ‘விக்ரம்’ படத்தில் இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்பட்டது உங்களுக்கு ஒன்றுமில்லையா என்று கேட்டனர். அது போல சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்திற்கும் கேட்டனர். தற்போது ஜெயிலர் படத்திற்காக கார் கிடைத்துள்ளது.

என்னைப் பொருத்தவரை எனக்கு ‘விக்ரம்’ படம் கிடைத்ததே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். அது போல ‘ஜெயிலர்’ படம் கிடைத்ததும் மிகப்பெரிய சந்தோஷம்தான்.

பொதுவாக படத்தின் வெற்றிக்கு காரணமான நடிகர் இயக்குனர்களுக்கு பரிசுகள் கிடைத்திருக்கிறது. முதன்முறையாக ஒரு இசை அமைப்பாளருக்கு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த கார் எனக்கு ஒரு பொக்கிஷம் போன்றது” என தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

Anirudh talks about Car gift for Jailer success

என் கவிதைகளின் உயிருள்ள ஒழிப்பேழை அவன்.; மாரிமுத்து திருமணத்தை நடத்தி வைத்தேன்.; வைரமுத்து இரங்கல்

என் கவிதைகளின் உயிருள்ள ஒழிப்பேழை அவன்.; மாரிமுத்து திருமணத்தை நடத்தி வைத்தேன்.; வைரமுத்து இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெயிலர்’, ‘இந்தியன் 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.

இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளது மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.
.
நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில்,

“தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Vairamuthu mourn the demise of actor Marimuthu

சொப்பனத்தில் கூட யோசிக்கல.. ‘ஜெயிலர்’ டயலாக் நிஜமாச்சு.; விநாயகன் நெகிழ்ச்சி

சொப்பனத்தில் கூட யோசிக்கல.. ‘ஜெயிலர்’ டயலாக் நிஜமாச்சு.; விநாயகன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது.

உலகளவில் ரூ. 625 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கினார்.

செப்டம்பர் 7 தேதி முதல் ‘ஜெயிலர்’ படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “நான் 15 நாட்களாக ஒரு வனப்பகுதியில் இருந்தேன். அங்கிருந்து திரும்பி ஊருக்கு வரும்போது எண்ணற்ற மிஸ்டு கால் வந்துட்டே இருந்தது. அப்போது, புரொடக்ஷன் சைடில் இருந்து போன் வந்தது. ரஜினி சார் படத்தில் நடிக்கணும், நெல்சன் இயக்குனருனு. ரஜினி சார் படம்னு சொன்னவுடன் கதை கேட்கணும் அவசியம் இல்ல. ஓகேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும், நெல்சன் பேசுனாரு, கேரக்டருடைய ஸ்ட்ரெக்சர் இதுதான் சொன்னார். நீங்க தான் முக்கியமான வில்லன்னு சொன்னார். அப்படி தான் படத்தில் வந்தேன்.

அந்த வர்மன் கேரக்டர், நல்ல வந்ததுக்கு முக்கியக்காரணம் ரஜினிசார் தான். சொப்பனத்தில் கூட யோசிக்கலன்னு படத்தில் ஒரு டயலாக் வரும் அப்படி ஒரு பாப்புலாரிட்டிதான் இப்போ எனக்கு கிடைச்சிருக்கு. படத்தில் நடிக்கும்போதும், மிக சந்தோஷமாகத் தான் நடித்தேன். நெல்சன் ரொம்ப நன்றிப்பா, ரஜினிசார் மறக்கமாட்டேன். கலாநிதி மாறன் சாருக்கு ரொம்ப நன்றி” என்று பேசினார்.

vinayakan about rajini’s jailer and his character varman

More Articles
Follows