கஜா தாக்கிய மக்களுக்கு கரம் கொடுக்கும் *காற்றின் மொழி* படக்குழு

கஜா தாக்கிய மக்களுக்கு கரம் கொடுக்கும் *காற்றின் மொழி* படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DsbNWN7UwAAdECN‘காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

இந்த சமயத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ‘டெல்டா’ பகுதி மக்களுக்கு நீங்கள் ‘காற்றின் மொழி’ திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.

இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு ‘காற்றின் மொழி’ டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் ‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.

மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிக்கி தவித்த அமலாபால்

மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிக்கி தவித்த அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adho Andha Paravai Pola movie will be an Adventure Thrillerசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல.

அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார்.

கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை போல’.

அமலாபால் கதைநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார்.

காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அத்துடன் ஐ.பி.எல் வர்ணனையாளரும், ஜனத், ஹவுஸ்ஃபுல் 3, டேஞ்சரஸ் ஐசக் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் அமலாபாலுக்கு நெருக்கமானவராக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரம் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.

இவர் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். மேலும் சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் வினோத் பேசும் போது…

‘படத்தின் பெரும்பகுதி வனப்பகுதிகளி்ல் உருவாவதால், அங்குள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் வடமாநிலக் காடுகளில் படத்தை உருவாக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. படத்தில் அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக்குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்பு அளித்தது பாராட்டுக்குரியது.

ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்.

அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. தேவையில்லாமல் எந்த காட்சிகளும் எடுக்கக்கூடாது என்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரும் ஒன்றாகப் பேசி முன்பே திட்டமிட்டோம்.

படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவை. அந்த காட்சிகள், ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்கும்.

அடர்ந்த காடுகளில் படத்தை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமான காரணம். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

Adho Andha Paravai Pola movie will be Adventure Thriller

Adho Andha Paravai Pola Stills

தனுஷ்-விஜய்சேதுபதியுடன் மோதல்.; *அடங்கமறு*க்கும் ஜெயம் ரவி

தனுஷ்-விஜய்சேதுபதியுடன் மோதல்.; *அடங்கமறு*க்கும் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adangamaru movie clash with Maari2 and Seethakathi on Christmas eveகார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடங்க மறு’.

ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் முன்னதாக டிசம்பர் 21-ஆம் தேதியே ரிலீஸாகவுள்ளது.

அடங்கமறு ரிலீசாகும் அதே வாரத்தில் தனுஷின் மாரி 2, விஜய்சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Adangamaru movie clash with Maari2 and Seethakathi on Christmas eve

நடிகர் சிவகுமாரை காதல் திருமணம் செய்த சுஜா வருணி

நடிகர் சிவகுமாரை காதல் திருமணம் செய்த சுஜா வருணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suja varunee and shiva kumarப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சுஜா வருணி,

மிளகா, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி.

இவர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்பவரை காதலித்து வந்தார்.

இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவர்களது திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இவர்களின் திருமண நிகழ்வில் நடிகர் சிவக்குமார், கணேஷ் வெங்கட்ராம், அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் விஷ்ணு வர்தன், சினேகன், ஸ்ரீப்ரியா, சுஹாசினி, ராதிகா சரத்குமார், விஜி சந்திரசேகர், , சந்தியா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

சிவாஜி தேவ் என்ற தனது இயற்பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் மணமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜா புயல் பாதிப்புக்கு ரூ. 20 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

கஜா புயல் பாதிப்புக்கு ரூ. 20 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gaja Relief Aid Sivakarthikeyan gives Rs 20 lakhs to relief fundஓரிரு தினங்களுக்கு தமிழகத்தின் கரையை கடந்த கஜா புயலால் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

இதன் காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும், 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனியாக ரூ. 10 லட்சம் நிதியை வழங்கியிருக்கிறார்.

Gaja Relief Aid Sivakarthikeyan gives Rs 20 lakhs to relief fund

ஏஆர். ரஹ்மான்-ஷாரூக்கான் கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

ஏஆர். ரஹ்மான்-ஷாரூக்கான் கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara and srk2018ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.

வருகிற நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை பிரபலப்படுத்தும் விதமாக ஜெய்ஹிந்த் இந்தியா என்ற ஆல்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.

இதற்கான புரொமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 45 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஷாரூக்கான், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான், டிரம்மர் சிவமணி, ஸ்வேதா மோகன் மற்றும் ஹாக்கி அணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

More Articles
Follows