காற்றின் மொழி-யை முதல் நாளே காண கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு

காற்றின் மொழி-யை முதல் நாளே காண கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaatrin mozhiஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாட்டை நேஷனல் கல்லூரி நிர்வாகமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை பற்றி கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான திருமதி. வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது. நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் , தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலுமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது உள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் யார் எதை பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவிவிடுகிறது. இந்த சூழலில் ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்ட சிறந்தவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான் எங்களுக்கு மிகப்பெரிய நல்ல தன்னம்பிக்கையாக உள்ளது . 36 வயதினிலே , மகளிர்மட்டும் போன்ற படங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் , எப்படி வாழ வேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு சொல்லியது.

மகளிர்மட்டும் திரைப்படத்தை கடந்த வருடம் நாங்கள் உட்பட எங்களது கல்லூரியிலுள்ள அனைத்து மாணவிகளும் கண்டுகளித்தோம் . அவர்கள் படம் பார்த்துவிட்டு,மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டி வந்தது போல் கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்று குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டோம் . மகளிர் மட்டும் எங்களது மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தந்தது. அதே போல் “ காற்றின் மொழியும் “ இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் இயக்குனர் ராதா மோகனின் “ மொழி “ எங்களுக்கு பிடித்த படம். என்றும் எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதே போல் காற்றின் மொழியும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தை தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை. ஆனால்,சினிமாவை பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு காற்றின் மொழி அதை அனைத்தையும், கண்டிப்பாக தரும் என்று நம்புகிறோம், என்று கூறினார்கள் .

மேலும் , சினிமாவில் எப்போதும் எந்த நேரத்திலும் நல்ல விஷயங்களை மட்டும் கையில்லெடுக்கும் நடிகை ஜோதிகாவை பாராட்டியே தீரவேண்டும்.அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர் சூர்யாவையும் பாராட்டுகிறோம்.

கமர்ஷியல் இல்லாமல் நம்மை அசத்த வரும் *அழியாத கோலங்கள் 2*

கமர்ஷியல் இல்லாமல் நம்மை அசத்த வரும் *அழியாத கோலங்கள் 2*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prakash raj and archanaபடம் ஆரம்பித்தது.

அர்ச்சனா தெரிந்தார்.

அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தது…

மெதுவாக ஆரம்பித்த படம் …

நட்பையும் காதலையும் இதை விட புனித படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தியது…

பிரகாஷ்ராஜ் வந்தார்..

நடித்தார் ..என்று சொல்ல முடியாது…

எழுத்தாளர் கதாபாத்தரத்தில் வாழ்ந்து விட்டார்..

போலீஸ் வேடத்தில் நாசர்…காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்து விட்டார்…

ஒரு பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற ரேவதி கதாபாத்திரம்…

இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து திரையின் நான்கு பக்கங்களையும் கெளரவப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் M.R.பாரதி…

அடிதடி இல்லை…குத்து பாட்டு இல்லை…காமெடி இல்லை.

டுயட் இல்லை…

இதெல்லாம் தான் கமர்ஷியல் பார்முலா என்றால்…

இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் என்றால் அதிசயம் தானே. அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள் 2 நிகழ்த்தி இருக்கிறது. கொண்டாட வேண்டிய படமே..இது

அர்ச்சனா ரேவதி பிரகாஷ்ராஜ் நாசர் இயக்குனர் M.R.பாரதி ஆகியோர் விருதுகளுக்கு தயாராக இருக்கட்டும்…

வாழ்த்துக்களுடன்

மௌனம்ரவி

குழந்தைகளை பயமுறுத்த விடுமுறையில் வரும் லாரன்ஸ்-ஓவியா

குழந்தைகளை பயமுறுத்த விடுமுறையில் வரும் லாரன்ஸ்-ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanchana 3கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..

முனி 3 – காஞ்சனா 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது…

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர….

மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

ஏப்ரல் மாதம் 18 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மௌன குரு இயக்குநரின் படைப்பில் மகாமுனி-யாகும் ஆர்யா

மௌன குரு இயக்குநரின் படைப்பில் மகாமுனி-யாகும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maga muniஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.
இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்.’ என்றார்.
மகாமுனி படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதன் போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநார் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் VJ சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.,மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் ,இயக்குநர்கள் M.ராஜேஷ், சந்தோஷ் P ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2D என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், மதன்(எஸ்கேப் ஆர்டிஸ்ட்), சக்திவேலன்.B(சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோரும் இந்நிகழ்வின் போது கலந்துகொண்டு சிறப்பித்தனர்

சினிமாவில் தடம் பதிக்க ஆசைப்படும் *சந்தோஷத்தில் கலவரம்* பட நிரந்த்

சினிமாவில் தடம் பதிக்க ஆசைப்படும் *சந்தோஷத்தில் கலவரம்* பட நிரந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nirandhசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘. இப்படத்தில் வித்தியாசமான நாயகன் பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளவர் நடிகர் நிரந்த்.

இவர் ஏற்கெனவே கன்னடத்தில் ‘லைப் பூ சூப்பர் ‘என்கிற கன்னட படத்தில் அறிமுகமானவர். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரின் நடை உடை பாவனைகள் பிடித்துப் போய் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி இவரை நடிகராக்கி விட்டார். அந்தப் படம் தான்’ லைப் பூ சூப்பர் ‘. அப்படத்தில நிரந்தின் நடிப்பைப் பார்த்த அதே திம்மா ரெட்டி ,தான் தமிழில் படம் தயாரிக்க முடிவு செய்த போது இவரையே முக்கிய நாயகன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் .

தமிழில் நாயகனாக அறிமுகமாவது பற்றி நிரந்த் கூறும்போது , “தமிழ்ச்சினிமா ரசிகர்கள் தோற்றத்தை விட திறமையை வரவேற்பவர்கள் ; ஆராதிப்பவர்கள் .அந்த நம்பிக்கையில்தான் நான் தமிழில் நடிக்க சந்தோஷமாக சம்மதித்தேன். திறமைக்கு மரியாதை தரும் தமிழில் தடம் பதிக்க எனக்கு ஆசை.

நான் இயக்குநர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிக்க வாய்ப்புகள் வந்தன. இதை விட மாட்டேன். எனக்கு எந்த வகையிலாவது சினிமாவில் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. நடிப்பைப் பொறுத்தவரை சினிமாவில் நான் ஒரு கதாநாயகன் என்றோ நட்சத்திரம் என்றோ நினைக்க மாட் டேன். நான் ஒரு நடிகன். அதுவும் இயக்குநரின் நடிகன் என்றிருக்கவே விருப்பம்.” என்கிற நிரந்த்துக்குச் சொந்த ஊர் பெங்களூர்.

தென்னக மொழிகள் அனைத்துமே சகோதர மொழிகள்தான் எனவே தமிழோ தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ கவலையில்லை. நல்லவனோ கெட்டவனோ கவலையில்லை கதாபாத்திரம் மட்டுமே தனக்கு முக்கியம் என்கிறார்.
இரண்டாவது படமாக நிரந்த் நடித்த கன்னடப் படம் ‘கார்ணி ‘வெளியாகி விட்டது. நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

சொல்லிக் கொள்ளும் படியான மாறுபட்ட வாய்ப்பாக ‘சந்தோஷத்தில் கலவரம் ‘படத்தில் நடித்திருக்கிறார்.
வாய்ப்புகள் பெருகட்டும். நிரந்த்தின் திரை வாழ்வில் நிரந்தரம் நிலவட்டும்.

ட்ரீம் வாரியர்ஸின் 21வது படத்தில் ஜோதிகா; எஸ்.ராஜ் இயக்குகிறார்

ட்ரீம் வாரியர்ஸின் 21வது படத்தில் ஜோதிகா; எஸ்.ராஜ் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothika2-வது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த ‘காற்றின் மொழி’. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், ஜோதிகாவை வைத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது 21-வது படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை இன்று (14.11.2018) நடத்தப்பட்டது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். இப்படத்தை அறிமுக இயக்குநர் S.ராஜ் இயக்குகிறார்.

இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை – ஸீன் ரோல்டன், ஒளிப்பதிவு – கோகுல் பென்னி, படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை – பவல் குமார், வசனம் – பாரதி தம்பி, சண்டைப்பயிற்சி – சுதேஷ், தயாரிப்பு நிர்வாகம் – அரவிந்த் பாஸ்கரன், மேலாளர்கள் – சிராஜ் & ராஜாராம் மற்றும் மக்கள் தொடர்பு – ஜான்சன்

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் மற்றும் SR பிரபு தயாரிக்கும் இவர்கள்- செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபால kumaran’ NGK படத்தை தயாரித்து வருகிறார்கள்.

More Articles
Follows