ஜோதிகா நடிக்கும் படத்தில் சின்ன வேடத்திலும் நடிப்பேன்.. : விதார்த்

ஜோதிகா நடிக்கும் படத்தில் சின்ன வேடத்திலும் நடிப்பேன்.. : விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidharth-and-jyothikaதனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “காற்றின் மொழி”.

இப்படம் வருகிற நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.

கலை இயக்குநர் கதிர் பேசும்போது:-

தொடர்ந்து ராதாமோகனிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர் கூறியபோது குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கு எல்லோரும் உதவி புரிந்தார்கள்.

எழுத்தாளர் பார்த்திபன் பேசும்போது:-

‘மொழி’ படம் பார்த்துவிட்டு ராதாமோகனின் ரசிகனாக பேசினேன். அவருடைய படத்திற்கு இப்படத்திற்கு எழுத வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. முழுக்க முழுக்க ஜோதிகாவுடைய ஆதிக்கம் தான். நடிப்பில் ராக்ஷஸி போல நடித்திருந்தார். இவ்வாறு எழுத்தாளர் பார்த்திபன் பேசினார்.

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பேசும்போது:-

இந்த படம் நான் பணியாற்றிய படங்களிலேயே இந்த படம் தான் அமைதியாக பணியாற்றினேன். ஒவ்வொரு படம் பணியாற்றும்போதும் பயத்தோடுதான் பணியாற்றுவோம். விஜயலட்சுமி கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். லட்சுமி என்ன உடை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்.

நடன இயக்குனர் விஜி சதீஷ் பேசும்போது:-

லட்சுமி மஞ்சு இருந்தாலே அந்த சூழ்நிலையே கலகலப்பாக இருக்கும். ராதாமோகனுடன் இரண்டாவது படம். ஜோ வுக்கு செனோரீட்டா பாடலுக்கு பிறகு நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ராதாமோகன் ஜோவுடன் என்று கூறியவுடனேயே அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஜோதிகா மிகவும் திறமையானவர். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே 4 மடங்கு நடிக்கக் கூடியவர் என்றார்.

விக்ரம் குமார் பேசும்போது:-

ராதாமோகன் இயக்கம், ஜோதிகா நடிக்கிறார் என்று கூறியவுடனேயே நான் எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டோம் என்றார்.

மனோபாலா பேசும்போது:-

நானும் எம்.எஸ்.பாஸ்கரும் செட் தோசை மாதிரி. படம் முழுக்க ஜோதிகாவை சுற்றியே நடக்கும். ஜோதிகாவுடன் நடிக்கம்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், பத்து மடங்கு பாவனை காட்டுவார்.

மகேஷ் பேசும்போது:-

எல்லோருடைய கனவு படம். எந்த தடையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. ராதாமோகன் படத்திலேயே மொழி தான் எனக்கு மிகவும் பிடித்த படம். திரைக்கதை நன்றாக வந்திருக்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது:-

ராதாமோகனின் அனைத்துப் படங்களிலும் நான் இருப்பேன். அப்படி இல்லாமல் போனால் அதற்கு நான் தான் காரணம். வேறு எங்காவது மாட்டிக் கொண்டிருப்பேன். எனக்கென்று ஒரு கதாபாத்திரத்தைக் கொடுப்பது வரப்பிரசாதம்.

மொழிக்கு பிறகு இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறேன். அவர் எனக்கு சொந்த தங்கை மாதிரி. அவர் கூறி எனக்கு ஒரு படம் கிடைத்தது. அன்பும், பாசமும் உள்ள ஒரு நண்பர் குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்றார்.

குமரவேல் பேசும்போது:-

இப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலான கலைஞர்கள் உடன் நான் ஏற்கனவே பணியாற்றியிருக்கிறேன். எனக்கு பெரும்பாலான காட்சிகள் ஜோதிகா மற்றும் லட்சுமி மஞ்சுவுடன் தான் இருந்தது.

இருவரும் எளிமையாகவும், சக நடிகரை மதித்து நடந்தார்கள். எனக்கு நடனம் வராது என்று கூறினேன். அதற்கு நடன இயக்குநர் நீங்கள் ஆட வேண்டாம். நடந்தது வந்தால் போதும் என்று சொன்னார். காட்சியைப் பார்த்தபோது பொருத்தமாக இருந்தது என்றார் என்றார்.

ரூபன் பேசும்போது:-

என் சகோதரர் படத்தைப் பர்த்து விட்டு ரசிக்கும்படியாக இருக்கிறது என்றார்.

லட்சுமி மஞ்சு பேசும்போது:-

இந்த படத்தில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால் என்னால் கூற முடியாது. நடித்த அனுபவமே இல்லாமல் முழுக்க முழுக்க வேடிக்கையாகத் தான் இருந்தது. ஜோதிகாவின் மிகப் பெரிய ரசிகை.

இருப்பினும், ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இப்படத்தில் என்னைத் தவிர யாரும் நன்றாக இருந்திருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு என்னுடைய கதாபாத்திரம் நன்றாக அமைந்திருக்கும். தமிழ் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வளர்ந்தது இங்கு தான் என்றார்.

விதார்த் பேசும்போது:-

தனஞ்செயன் என்னிடம் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா? என்று கேட்டார்.

ராதாமோகன் இயக்கத்தில் நடிப்பதற்கு கனவோடு இருந்தேன். அதேபோல என் அம்மாவிற்கும், மனைவிக்கும் பிடித்த நடிகை ஜோதிகா. ஆகையால் உடனே ஒப்புக் கொண்டேன்.

ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போதே ஏன் நான் ஒப்புக் கொண்டேன் என்று பயந்தேன். அந்தளவுக்கு என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றார்.

மேலும், குமரவேலிடம் ராதாமோகனைப் பற்றி கேட்டேன், அவர் எப்படிப்பட்டவர்? கோபப்படுவாரா? அப்படியெல்லாம் கிடையாது என்று கூறினார். இருந்தும் கொஞ்சம் பயத்துடனே படப்பிடிப்பிற்கு சென்றேன்.

அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை. ஆனால் முதல் ‘டேக்’ கிலேயே சரியாக வந்தது.

அதேபோல படப்பிடிப்பைத் தவிர்த்து ஜோதிகா எப்படி பழகுவார்? என்று சந்தேகம் இருந்தது. ஆனால், அவரோ என்னை ‘ஜோ’ என்றே கூப்பிடுங்கள் என்று மிகவும் எளிமையாக பழகினார்.

இந்த படத்தில் நான் நன்றாக நடித்தேன் என்றால் அதற்கு ‘ஜோ’ தான் காரணம். ஜோதிகாவிற்கு இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும்.

அடுத்த படத்தில் சிறிய வேடமென்றாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். மிகவும் சிரமப்பட்டு நடனமாடியிருக்கிறேன் என்றார்.

தனஞ்செயன் பேசும்போது:-

BOFTA -வில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக கூறுவேன். ஏனென்றால், இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தயாராக இருந்தால்தான் ஒரு படம் இவ்வளவு வேகமாகவும், இடைவெளி இல்லாமலும் குறுகிய காலத்தில் உருவாக முடியும். அதிலும் ஜோதிகாவிடம் நடிக்க கேட்கும்போதே அவர் உடனே ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்புக்கான தேதிகளையும் தாராளமாக கொடுத்தார். அதேபோல அனைத்துக் காட்சிகளையும் ஒரே ‘டேக்’கில் நடித்து முடித்துவிட்டார்.

மேலும், இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்றார்.

தீபாவளிக்கு தளபதியுடன் தல ரசிகர் மோதல்; பொங்கலுக்கு அஜித்துடன் விஜய் ரசிகர் மோதல்

தீபாவளிக்கு தளபதியுடன் தல ரசிகர் மோதல்; பொங்கலுக்கு அஜித்துடன் விஜய் ரசிகர் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay-and-ajithநாளை தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது.

இதற்கு போட்டியாக அஜித் ரசிகராக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி திரைப்படமும் வெளியாகிறது.

இத்துடன் விமல் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படமும் வெளியாகிறது.

அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வெளியாகிறது.

அதற்கு போட்டியாக விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர்.

இன்று காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். மாலை டீசர் வெளியாகவுள்ளது.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார்.

கடவுளின் குழந்தை என ரஜினி பாராட்டிய ஏஆர். ரஹ்மான் தற்கொலைக்கு முயன்றது ஏன்.?

கடவுளின் குழந்தை என ரஜினி பாராட்டிய ஏஆர். ரஹ்மான் தற்கொலைக்கு முயன்றது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman contemplated suicide till he was 25அண்மையில் நடைபெற்ற 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானை கடவுளின் குழந்தை என பாராட்டினார் ரஜினிகாந்த்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் வென்று சாதித்த ஏஆர். ரஹ்மான் அவர்கள் தன் வாழ்க்கையில் 25வது வயதில் தற்கொலைக்கு முயன்றாராம். அது பற்றிய விவரம் வருமாறு….

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்றால் ஒரு புத்துணர்ச்சி, ஒரு உத்வேகம், ஒரு ஊக்கம். இப்படிப்பட்ட‌ இசையையும் தந்து, இனிமேல் ஏதேனும் வேண்டுமா என்றளவுக்கு வெற்றிகளையும் குவித்து உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், வாழ்க்கையில் ஒரு இருண்ட காலம் இருந்திருக்கிறது.

“எனது 25வது வயது வரை தற்கொலை செய்வது பற்றி அடிக்கடி சிந்தித்திருக்கிறேன்.

என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அப்போது இருந்ததில்லை. என் தந்தை இறந்ததும், வேறு சில நிகழ்வுகளும், ஒரு வெறுமை நிலைக்கு என்னை அழைத்துச் சென்றது.

ஆனால், அந்த தருணங்கள், ஒருவகையில் என் அச்சத்தை போக்கின. நான் வேறு ஒருவனாக மாற வேண்டும் என விரும்பினேன்.” என்று Notes of a Dream என்ற தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மனம் திறந்தார் ஏ.ஆர். இந்த புத்தகத்தை எழுத்தாளர் கிருஷ்ணா திரிலோக் எழுதியுள்ளார்.

மேலும், ” நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முதலில், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் உள் மனம் சொல்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அது கொஞ்சம் கடினமான விஷயம். எனக்கு என் அசல் பெயரான திலிப் குமார் என்ற பெயர் பிடிக்கவில்லை…

ஏன் அந்தப் பெயரை வெறுத்தேன் என்றும் எனக்குத் தெரியவில்லை.என் ஆளுமைக்கு அந்தப் பெயர் சரிப்பட்டு வரவில்லை என்பதை உணர்ந்தேன்…

நான் வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன், அந்தப் பெயர் என் முழு இருப்பையும் விளக்குவதாக அமைய வேண்டும் என்று நினைத்தேன்.

கடந்தகாலச் சுமைகளை இறக்கி விட்டு வர விரும்பினேன். பெயர் உட்பட.

நீங்கள் யார் என்பதை தோன்றச் செய்து அதனை வெளியே விட வேண்டும்.

ஆகவே உங்கள் மன ஓவியப் புத்தகத்தில் நீங்கல் கருத்துச் சித்திரம் வரையும் போது உங்களைப் பற்றி நிறைய சுயபரிசீலனைகள் தேவை.

உங்களில் நீங்கள் ஆழமாக இறங்கிச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. உங்கள் அகத்தின் குரலை நீங்கள் கேட்க வேண்டும், அது கடினமானது.

ஒருமுறை இதைச் செய்துவிட்டால் நாம் தொலைந்து போய் நம்மையே மறந்து விடுவோம்.

நான் என்னுள் ஆழமாக இறங்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கும், நான் எதார்த்தத்துக்கு திரும்புவேன், ஆனால் நான் மீண்டும் என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல் போகும்.

அதனால்தான் நான் அதிகாலை 5 அல்லது 6 மணி அல்லது நள்ளிரவுகளில் பணியாற்றுகிறேன். செய்ததையே செய்து கொண்டிருந்தால் சோர்வே ஏற்படும். பல்வேறு விஷயங்களை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை பயணம் செய்வது, அதிக நேரம் செலவழிக்க முடியாவிட்டாலும் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பது அழகானது, எனக்கு அது மிகவும் உதவுகிறது” …என்று சொல்லி இருக்கிறார்.

®Notes of a Dream: The Authorized Biography of AR Rahman”

Music composer AR Rahman contemplated suicide till he was 25

மொபைல் ஆப்-பில் படத்தை ரிலீஸ் செய்யும் ட்ரீம் சினிமாஸ்

மொபைல் ஆப்-பில் படத்தை ரிலீஸ் செய்யும் ட்ரீம் சினிமாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dream Cinemas plans to release their movies in Mobile Appதமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் எடுத்து அதை வெளியிட்டு போட்ட பணத்தை எடுப்பதற்குள் தயாரிப்பாளர்களின் நிலைமை அதோகதிதான்.

அதற்கான புதிய முயற்சிதான் இந்த Dream Cinemas செயலி, இந்த டிஜிட்டல் யுகத்தில் இனி மொபைல் தான் எல்லாம் என்பதை கருத்தில் கொண்டு நல்ல திரைப்படங்களை அவர்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக பிராண்டட் சட்டை தரப்படுகிறது.

இந்த செயலியின் முதல் திரைப்படமாக தக்கர் திரைப்படம் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. மேலும் இந்த செயலியில் மாத சந்தா குறைவு என்பதால் திரையரங்கிற்கு சென்று செலவு செய்யும் செலவு கம்மி என்கிறார்கள்.

இந்த Dream Cinemas செயலி ஆண்ட்ராய்டு மொபைல்களில் இப்பொழுது கிடைக்கிறது வெகு விரைவில் IOS லும் கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் குறைந்த செலவில் படம் எடுத்து திரையரங்கில் வெளியிட முடியாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்கள் படத்தை வெளியிட்டு தாங்கள் போட்ட பணத்தையும் எடுத்துவிடலாம் என்கிறது Dream Cinemas நிறுவனம்.

மேலும் Dream Cinemas Appஐ டவுன்லோட் செய்து Subscribe செய்வதன் மூலம் 499 மதிப்புள்ள பிராண்டட் சட்டையை இலவசமாக பெறுங்கள்.

Dream Cinemas plans to release their movies in Mobile App

App Download செய்ய இந்த linkஐ க்ளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.dreamcinemas.app

பிள்ளைன்னா தேஜஸ் போல இருக்கனும்.; குட்டீஸ்-க்கு ஜோதிகா அட்வைஸ்

பிள்ளைன்னா தேஜஸ் போல இருக்கனும்.; குட்டீஸ்-க்கு ஜோதிகா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My kids must learn from Tejas says Jyothika in Kaatrin Mozhi press meetஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் நவம்பர் 16ஆம் தேதி வெMளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஜோதிகா பேசியதாவது…

ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார்.

விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார்.

தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை.

எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான். பிறந்த நாள் என்றாலே SMS மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான்.

இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

என் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும் தான் நான் மாதிரியாக கருதுவேன். என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லா படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும்.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது.

இசையமைப்பாளர் A.H.காஷிப் பேசும்போது

சுமார் நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் இந்தத் துறைக்கு வந்துள்ளேன். தனி ஆல்பம் மூலம் பிரபலமானேன். அதைக் கேட்டுத்தான் இந்த வாய்ப்பை தனஞ்செயன் கொடுத்தார். பின்னணி இசை சில நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது. இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக வந்திருக்கிறது.

இயக்குநர் ராதாமோகன் பேசும்போது:-

‘காற்றின் மொழி’ படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள்.

அனைவரும் அவர்களுடைய முதல் படத்தில் நடித்தது போல நடித்துக் கொடுத்தார்கள். இப்படத்திற்கு A.H.காஷிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர். பார்த்திபன் நன்றாக வசனம் எழுதியிருக்கிறார்.

My kids must learn from Tejas says Jyothika in Kaatrin Mozhi press meet

இருட்டில் சுந்தர் சி.யுடன் இணைந்த ஷாக்ஷி பர்விந்தர்-தன்ஷிகா

இருட்டில் சுந்தர் சி.யுடன் இணைந்த ஷாக்ஷி பர்விந்தர்-தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanshika and Sakshi Parvinder team up with Sundar C for Iruttuஇருட்டு என்ற படத்தை இயக்குகிறார் இயக்குனர் VZ துரை. அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :-

‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கும்படியாக அமைந்திருக்கும்.

ஆனால், இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இருக்கும்.

மேலும், வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி கொண்டு வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும்.

பேய் இருக்கிறதா? இல்லையா? என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.

வித்தியாசமான படம் தோன்றிய விதத்தைப் பற்றிக் கூறும்போது

முதலில் நானும் சுந்தர்.சி-யும் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தவுடனேயே சுந்தர்.சி. நீங்கள் ஒரு திகில் படம் தான் இயக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், எனக்கு அது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி. உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது.

நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் நான் ‘இருட்டு’ இயக்க சம்மதித்தேன்.

அதன்பிறகு, எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அனைத்துப் படங்களுமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாகவும், முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கருத்து உதித்தது. அந்தக் கருத்து எல்லோருடைய வாழ்விலும் ஒன்றி போகும் விதமாகவும் இருக்கவே, சுந்தர்.சி-யிடம் கூறினேன்.

அவருக்கும் மிகவும் பிடித்து போகவே, ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதன்பின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

சுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார்.

இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது சினிமா வாழ்க்கையிலே இப்படமும், இப்படத்தில் வரும் தனது கதாபாத்திரமும் யாராலும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறியிருக்கிறார்.

முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், VTV கணேஷும் பயணிப்பார்கள்.

படத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படபிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பு – R.சுதர்சன், வசனம் – இந்திரா சௌந்திரராஜன், கலை – A.K.முத்து, புகைப்படம் – சாரதி, வடிவம் – PK விருமாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பு – APV மாறன்.

இவ்வாறு ‘இருட்டு’ படத்தைப் பற்றி இயக்குநர் துரை VZ கூறினார்.

Dhanshika and Sakshi Parvinder team up with Sundar C for Iruttu

Dhanshika and Sakshi Parvinder team up with Sundar C for Iruttu

More Articles
Follows