காதுகளிலும் இனிக்கும் *காற்றின் மொழி*.; சுரேஷ் காமாட்சி பாராட்டு

காதுகளிலும் இனிக்கும் *காற்றின் மொழி*.; சுரேஷ் காமாட்சி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Suresh Kamatchi praises Kaatrin Mozhi movie teamராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி திரைப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளதாவது…

“மொழி”யின் ஆக்ரமிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில் “காற்றின் மொழி”யை திருமதி ஜோதிகாவும்.. இயக்குநர் ராதா மோகனும் அழுத்தம் திருத்தமாய் பேசி நெஞ்சில் ஆணியடித்த மாதிரி பதிய வைத்திருக்கிறார்கள்.

பெண்களின் உரிமையை பெண்களே ரசிக்கும் வகையில் படம் பிரம்மாதப்படுத்துகிறது. இந்தி ரீமேக் என்றாலும் அதை தமிழ்படுத்தும்போது படுத்தி எடுத்துவிடுவார்கள். ஆனால் இது அழகுபடுத்தப்பட்டிருக்கிறது.

இன்னும் மெருகேறி நிற்கிறது ஜோதிகா அவர்களின் நடிப்பில்.. விதார்த் இயல்பான நடிகன். யதார்த்த நாயகன். வாழ்ந்திருக்கிறார். மிகப்பெரிய பலம் ஜோதிகா அவர்களும் விதார்த்தும்..

தேர்ந்தெடுத்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்திருக்கும் திரு தனஞ்செயனுக்கும் எனது வாழ்த்துகள்.

காற்றின் மொழி எல்லோர் காதுகளிலும் இனிக்கட்டும்.”

என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Producer Suresh Kamatchi praises Kaatrin Mozhi movie team

கஜா-வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி ஆறுதல்; உதவியவர்களுக்கு பாராட்டு

கஜா-வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி ஆறுதல்; உதவியவர்களுக்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis message about Gaja Cyclone and Rajini Makkal Mandram rescue activitiesகடந்த 5 நாட்களாகவே தமிழகத்தை ஒரு சொல் ஆட்டிப் படைத்தது என்றால் அது கஜா தான்.

புயல் மையம் கொண்டுள்ளது. 800 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று இரவு வரும். நாளை வரும்.

வலுவடைந்துள்ளது. வலுவிழந்துவிட்டது என பல்வேறு வானிலை தகவல்கள் வந்தன.

இதனால் தமிழக மாணவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை.

இதனால் புயல் வருமா? வராதா? என கிண்டல் செய்து பல கிரியேட்டர்கள் மீம்ஸ் செய்து வெளியிட்டனர். மீடியாக்களையும் கலாய்த்தனர்.

இந்நிலையில் இன்று நவம்பர் 16ஆம் அதிகாலை 1 மணியளவில் காரைக்கால், நாகப்பட்டினம் முதல் வேதாரண்யம், புதுக்கோட்டை வரை தன் கோரத் தாண்டவத்தை காட்டியது கஜா.

30க்கும் மேற்ப்ட்டோர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மக்கள் பால், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் அந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கஜா புயல் குறித்து கூறியுள்ளதாவது…

Rajinikanth‏Verified account @rajinikanth
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.” என ரஜினி தெரிவித்துள்ளார்.

Rajinis message about Gaja Cyclone and Rajini Makkal Mandram rescue activities

கஜா புயல் முன்னெச்சரிக்கை.; முதன்முறையாக அரசுக்கு கமல் பாராட்டு

கஜா புயல் முன்னெச்சரிக்கை.; முதன்முறையாக அரசுக்கு கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First time Kamal praises TN Govt for Gaja cyclone precaution stepsகண்ணா … நான்வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்… என கடந்த 25 ஆண்டுகளாக தன் அரசியல் பிரவேசம் குறித்து பேசி வந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் அரசியல் ஆசை இல்லை என பலமுறை சொன்ன, கமல்ஹாசன் திடீரென ஜெயலலிதா மறைவிற்கு பின் அரசியல் களத்தில் குதித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படும் தமிழக அரசின் செயல்பாடு சரியில்லை என்பதே பெரிய குற்றச்சாட்டாக இருந்தது.

பல சந்தர்ப்பங்களில் கேரள முதல்வரை பாராட்டியும் தமிழக அரசை திட்டி தீர்த்தார்.

இந்நிலையில் முதன்முறையாக தமிழக அரசை பாராட்டியுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பாராட்டு பதிவில்…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் @maiamofficial களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

First time Kamal praises TN Govt for Gaja cyclone precaution steps

டபுள் மீனிங் டயலாக்ஸில் உருவாகும் *அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்*

டபுள் மீனிங் டயலாக்ஸில் உருவாகும் *அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lee varunலீ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் R.விக்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் லீவருண் நடிக்கும் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்” படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

பூங்காவை மையமாக வைத்து ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான காதல் கதை, வாழ்வியல் எதார்த்ததுடனும், இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய மாறுபட்ட படைப்பாக உருவாக இருப்பதாகவும் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என இயக்குனர் விக்கி கூறுகிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரத்னகுமார், இசை ஜெய்கிரிஷ், படத்தொகுப்பு ரமேஷ்பாபு மற்றும் லீ வருண் தயாரிப்பில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்கள் தொடர்பு : தியாகராஜன்.P

விக்ரம் முகச்சாயல் கொண்ட இளைஞரா நீங்கள்..? நடிக்க ஒரு சான்ஸ்

விக்ரம் முகச்சாயல் கொண்ட இளைஞரா நீங்கள்..? நடிக்க ஒரு சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiyaan vikram‘என்னு நிண்டே மொய்தீன்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்.

இவர் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள பிரமாண்டமான புராணக் காலத்து படம் ‘மஹாவீர் கர்ணா’.

சுமார் 3௦௦ கோடி பட்ஜெட்டில் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் மகாபாரத பின்னணியில் உருவாக்கவுள்ளனர்.

இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார்.

இதில் இளம் வயது கர்ணன் கேரக்டர் ஒன்றும் இடம்பெறுகிறது. அதில் நடிப்பதற்கு விக்ரம்போல சாயல் கொண்ட இளைஞரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.

நீங்கள் விக்ரம் போல முகச்சாயல் இருந்தால் ஆடிசன் இண்டர்வியூக்கு செல்லலாமே பாஸ்

அட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.?

அட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and rashmikaசர்கார் படத்தை அடுத்த விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தை அட்லி இயக்கவுள்ளார்

ஏஆர். ரஹ்மான் இசையைமக்க ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.

ஆனால் தற்போது தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் உள்பட சில படங்களில் நடித்தவர் இந்த ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன்

ஒளிப்பதிவு ஜிகே. விஷ்னு
எடிட்டிங் ரூபன் எல். ஆண்டனி
கலை இயக்குனர் முத்துராஜ்
சண்டை அனல் அரசு
பாடல்கள் விவேக்

ஆகியோரும் பணிபுரிய உள்ளனர்.

More Articles
Follows