சர்வதேச விருதுகளை வென்ற ‘கட்டில்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சர்வதேச விருதுகளை வென்ற ‘கட்டில்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கட்டில்’.

இந்த படம் நவம்பர் 24 அன்று மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

கட்டில்

வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.

ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளை பெற்றுள்ளதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறுகிறார்.

கட்டில்

Kattil movie release date updates

JUST IN நயன்தாராவை கடத்த தெரியாதா.? பத்திரிகையாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலடி

JUST IN நயன்தாராவை கடத்த தெரியாதா.? பத்திரிகையாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். காவேரி பிரச்சனை குறித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கேட்கப்பட்டது. அவர் பதில் அளிக்கையில்…

“இந்தியா என்ற கூட்டணியில் காவேரி விவகாரத்தில் கட்சிகள் அடித்துக் கொள்கிறது என பிரதமர் பொறுப்பற்ற பதிலை சொல்லி இருக்கிறார். காவிரி நீரை பெற்று தருவது ஒரு பிரதமரின் கடமை ஆனால் அதை அவர் செய்யவில்லை.

வீரப்பன் வாழ்ந்தபோது காடு அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அவர் சந்தன மரத்தை கடத்தி இருக்கலாம். யானைகளை வெட்டி தந்தங்களை எடுத்து விற்று இருக்கலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் அவர் யாருக்கு விற்றார்.? வெளியில் உள்ளவர்களுக்கு தானே விற்றார். அந்த கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

அவர் சந்தன மரங்களை விற்று பங்களா கட்டி கொண்டாரா ? அவர் காட்டு வளத்தை அழித்தாரா? ராஜகுமாரை / நாகப்பாவை கடத்திய அவருக்கு நயன்தாரா கடத்த தெரியாதா? அது தமிழர் மாண்பு. காவிரி நீரை பெற்று தர அவர் முயற்சிகள் மேற்கொண்டார்.

எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் தனித்து நிற்போம். எந்த கட்சியிடனும் கூட்டணி கிடையாது. பிரதமருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

இங்கே மக்கள் பிரச்சனைக்கு ஒருவன் போராடி முன்னிலை வகித்தால் மக்கள் அவருக்கு ஓட்டளிப்பார்கள். எனவே மக்கள் பிரச்சனைக்காக போராடுவோம்.” என்றார்.

Seeman press meet regarding Cauvery Issue

VR07 சூட்டிங் அப்டேட் : ‘ஜெயிலர்’ நடிகர்களுடன் இணைந்த அஜித் ரீல் மகள்

VR07 சூட்டிங் அப்டேட் : ‘ஜெயிலர்’ நடிகர்களுடன் இணைந்த அஜித் ரீல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள #VR07 திரைப்படம் சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.

வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

 VR07

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் வசந்த் ரவி மற்றும் சுனில் நடித்திருந்தனர். ‘என்னை அறிந்தால்’ & ‘விசுவாசம்’ படங்களில் அஜித்தின் மகளாக அனிகா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

VR07 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 05, 2023 அன்று தொடங்கியது.

 VR07

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 11, 2023 அன்று அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. #VR07 அனைவராலும் விரும்பப்படும் ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வரவிருக்கிறது என்பதையும், படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், டிரைலர் மற்றும் இதர அப்டேட்கள் இன்னும் சில நாட்களில் தயாரிப்புக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

 VR07

Vasanth ravi and Sunil starrer VR07 Shooting Wrapped

நானி – மிருணாள் இணைந்துள்ள ‘ஹாய் நான்னா’ பட டீசர் & ரிலீஸ் அப்டேட்

நானி – மிருணாள் இணைந்துள்ள ‘ஹாய் நான்னா’ பட டீசர் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹாய் நான்னா’.

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.

வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார்.

இப்படம் அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகி உள்ளது

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மேலும், ‘ஹாய் நான்னா’ திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாய் நான்னா

nani and mrunal thakur starred ‘Hi Nanna’ teaser and movie release update

ரஜினி – விஜய் பன்ச் டயலாக்குகளை பகிர்ந்து அதிர வைத்த கூகுள்

ரஜினி – விஜய் பன்ச் டயலாக்குகளை பகிர்ந்து அதிர வைத்த கூகுள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், கூகுள் (Google) நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

 விஜய்

அதில். ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஐயம் வெயிட்டிங்’ (Iam Waiting) என்ற ‘துப்பாக்கி’ பட பன்ச் டயலாக்கு பதிவிட்டுள்ளது.

மேலும், ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினி புகைப்படத்தை பகிர்ந்து (“நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவ சொன்ன மாதிரி”) என்ற ‘பாஷா’ பட பன்ச் டயலாக்கு பதிவிட்டுள்ளது.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி

rajini and vijay punch dialogue trending in social media

‘லியோ’ வரட்டும்.. ‘தலைவர் 171’ அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

‘லியோ’ வரட்டும்.. ‘தலைவர் 171’ அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில், ‘லியோ’ படத்திற்கு 19 அக்டோபர் 2023 முதல் 24 அக்டோபர் 2023 தேதிகள் வரை காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், ‘லியோ’ படம் வெற்றி பெறுவதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பாத யாத்திரையாக திருப்பதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதன் பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், ‘லியோ’ படம் நன்றாக வந்துள்ளதாகவும், ‘லியோ’ படம் வெளியான பிறகே ரஜினியின் 171-வது படத்திற்கு ஸ்கிரிப்ட்களை தயார் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj visit Tirumala ahead of Leo’s release

More Articles
Follows