தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருமணத்திற்குப் பிறகு தன் வயதிற்கு ஏற்ப நல்ல கேரக்டர் உள்ள கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.
36 வயதினிலே, தம்பி, ஜாக்பாட், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜோதிகா.
மம்மூட்டியுடன் இணைந்து ‛காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜோ பேபி என்பவர் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டீசர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த டீசரை பார்த்து பாராட்டி இருக்கிறார் நடிகர் சூர்யா. அவரின் பதிவில்…
கடினமான கதையை எளிதாக மலையாள சினிமா துறையினர் கொடுப்பதை பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது.
‘காதல் தி கோர்’ படத்தை நவம்பர் 23ம் தேதியில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். மம்முட்டி – ஜோதிகா – ஜோ பேபி குழுவிற்கு வாழ்த்துக்கள்’ என்று சூர்யா பதிவிட்டுள்ளார்.
Suriya appreciated Kadhal and Malayalam movie making