காற்றின் மொழி நாயகி ஜோதிகாவுக்கு சிம்பு-வித்யாபாலன் வாழ்த்து

jyothikaராதா மோகன் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம் நாளை ரிலீசாகவுள்ளது.

இதில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, யோகி பாபு நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வித்யா பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்தியில் ‘தும்ஹரி சூளு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சிம்பு கூறியுள்ளதாவது…

நான் காற்றின் மொழி படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளேன். ஜோதிகா மேடத்திற்காக நான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் நன்றாக வந்துள்ளது. படத்தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும் நன்றி. என சிம்பு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Overall Rating : Not available

Related News

தனஞ்செயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் திரைக்கு…
...Read More
ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில்…
...Read More

Latest Post