தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் 2024 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’.
இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் நடந்தது.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது….
“இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.
நடிகர் ஷரத்,…
“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன். சிவா சாரின் ‘மாவீரன்’ பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் நிறைய ஆக்ஷன் உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
எடிட்டர் ரூபன்…
“’அயலான்’ படம் இன்னும் முடியவில்லை. வேலை போய்க்கொண்டுதான் இருக்கிறது. சினிமாவில் இன்று நிறைய ஜானர்ஸ் வருகிறது. இந்த ஜானர் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும்.
அப்படிதான், ரவி செய்துள்ளார். அவரின் பொறுமைக்கு மிகப்பெரிய நன்றியும் மரியாதையும். இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்த சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நன்றி. இந்த டீசர் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடிட் செய்தது. பொறுமையாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றி.
ஹாலிவுட் இயக்குநர்கள் போல ரவியும் எட்டு வருடமாக இந்தப் படம் செய்துள்ளார். படம் இப்போதும் புதிதாக உள்ளது. எல்லோருக்கும் நன்றி”.
We have been waiting for this moment says Balasaravanan