காலாவை வெளியிடும் விநியோகஸ்தர் ஆபிஸை அடித்து நொறுக்கிய கும்பல்

காலாவை வெளியிடும் விநியோகஸ்தர் ஆபிஸை அடித்து நொறுக்கிய கும்பல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini in kaalaரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியபோது,

‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.

காவிரி மேலாண்மை பிரச்னையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.” என ரஜினி பேசினார்.

காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்ப்போது இப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் காலா படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடி உள்ளனர்.

அங்கிருந்த காலா பேனர்களையும் அவர்கள் கிழித்துள்ளனர்.

இந்த படங்கள் வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

முக்கியமான 2 தியேட்டர்களில் காலா ரிலீஸ் இல்லை; உண்மையான காரணம் இதுதான்

முக்கியமான 2 தியேட்டர்களில் காலா ரிலீஸ் இல்லை; உண்மையான காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Rajinikanthரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் துபாய் மற்றும் சில நாடுகளில் பிரிமீயர் காட்சிகள் தொடங்கவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானவுடன் காலா படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க சொன்னார்கள். அதனால்தான் காலா படத்தை வாங்கவில்லை என தியேட்டர் நிர்வாகம் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தான் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்

1000 கோடி இருக்கு; இனி நடிப்பேனா தெரியல.?; சிம்பு பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

1000 கோடி இருக்கு; இனி நடிப்பேனா தெரியல.?; சிம்பு பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont know whether i will act hereafter says Simbuமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகிய 3 ஹீரோக்களுடன் நடித்துள்ளார் சிம்பு.

அண்மையில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்.

சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

இந்த செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க, திடீரென சிம்பு நடிக்கவுள்ள 4 பட செய்திகளை பார்த்தோம்.

சிம்பு 34 – `பைரவா’, `வீரம்’ முதலிய படங்களை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறார்.

சிம்பு 35 – இங்கிலீஷ் படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார்.

சிம்பு 36- லைகா தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் `விண்ணைத்தாண்டி வருவேன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

சிம்பு 37- கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைகிறார்.

இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் சிம்பு பேசிய வீடியோ ஒன்று வெளியானது.

அதில் இனி சினிமாவில் நடிப்பேனா இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன்.

இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன்.

ஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார்.

அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.

நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது.

ரூபாய் 1000 கோடி இருக்கு. நல்லா வசதியா வாழலாம். எனக்கு வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன்.

தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை’.

எனக்கு எல்லாமே என் ரசிகர்கள்தான் என உருக்கமாக பேசியுள்ளார்.

தற்போது 4 படங்களை கமிட்டாகியுள்ள சிம்பு ஏன் இப்படி பேசினார் என்பதுதான் புரியவில்லை.

I dont know whether i will act hereafter says Simbu

Breaking: காலா கதை திருட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Breaking: காலா கதை திருட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Supreme Court rejected case against Rajinis Kaala movie story theft issueசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் நாளை (7-ந் தேதி) வெளியாகிறது.

உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளதால் படத்துக்கு வரவேற்பு எழுந்துள்ளது.

ஆனால் காவிரி விவகாரத்தில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், “காலா என்ற கரிகாலன் படத்தின் கதையும், தலைப்பும் என்னுடையது. எனவே ‘காலா’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜீன் 6) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் ஏற்கெனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது என்பது இங்கே ஹைலைட்.

Supreme Court rejected case against Rajinis Kaala movie story theft issue

Exclusive : கர்நாடகாவில் காலா கன்பார்ம்; போலீஸ் பாதுகாப்புடன் 130 தியேட்டர்களில் ரிலீஸ்

Exclusive : கர்நாடகாவில் காலா கன்பார்ம்; போலீஸ் பாதுகாப்புடன் 130 தியேட்டர்களில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Official Kaala movie releasing in 130 theatres in Karnatakaரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் நாளை ஜீன் 7 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இதனிடையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இந்நிலையில் நேற்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு உள்ளது.

இதற்காக காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல என்று பேசினார்.

மேலும் காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.

Official Kaala movie releasing in 130 theatres in Karnataka

Big News: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற விஜய்யிடம் ரஜினி கத்துக்கனும்.. – அமீர்

Big News: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற விஜய்யிடம் ரஜினி கத்துக்கனும்.. – அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth must learn from Vijay says Director Ameerதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர்களில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இவர்கள் தூத்துக்குடிக்கு சென்ற போது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். வரவேற்பும் அதிகளவில் கொடுக்கப்பட்டது.

மேலும் ரஜினி சென்றபோது விமான நிலையத்தில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை யாருக்கும் தெரிவிக்காமல் நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். 1 லட்சம் நிதியுதவியும் அளித்தார்.

போட்டோக்களை தவிர்க்க கூறினார். அப்படியிருந்தும் அவரின் உத்தரவை மீறி படங்கள் வெளியானது.

தற்போது விஜய்யின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகீன்றனர்.

இந்நிலையில், “பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவது எப்படியென்று விஜய்யிடம் ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்!” என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

Rajinikanth must learn from Vijay says Director Ameer

More Articles
Follows