காலா இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குதிரை வால்

Kaala director Ranjith next movie titled Kuthirai Vaalசூப்பர் ஸ்டாரின் கால்ஷீட்டுக்காக பலர் பல வருடங்களாக காத்திருக்க, கபாலி மற்றும் காலா என ரஜினியின் அடுத்தடுத்த படங்களை இயக்கி இந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் பா. ரஞ்சித்.

இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார்.

தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவையும் தயாரித்து வருகிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதன் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் இவர்.

இப்படத்திற்கு குதிரை வால் என்ற பெயரையும் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இது வழக்கமான கதைக்களமாக இல்லாமல் 5 கதைகளை 5 இயக்குநர்களைக் கொண்டு இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதில் ஒரு கதையை மட்டும் ரஞ்சித்தே இயக்குவார் என கூறப்படுகிறது.

Kaala director Ranjith next movie titled Kuthirai Vaal

Overall Rating : Not available

Latest Post